எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Wednesday, June 15, 2011

யாழ் - வற்றாப்பளை. ஒரு வரண்ட பயணம் (புகைப்பட தொகுப்பு)

7 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் வாசகர்களே,




I’m Celebrating World Bloggers’ Day 2011

Theme: The Roles of Bloggers




பதிவர்களுக்கு வாழ்த்துகள்..

மீண்டும் பதிவுலகில் சந்திப்பதில் மகிழ்ச்சி.. ஆனால் அந்த மகிழ்ச்சி இப் பதிவில் நிச்சயம் இருக்காது. ஏனெனில் சிதைந்த மண்ணின் கதை பற்றிய புகைப்பட தொகுப்பே இன்றைய என் பதிவு.

கடந்த 13.06.2011 அன்று முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்த பொங்கல்,பூஜை நிகழ்வுகளுக்காக நானும் என் நண்பர்களும் திங்களன்று யாழில் இருந்து முல்லைத்தீவு புறப்பட்டோம். A9 வீதி ஊடாக மாங்குளம் வரை சென்று பின் முல்லைத்தீவு சென்றோம்.

வெள்ளையர்களிடம் இருந்து மக்களையும் மண்ணையும் காப்பாற்றி நின்ற கோவில் அல்லவா அது..

ஆலயத்தில் இரவு முழுவதும் தங்கி மறுநாள் (14.06.2011) காலையில் மீண்டும் யாழ் திரும்பினோம் புதுக்குடியிருப்பு வீதி வழியாக..
இந்த வீதியுடனான பயணம் தந்த வேதனைகள் சொல்லிலடங்காதவை.. நாம் அன்று பார்த்த இடம்தானா இது என்று கேட்கும் அளவிற்கு இருந்தன அவற்றின் நிலை. இவ்வேதனைகளை வார்த்தையில் சொல்வதை விட பார்த்து உணர்வது சிறந்தது.

முறிகண்டியில் இலங்கைப் பாடகர் திரு.ரகுநாதன் அவர்களுடன் எதிர்பாராத சந்திப்பு.

மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில்..

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஒட்டுசுட்டான் சந்தியில் வீதி விளக்கப்படம்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்


ஊற்றாங்கரை பிள்ளையார் கோவில்(தண்ணீர் ஊற்றுப் பிள்ளையார்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய காட்சிகள்.

ஆலய முகப்பு

நந்திக்கடல் (நேரம் மாலை 07.00)

                           
விமானப்படையினர் மேற்கொண்ட பூக்கள் சொரியும் நிகழ்வின் காணொளி..


நந்திக்கடலில் சூரியோதயம் (நேரம் காலை 06.20)


புதுக்குடியிருப்பு - அநாதைகளாக இங்கு இவைகளும் வெளியில் மக்களும்

செல்வந்த பூமியின் இன்றைய நிலை.



குண்டுகளால் எங்களை எதுவும் செய்ய முடியாது..இது நம்ம ஏரியா..


படைகளின் சேதமடைந்த சொத்துகள்


குறிப்பு :- இது ஒன்றும் அரசியல் ரீதியில் அமைந்த பதிவு அல்ல.. ஒரு யுத்தம் நடந்த பூமியின் உண்மைத் தோற்றத்தை உலகறிய செய்யும் முயற்சி மாத்திரமே.

படங்களை பெரிதாக்கி பார்ப்பதற்கு அவற்றை தனித்தனியே க்ளிக் செய்து கொள்ளுங்கள்.


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பதிவிலொரு பாடல்.
இன்றைய பதிவில் பகிரவுள்ள பாடல் 1970ல் வெளிவந்த “என் அண்ணன்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலொன்றாகும்.
மக்கள் திலகம் M.G.R அவர்கள் நடித்த இத்திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனின் வரிகளுக்கு K.V.மகாதேவன் அவர்கள் இசையமைக்க T.M.சௌந்தரராஜன் பாடிய “கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே..” என்ற பாடலை இப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்பாடல் பற்றி என் முகப்புத்தகத்தில்..,

சரி நண்பர்களே நாம் மீண்டும் சந்திப்போம் மற்றொரு பதிவில்..,
நன்றி
என்றென்றும் அன்புடன்


7 Responses so far

  1. எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
    மேலும் விபரம் அறியவும்....
    இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
    எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

  2. நினைவுகளை மீட்டிய பதிவு ஒன்று மிக்க நன்றீடா தம்பி...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  3. Mathuran says:

    அருமையான தொகுப்பு
    புகைப்படங்கள் வேதனையை தூண்டுகிறது..

    யாராவது பதில் சொல்லுங்களேன்???

  4. Unknown says:

    இதை சரியாக இரு வருடங்களுக்கு முதல் சென்று பாத்திருக்க வேண்டும். ஏன் உங்களின் புகைபடங்களை திருட வேண்டும்?

  5. anuthinan says:

    எழுதுக்களை விட புகைபடங்கள் நிறையவே கதை சொல்லுகிறது நண்பா!!!

    நன்றிகள் பதிவுக்கு

  6. test says:

    அருமை ஜனகன்! எனக்கு முறிகண்டி தவிர வேறு இடங்கள் தெரியாது! உங்கள் புகைப்படங்களூடாகப் பார்த்தேன் நன்றி!

  7. @உலக சினிமா ரசிகன் said...
    தங்கள் தளத்திற்கும் வந்தேன்...நன்றிகள்
    ...................................................................................

    @ம.தி.சுதா♔ said...
    ம்ம்ம...நன்றி அண்ணா
    ....................................................................................

    @மதுரன் said...
    நன்றிகள்..
    நிச்சயமாக தமிழர் வாழ்வே அப்படித்தானே..
    ....................................................................................

    @M.Shanmugan said...
    நிச்சயமாக உண்மைதான்..
    நன்றிகள் தம்பி
    ....................................................................................

    @Anuthinan S said...
    நன்றி தோழா..
    .....................................................................................

    @ஜீ... said...
    நன்றிகள் சகோதரா..

Leave a Reply

Photobucket