எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Showing posts with label ரஜினிகாந். Show all posts
Showing posts with label ரஜினிகாந். Show all posts
Monday, December 12, 2011

“ஸ்டைல் குரு” ரஜினிகாந். - வாழ்த்து பதிவு

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..

மிக மிக நீண்ட நாட்களின் பின் சந்திக்கின்றேன்..
நேற்று எம் தமிழ் பாவலன் பாரதியின் பிறந்த நாள்.. அவனுக்காக சிறப்பு பதிவு எழுத முடியாமை மனவருத்தம்.. இருப்பினும் இப்பதிவில் அவனுக்கும் ஒரு இடம் கொடுக்க உள்ளேன்..

இன்று தமிழ் திரையுலகம் என்றால் சட்டென ஞாபகம் வந்து சிறு பிள்ளை முதல் நரை முதியவர் வரை சொல்லும் ரஜினிகாந் அவர்களின் 62வது பிறந்த தினம்.
முதலில் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..



திரையுலகின் மன்னன்...
ஸ்டைலின் குரு, அதை பின்பற்றும் சிஷ்யன்கள் பலர்..
ஆறில் இருந்து அறுபது வரை வயது வேறுபாடின்றி உங்களை பற்றித்தான் பேச்சு..

அறுபது கடந்தும் இன்றும் நீங்கள் உழைப்பாளி..
ரசிகர் மனதின் தனிக்காட்டு ராஜா.. எம் அன்புக்கு நீங்கள் என்றும் அடிமை..
முத்துப்போன்ற வெள்ளை மனம் கொண்ட ராஜாதி ராஜாவே எம் இதய தளபதி..
அன்புள்ள ரஜனிகாந், நோயின் வலி கடந்து நிற்கும் நீங்கள் எந்திரன்..
முதுமை உங்களுக்கு அல்ல.. 
உங்களை சேர துடித்து களைத்து நிற்கும் அந்த முதுமைக்குதான் முதுமை...
ராணாவில் சந்திப்போம் இளமை ஊஞ்சலாடும் சிவாஜிராவ் அவர்களே...

இன்றைய பதிவு ரஜினியின் வாழ்த்து பதிவாக இருப்பதோடு மட்டுமன்றி நான் நீண்ட நாளாக பதிவிட வேண்டும் என நினைத்து சரியான நேரத்திற்காக காத்திருந்த “ரஜனியில் நான் அடிமையான 10 திரைப்படங்கள்” தொடர்பான பதிவாகவும் அமையவுள்ளது.

1. மூன்று முகம்.

அலக்ஸ் பாண்டியன், அருண், ஜோன் என்று மூன்று வேறுபட்ட பாத்திரங்களில் ரஜனி ஜொலித்த திரைப்படம் மூன்று முகம். இதில் அலக்ஸ் பாண்டியன் பாத்திரம் யாராலும் மறக்க முடியாதது. என்ன ஒரு கம்பீரம்,கர்ஜனை..
இருப்பினும் அலக்ஸ் பாண்டியன் பாத்திரம் குறுகிய நேர பாத்திரம் என்றாலும் அதை திறமையாக நடித்து மக்கள் மனதில் சிறு நிமிடங்களை கூட நிலைக்கும் வண்ணமும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதை உணர்த்திய ரஜனியின் முகம்.

தமிழக அரசு இத்திரைப்படத்திற்காக ரஜனிக்கு 1982ல் சிறந்த நடிகர் விருது வழங்கி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
எந்தப்பக்கம் உரசினாலும் தீ பிடிக்கும்......


2. பில்லா

ரஜனியின் மற்றுமொரு பரிமாணம் வெளிப்பட்ட திரைப்படம் பில்லா..
திரைப்படத்தின் கதை உலகறிந்தது.. எனவே எதுவும் சொல்ல விரும்பவில்லை..
R.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இயக்கத்தில் பில்லா,ராஜ் என்று இரட்டை வேடங்களில் கலக்கலான நடிப்பை 1980 ல் வெளிப்படுத்தி இருந்தார் ரஜனி.
இதில் ராஜ் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது..

3. ஆறிலிருந்து அறுபது வரை.

