எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Sunday, November 14, 2010

இலக்கணத்திற்கோர் தொல்காப்பியர்.

9 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இன்றைய நாகரீக வாழ்க்கைக்கு தமிழர்களையும்,பிற நாட்டவர்களையும் அழைத்து வருவதற்கு வித்திட்ட ஒரே தமிழறிஞர் தொல்காப்பியர் மட்டுமே..இவர் இலக்கணம் என்னும் தேரின் அச்சாணியாக விளங்குகின்றார்.
வால்மிகி,வியாசர் போன்ற அறிஞர்கள் வட இந்தியாவில் இருந்த போது தென் இந்திய  நாட்டில் (அக்காலத்தில் மன்னராட்சி இ்ருந்தபடியால் இப்படி “நாடு“ என்று சொல்வதில் தவறில்லை என நினைக்கின்றேன்) இருந்த அறிஞரே இந்த தொல்காப்பியர் ஆவார். இருந்தும் இவர் பற்றிய வரலாறு சரியான முறையில் கிடைக்காத காரணத்தால் அவரின் நுால் மூலம் அவரின் காலம்,வரலாறு,நிலை என்பன அறியப்படுகிறது.
அதாவது, சாக்ரட்டீஸ் போன்ற தத்தவஞானியோ சித்தர்களை போன்ற சித்தார்ந்த வாதியோ அல்லது பட்டினத்தடியார் போல முற்றும் துறந்த துறவியுமில்லை...! அப்படியானால் இவர் யார்? எவ்வகை கொள்கையாளர்? என்ற கேள்விகள் நம்மிடையே எழுவது சகஜம்தான்.
               பிளற்றோவின் சிந்தனையையும்,அரிஸ்ரோட்டலின் உயிரியல் விளக்கத்தையும், மார்டின் லுதர் கிங் இன் சீர்திருத்த கருத்தையும் அன்பையும் குறைவின்றி பெற்றிருந்த அருட்குண குன்றுதான் இப் பதிவின் நாயகன் தொல்காப்பியர் எனலாம். இவர் தமிழ் மொழி வரலாற்றை முற்றும் கற்றவர்.. இதை இவரின் “தொல்காப்பியம்” எனும் இலக்கண இலக்கிய (நுால்) சோலையில் மணம் வீசும் பல்வகைப்பட்ட மலர்களின் நறுமணம் நம்மை மயக்குவதன் ஊடாக உணரலாம்.
               சரி, இனி இவரின் வரலாற்றை பார்ப்போம்...
இவரின் வரலாற்றை பார்க்கும் போது இவரும் “பொய்யா மொழி புலவர்” வள்ளுவரும் ஒன்றுபட்டவர்கள்...அதாவது, இயற்பெயர் இருவருக்கும் வரலாற்று பதிவேட்டில் இல்லை. எனினும் இவர்களுக்கு குடிப்பெயர் உள்ளது. தொல்காப்பியர் பண்பால் மேம்பட்ட குடியில் பிறந்தவர். அது “காப்பியங்குடி” எனப்பட்டது. இக்குடி இருந்ததை சிலப்பதிகாரம் உறுதிப்படுத்துகிறது.
    “காப்பிய தொல்குடி கவின் பெற வளர்ந்து.....”
எனும் அடி மூலம் இது தெளிவாகின்றது.
இவரது வாழ்க்கை காலம் பற்றி நோக்குவோமாயின், அது பல கருத்துக்களை கொண்டும் சிறந்த சான்றுகளை கொண்டும் ஒரு சுவாரஸ்யமான பகுதியாக இருக்கின்றது.
         தொல்காப்பியரிடம் பயின்ற “பனம் பாரன்” எனும் அறிஞன் தொல்காப்பியத்திற்கு முகவுரை(பாயிரம்) எழுதும் பொழுது,
     “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியம்....”
என கூறுகின்றான். இது கி.மு 305 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். எனவே தொல்காப்பியர் அக் காலத்தில் வாழ்ந்திருக்க கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (தொல்காப்பிய வரலாறு)
          மற்றுமொரு சான்றை பார்ப்போமாயின்,
இவர் வாழ்ந்த இடம் கபாடபுரம் ஆகும். இங்கு இரண்டாவது தமிழ் சங்கம் இருந்தது. தொல்காப்பியர் இதன் உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார். அதேவேளை கபாடபுரத்தை வால்மிகி இராமாயணம் சிறப்பாக கூறுகின்றது. எனவே வால்மிகி வாழ்ந்த காலத்தில் இவரும் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் தொல்காப்பியர் இற்றைக்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் வளர்த்த தமிழகத்தில் வாழ்ந்தவர் என கூறுவதில் தவறில்லை.ஆகவே இவரை “பைந்தமிழ் பாவலர்” என கூறுவதிலும் எவ்வித தவறுமில்லை.
இத்துடன் பின்வரும் பகுதி இவரின் கொள்கை நிலை என்பவற்றை தெளிவாக காட்டி நிற்கின்றது.
            யமதக்கனி முனிவரின் மகனும் பரசுராமரின் சகோதரருமான திரணதுாமாக்கினிதான் தொல்காப்பியர் என்றும்,இவர் அந்தண மரபில் வந்தவர் என்று ஒரு சாரார் கூற இன்னும் பல சமயத்தார் இவர் தம் சமய வாதி என்றும் கூறுகின்றனர். இதில் உள்ள முரண்பாடு என்னவென்றால் பரசுராமரையும் அவரது ஊரையும் பற்றி கூறும் இராமாயணம் ஏன் இவரை பற்றி கூறவில்லை? அந்தண மரபில் வந்தவரெனில் இவர் தொல்காப்பிய முனிவர் என ஏன் அழைக்கப்படவில்லை? என்று பல கேள்விகள் எழுகின்றன.
எனினும் தொல்காப்பியத்தின் பொருளாதார கருத்துகளால் இவர் சமயத்திற்கு அப்பாற்பட்டவர் என்று தெளிவாகின்றது.
             தொல்காப்பியரின் குரு அகத்தியராவார். ஷாக்ரட்டீசை(shocraties)மிஞ்சிய பிளேட்டோ வை போலவே தொல்காப்பியர் அகத்தியரை மிஞ்சிய சீடராக இருந்தார். கதிரவனுக்கு முன் நிற்கும் சந்திரன் ஒளி இழக்கும். அதை போலவே அகத்தியரின் அறிவு,புகழ் அனைத்தையும் விழுங்கி விட்டார் தொல்காப்பியர். அகத்தியர் பற்றிய சான்றுகள் இல்லாவிடிலும் “அகத்தியன்” எனும் பெயரில் வாழ்ந்தவர்களில் காலத்தில் முற்பட்டவரே தொல்காப்பியரின் குரு என்றால் அதுவே மெய்.
இவரின் தொல்காப்பியத்திற்கு அறுவர் உரை எழுதியுள்ளனர்.இவர்கள் வடமொழியிலும் தமிழிலும் சம புலமை பெற்றவர்கள். இவர்கள் செந்தமிழ் நடையை கையாண்டமையால் புலவர்களுக்கும் புலமை மிக்கவர்களுக்கு மட்டுமே தொல்காப்பியம் புரியும். இதனால் பொது மக்கள் மனதில் இடம்பெற முடியாமல் போயிற்று.
பவணந்தி முனிவர் எழுதிய நுாலான “நன்னுால்” தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு எழுத்து,சொற்களை மட்டும் விளக்கி நிற்கிறது.
தொல்காப்பியம் எழுந்த காலம் தமிழ் இலக்கண வரலாற்றின் புதிய மரபு எழுந்த காலமாகும்.இந்நுால் எழுத்ததிகாரம்,சொல்லதிகாரம்,பொருளதிகாரம் எனும் மூன்று பெரும் பிரிவுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது உப பிரிவுகளை கொண்டவை. இவற்றுள் எழுத்ததிகாரமும்,சொல்லதிகாரமும் எழுத்துகளின் தோற்றம்,வளர்ச்சி என்பன பற்றியும் பொருளதிகாரம் பண்டை மக்களின் இல்லற வாழ்வு,போர்முறைகள்,செய்யுள் இலக்கணம்,அணிகளின் தோற்றம் என கற்பவர் மனதை மகிழ்விக்கும் வகையில் விளக்கி அமைக்கபட்டுள்ளன. ஏன் தற்கால திருமணமுறைகளும் தொல்காப்பியத்தை மூலமாக கொண்டு நடைபெறுகின்றன என்றால் நம்ப முடிகிறதா??? அதுதான் உண்மை என்பதே உண்மை....!

