எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Wednesday, November 10, 2010

என் முதல் பதிப்பு.

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்


ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது தனியொருவனின் சொந்த உருவாக்கமாகதனியொருவனிடமிருந்து விளைந்த விளைவாகஇல்லை. சமூக கூட்டு மனதின் ஒரு கூட்டுச் செயல்பாடாகவே விளங்குகின்றது. இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும் அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.


மனிதருடைய மொழிகளில்,ஒலியும், சைகைகளும் குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
மொழியும் நாமும்-
இவ்வுலகை கண்கள் வழியாகவும் காதுகள் வழியாகவும் அறிந்து வைத்திருக்கிறோம். உயிரினங்கள் அனைத்துக்கும் கண்கள் மிக ஆதாரமான புலனாய் இருக்கின்றன. தன்னையும் தனதல்லாத பிற யாவற்றையும் பார்த்து, தனது இருப்பை அறிந்து கொள்ளவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ஆன அடிப்படையான ஊடகமாய் இருந்து வருகிறது. கேட்பதும் பார்ப்பதும்தான் நமது உலக அனுபவங்களை உருவாக்கித் தந்திருக்கின்றன. இரண்டிற்கும் இடையில் ஓர் இயைபு இருக்கிறது. மொழிதான் எண்ணங்களை - சிந்தனைகளை - வடிவமைத்து எல்லாவற்றுக்குமிடையில் ஓர் தொடர்புறுத்தலைச் சாத்தியமாக்குகிறது என்றால் மொழிச் செயல்பாட்டில்பரிவர்த்தனையில் - புலன்களின் பங்கு என்ன என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. நிலவைப் பார்த்திருந்தோம்; அருவியைப் பார்த்திருந்தோம்; அதன் சலசலக்கும் ஓசையைக் கேட்டிருந்தோம். விலங்குகள், பறவைகள் யாவற்றையும் பார்க்கிறோம். அவற்றின் சப்தங்களைக் கேட்டிருக்கிறோம். சப்தங்களை வைத்தே நாவை அசைக்கப் பழகியிருக்கிறோம்.

காட்சியும் ஓசையும்தான் மொழிக்கு ஆதாரம். குறிப்பாக, கண்களை மொழி உருவாக்கத்தின் அங்கமாய், மொழிக்குள் செயல்படும் ஒரு ஆதாரமான மொழி உறுப்பாய்ப் புரிந்து கொள்ளலாம். மனிதர்கள் மட்டுமன்றி பிற உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் காட்சி வார்த்தைக்கு முந்தையது; வார்த்தைக்கு வித்திட்டது. நாநுனி, நெஞ்சு, பல்முனை, அண்ணம் , குரல்வளை ஆகிய இடங்களில் எதிரொலிக்கும் வார்த்தைகள் முதலில் தோன்றியது காதுகளிலிருந்தும் கண்களிலிருந்தும்தான். காதுகளும் கண்களுமே ஆதாரமான மொழிப்புலன்கள்.

இப்போது நாம் இந்த வாசகத்தைப் படிக்கிறோம். ''நிலவுக்குக் கீழ் இரகசியங்களற்ற கானகத்தின் ஓசை''. நிலவு, கானகம் ஆகியவை ஏற்கனவே நமது மூளையில் உறைந்திருக்கும் காட்சிகள். கானகத்தின் ஓசை என்பது பல விதங்களில் நாம் கேட்டறிந்த ஒன்று. இவற்றை நாம் நமது பழைய நினைவிலிருந்துதான் மீட்டெடுக்கிறோம். இங்கு மொழி என்பது நம்மிடம் கடந்துவிட்ட ஒரு காலமாக வினையாற்றுகிறது. ஒரு நினைவாக, ஞாபகமாகவே மொழி இருக்கிறது. மொழி என்பது முன்பே நிகழ்ந்துவிட்ட ஒன்று. ஆகவே மொழி என்பது ஓசை மற்றும் காட்சிகளின் பழைய அனுபவம் ஆகும்.