நான் விரும்பி ரசித்த, ரசிக்கின்ற திரைப்படம். என்னிடம் வந்து சேர்ந்த முதல் original Film CD கூட இத்திரைப்படத்தினுடையது என்றால் பாருங்களேன்.. வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளையும் செதுக்கி வைத்த திரைப்படம் S.P.முத்துராமன் அவர்கள் இயக்கிய ஆறிலிருந்து அறுபது வரை. இளைஞன்,அண்ணன்,காதலன்,கணவன்,எழுத்தாளன்,வாழ்ந்து முடித்த முதியவர் என அத்தனை பாத்திரத்திற்கும் ரஜனி பொருந்தி போனது 1979ல் தமிழ் திரையுலகில் பதியப்பட்ட வரலாற்றுத்தடம் எனலாம்.

இன்றும் மாலை வேளையில் மீண்டும் நான் பார்க்க போகின்ற திரைப்படமும் இதுவே..
காலங்கள் கடந்து நிற்கும் காதலர்களின் தேசிய கீதங்களில் ஒன்று..

4. நான் அடிமை இல்லை

பொதுவாக திரைப்படங்கள் மனதை எந்த அளவிற்கு பாதித்திருந்தாலும் கண்ணீர் சொரியும் அளவிற்கு தாக்கத்தை தருவதில்லை.. திரைப்படம் என்ற பார்வை எமக்கு இருப்பது அதற்கு காரணமாக அமைகின்றது.

ஆனால் இதுவரையில் திரைப்படம் பார்த்து நான் அழுதது என்றால் அது நான் அடிமை இல்லை திரைப்படம்தான். அதிலும் சிறுவன் பாடும் பாடல் ஒலிக்கும் போது இன்றும் கண்ணீர் ததும்பும்.
ஒரு புகைப்பட கலைஞன் யாருக்கும் கட்டுப்படாமல் சுய கௌரவத்துடன் சொந்த காலில் நின்று வாழும் கதையே திரைப்படத்தின் மையகதை.
நான் நானாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் விதைத்த திரைப்படமும், விஜய் என்ற கதாபாத்திரமும் காலமுள்ள வரை என் நினைவில் இருந்து நீங்காது..
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது....

5. முத்து

ரஜனியை நட்சத்திர அந்தஸ்துடன் வெளிப்படுத்திய திரைப்படங்களி்ல் முத்து திரைப்படமும் ஒன்று. ஸ்டைல் காரணமாக அதிகம் ரசித்த படம். அத்துடன் ரகுமான், வைரமுத்து, S.P.பாலசுப்பிரமணியம் இவர்களின் கூட்டணிக்காகவும் நான் ரசிக்கும் திரைப்படங்களில் ஒன்று. 
பிரியதர்ஷனின் மூல கதையை எடுத்து K.S.ரவிக்குமார் இயக்கிய திரைப்படத்தில் அன்புள்ள ரஜனிகாந் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த மீனாவுடன் கதாநாயகனாக மீண்டும் ரஜனி இணைந்திருந்தார்.
ரஜனியின் சூப்பர்ஸ்டார் என்ற மாஸ் ஐ பாழாக்காத திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
உலகளவிற்கு ரஜனியை கொண்டு சென்ற இத்திரைப்படம் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை 1996ல் ரஜனிக்கு பெற்றுக்கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

6. தளபதி

மகாபாரத கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் இன்று பலராலும் நட்பு தொடர்பான திரைப்படங்களில் முதலில் நினைவு படுத்தப்படும் திரைப்படமாக தளபதி விளங்குகின்றது.
இரு நடிப்புலக இமாலயங்கள் இணைந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா வழங்கிய இசை தெவிட்டாதது. 

பாடல்களுக்காக ஆரம்பத்தில் என்னை கவர்ந்து பின் திரைப்பட அமைப்பிலும் என்னை பாதித்த படமாக அமைவது இந்த தளபதி.

7. படையப்பா

எல்லோருக்கும் பிடித்த ஒன்று எனக்கும் பிடித்து போவது வேடிக்கை அல்ல.. அது போலத்தான் படையப்பா திரைப்படமும்.
ரஜனியால் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் எனக்கு அத்துப்படி. நடிகர் திலகத்தை இந்த தலைமுறைக்கும் நினைவு படுத்திய திரைப்படம் இது என்றாலும் தவறில்லை என்று நினைக்கின்றேன்..

படத்தில என்ன ஒரு ஸ்டைலை வெளிப்படுத்தியிருப்பார் நம்ம தலைவரு.. வயசானாலும் இன்னும் அந்த ஸ்டைல் அவரை விட்டு போகவில்லை என்பதே உண்மை..

8. பாட்ஷா.