முடிவாக, தமிழர் எதிர்கால வரலாற்றை முற்கூட்டியே ஒரு திரைப்படமாக எடுத்துக் காட்டிய நுாலாக தொல்காப்பியம் விளங்குகின்றது. அதன் இயக்குனராக தொல்காப்பியர் விளங்குகின்றார்.


 பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
கலைஞர் உரை:
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
மு.வ உரை:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
Translation:
Courage, a liberal hand, wisdom, and energy: these four
Are qualities a king adorn for evermore.
Explanation:
Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character

9 Responses so far

 1. //////பிளற்றோவின் சிந்தனையையும்,அரிஸ்ரோட்டலின் உயிரியல் விளக்கத்தையும், மார்டின் லுதர் கிங் இன் சீர்திருத்த கருத்தையும் அன்பையும் குறைவின்றி பெற்றிருந்த அருட்குண குன்றுதான் இப் பதிவின் நாயகன் தொல்காப்பியர் எனலாம்/////
  ஆமாம் சில விசயங்களை விளங்கும்படி சுட்டிக்காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

 2. ம் ம் ம்...அப்பாடா ரொம்ப சந்தோசம் அண்ணா..நன்றிகள்...

 3. அண்ணா ஒரு பிற தகவல்...இந்த கட்டுரையை நான் தரம் 09ல் கற்கும் போது பாடசாலை தமிழ் சங்கத்தின் யாழ் நகர பாடசாலைகளுக்கு இடையிலான கட்டுரை போட்டிக்காக எழுதி முதல் பரிசை பெற்றுக்கொண்டேன்...
  இப்போ வலைபதிவிலும் அங்கீகாரம் கிடைத்து உள்ளது....மகிழ்ச்சி....

 4. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

 5. sinmajan says:

  வாழ்த்துக்கள் சகோதரா..
  எங்கள் கல்லூரியிலிருந்து புறப்பட்டுள்ளீர்கள்..
  கலக்குங்கள்..

 6. சிறந்த பதிவு! வாழ்த்துக்கள் ....

 7. க.சுரேந்திரகுமார்:-
  நன்றி அண்ணா...

Leave a Reply