என் முதல் பதிவையே நீண்டதாக வெளியிட்டால் இவன் என்ன பெரிய கட்டுரையாளனா? என்று நீங்கள் தவறாக எண்ணி விடுவீர்கள் என பயந்து இப் பதிவை இரு பகுதிகளாக வெளியிட எண்ணியுள்ளேன்……
ஆகவே இப் பகுதி உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்துகளை மனந்திறந்து பதிவு செய்யுங்களேன்…!!!
மொழி

14 Responses so far

 1. ஃஃஃஃஃகாட்சிகள். கானகத்தின் ஓசை என்பது பல விதங்களில் நாம் கேட்டறிந்த ஒன்று. இவற்றை நாம் நமது பழைய நினைவிலிருந்துதான் மீட்டெடுக்கிறோம். இங்கு மொழி என்பது நம்மிடம் கடந்துவிட்ட ஒரு காலமாக வினையாற்றுகிறது.ஃஃஃஃஃ
  உண்மை தான்.. அருமையாக இருக்கிறது.. தொடருங்கள் அடுத்த பதிவு எப்போது காத்திருக்கிறேன்.

 2. நன்றி அண்ணா..! என்னை முதன்முதலில் வரவேற்றமைக்கு......
  மீண்டும் விரைவில் 2ம் பாகத்துடன் சந்திப்பேன்....

 3. பதிவுலகிற்கு வரவேற்கிறேன்... நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள், வேர்டு வேரிபிகேசனை எடுத்து விடுங்கள், இல்லாவிடின் பின்னூட்டங்கள் குறைந்து விடும்...

 4. பதிவுலகத்துக்கு வரவேற்கின்றோம் நண்பா
  அருமையான பகிர்வு

 5. sathees says:

  என்ன செய்ய நண்பரே நீங்கள் எழுதிய பதிவையும் எழுதப்போகும் 2ம் பகுதியையும் நான் ஏற்கனவே படித்து விட்டேன்.....
  http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/06/blog-post_17.html

 6. பதிவுலகத்துக்கு வரவேற்கின்றோம் நண்பா
  All the Best :)

 7. யோ வொய்ஸ் (யோகா),
  (பதிவுலகிற்கு வரவேற்கிறேன்...):-நன்றி அண்ணா...

  Jeevithan,
  (keep it up..):- thanks friend..

  Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன்,
  (varuga varuga...
  thodarha....

  arumaiyaana aarambam...):- thanks sister

  டிலீப்-
  (பதிவுலகத்துக்கு வரவேற்கின்றோம் நண்பா
  அருமையான பகிர்வு):-நன்றி நண்பா...

  sathees :-இதோ என் 2ம் பாகம்..இதுவும் அப்படிதானா??

  Harini Nathan-
  பதிவுலகத்துக்கு வரவேற்கின்றோம் நண்பா
  All the Best :):- நன்றி நண்பி....

 8. //sathees said...
  என்ன செய்ய நண்பரே நீங்கள் எழுதிய பதிவையும் எழுதப்போகும் 2ம் பகுதியையும் நான் ஏற்கனவே படித்து விட்டேன்.....
  http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/06/blog-post_17.html//

  சதீஸ் நீங்கள் படித்தால் மட்டும் போதுமா மற்றவர்கள் படிக்க வேண்டாமா??
  ஜனகனின் முதல் பதிவு .அவரை ஊக்கப்படுத்துக்கள் மாறாக தளர்வடைய செய்யதீர்கள்,
  மற்றவர்கள் எல்லாரும் வாழ்த்துகிறார்கள்.
  நீங்கள்??

 9. சிறப்பான ஜனனம் ஜனகன்.
  உங்கள் எண்ணங்கள் உலகெங்கும் தென்றலாய் தொடர்ந்து வீச வாழ்த்துக்கள்...

 10. Netபணம்:-
  (சிறப்பான ஜனனம் ஜனகன்.
  உங்கள் எண்ணங்கள் உலகெங்கும் தென்றலாய் தொடர்ந்து வீச வாழ்த்துக்கள்..):- வாழ்த்துக்கு நன்றிகள்.....

  டிலீப் :- விடுங்க டிலீப்...எல்லாம் நட்புதானே....

 11. முதல் பதிவிலேயே முத்திரை பதித்து விட்டீர்கள்! கட்டுரை நீண்டதாக இருத்தல் தவறில்லை .... முழுக்கட்டுரையையும் எழுதி பின்னர் பகுதிகளாக பதிவிடலாம்...

 12. @க.சுரேந்திரகுமார்:-
  நன்றி அண்ணா(ஆசான்-IT)
  கண்டிப்பாக உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கின்றேன்......

Leave a Reply