தாதா என்ற கதாபாத்திரத்தில் இன்று பலர் துணிந்து நடிப்பதற்கு முன்னோடியாக ரஜனி நடித்து காட்டிய திரைப்படம் பாட்ஷா.
முன்னர் சொன்னது போல எல்லோர் விருப்பம் போல என்னாலும் விரும்பப்பட்ட திரைப்படம்.
வசனங்களுக்காக அதிக தடவை பார்த்து மகிழ்ந்த திரைப்படம், அதிலும் ரஜனி மிரட்டும் காட்சிகளுக்கு நான் அடிமை.

9. சிவாஜி

தன் பெயரின் பாதியையும் நடிகர் திலகத்தை நினைவு படுத்தும் விதமாகவும் சிவாஜி என்ற பெயருடன் வெளியாகி இன்று வரை வசூல் சாதனைகளின் சிகரத்தில் நிற்கும் திரைப்படம். சிகரட் பாணியை துறந்து புதிய பாணியை கையாள ஆரம்பித்த 2வது திரைப்படம். முதலாவது சந்திரமுகி.
ரஜனியின் வாயில் இருந்து பஞ் வசனங்கள் குறைவாக வெளிப்பட்ட அண்மைய திரைப்படம். என பல புதிய விடயங்களுக்காகவும் என்னை கட்டிப்போட்ட திரைப்படம்.
சிறந்த கலை இயக்குனர் எனும் தேசிய விருதை 2008 ல் தோட்டா தரணி பெற்றுக்கொள்ள காரணியாக இருந்ததும் சிவாஜி திரைப்படமே.

பாடசாலை நாட்களில் நானும் நண்பர்களும் அதிபரின் அனுமதியுடன் திரையரங்கு சென்று படம் பார்த்தது இத்திரைப்படத்தின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது.

10. ........................ நீங்களே சொல்லுங்கள்.....!!

எல்லோரையும் போல பத்து படங்கள் என பட்டியலிட எனக்கு விருப்பமில்லை. ரஜனியின் படங்கள் பலவற்றை இப் பட்டியலில் என்னால் இணைக்க முடியாமல் போவதே பெரும் வருத்தம். இப்பதிவில் நான் ரஜனியை ஒரு ஆதர்ஷ நாயகனாக பார்த்த திரைப்படங்களை பட்டியலிட்டுள்ளேன். இன்னும் கலைஞனான, நடிகனாக, மனிதனாக, பக்தனாக என பல வடிவங்களில் ரஜனியின் முகங்களை பட்டியலிடலாம். ஆனால் நேரமும் காலமும் கைகூட வேண்டும். எனவே தற்காலிகமாக ரஜனியின் ஏனைய திரைப்படங்களினை இந்த 10 என்ற இலக்கத்தில் வைத்து ரஜனிக்கான வாழ்த்து பதிவை நிறைவு செய்கின்றேன்.
இவன் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா... -கவி பேரரசு வைரமுத்து



குறிப்பு :- பதிவின் தலைப்பிற்கு உதவி deccan chronicle பத்திரிகை.

..........................................................................................................................................................

பதிவில் இறுதியாக,
முன்னரே குறிப்பிட்டது போன்று நேற்று பாரதியின் பிறந்த தினம்.
பாரதியின் கவிதைகளில் நேற்று அதிகாலையில் திடீரென மனதில் நினைவுக்கு வந்தவை இரண்டு கவிதைகள்..

1. சுதந்திர தாகம்


என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
அன்றொரு பாரதம் ஆக்க வந் தோனே!
ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே!
வென்றி தருந்துணை நின்னருளன்றோ?
மெய்யடியோம் இன்னும் வாடுதல் நன்றோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினியார்க்கோ?
தஞ்ச மடைந்த பின் கை விடலோமோ?
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
அஞ்சலென்றருள் செயுங் கடமையில்லாயோ?
ஆரிய! நீயும் நின் அறம் மறந்தாயோ?
வெஞ்செயல் அரக்கரை வீட்டிடுவோனோ!
வீர சிகாமணி! ஆரியர் கோனே!
2. பாரத தேசம்
பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். 
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம். 
வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். 
முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர் பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே. 
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிகளோட்டி விளையாடிவருவோம்.
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.
காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
ராசபுத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.
பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் 
ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
குடைகள் செய்வோம் உழு படைகள் செய் வோம்
கோணிகள் செய்வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம் 
மந்திரம் கற்போம் வினைத் தந்திரம்கற் போம்
வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். 
காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலை வளர்ப்போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம் செய்வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்துமுவந்து செய்வோம்.
சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்
நீதிநெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். 
நல்லது நண்பர்களே...,
நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
Continue reading →
Photobucket