எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Sunday, May 15, 2011

ஐயோ அண்ணா நானில்லீங்க....- பெண்களுக்கு மட்டும்

19 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
ஹலோ நண்பர்களா….வணக்கம்… மிக நீண்ட விடுமுறைக்கு பிறகு சந்திக்கின்றேன்... அப்படி இப்படி என்று நாட்களும் நகர்ந்து சென்று விட்டது... இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது..ஒரு பதிவு போடலாம் என்று பார்க்கின்றேன்.. ஆனால் காதலிக்கும் ஆண்களும், காதலி தேடும் ஆண்களும் பார்க்க கூடாத பதிவு... பார்த்தால் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும்..(நான்தான்)..


காதலன் தேடும் இளம் பெண்களே..! காதலனே கிடைக்காத பெண்களே இது உங்களுக்கான ஷ்பெசல்...

நல்ல காதலனைத் தேடிக்கொண்டிருக்கிற, இன்னும் காதலில் மாட்டிக்கொள்ளாத பெண்களுக்கு இந்தக் காலத்துப் ஆண்களைப் பற்றிய சில எச்சரிக்கைக் குறிப்புகள்...!

அவன் என்னை காதலிக்கிறானா? என்னைத் தான் காதலிக்கிறானா என்ற பரபரப்பு வேண்டாமே..!
இந்தக்காலத்தில் ஆண்கள் என்ன எல்லாம் செய்வார்கள் பெண்களை ஏமாற்ற.... • நல்லா தலைமுடிக்கு விதவிதமா ஜெல் போடுவார்கள். சிலநேரம் கலரைக் கூட மாத்துவார்கள் (நரையை மறைக்க - ஸ்ரைல் என்று ஏமாற வாய்ப்புண்டு).

 • பொய்யாக துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வருவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவார்கள், ஐ லவ் யூ சொல்லுவார்கள்.. ஏற்றுக்கொண்டீர்களெனில்.. அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்கள் சொல்லிட்டுத் திரிவீங்க..

 • நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீரென ஒருநாள் நீங்கள் (அன்றைக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வருவதைப் பார்த்தும் கண்டுக்காமல் இருப்பான். மூஞ்சைத் திருப்பிப்பான். நீங்க இதைப் பார்த்துட்டு 'ஐயோ இவனுக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க. அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை.

 • உங்களுக்கு மியூசிக்ல விருப்பமிருக்கு என்கின்றது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன் என்ற நினைப்பில்.. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

 • ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் எந்திரன்' நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன். மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான். அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு , நிஜமாவே எந்திரன் நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க..அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1Cm புன்னகையை விட்டீங்கன்னு வைங்க..அவன் வலைக்குள்ள நீங்க விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..


 • பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ் போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

 • கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க..நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாளிலிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்களிலேயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..அம்புட்டுதேன்.. உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்கா ஆகிடுமுங்க..

 • நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது.. பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்.. ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

 • அப்புறம் அதுல அவன் பர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்.. பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க.. நாலஞ்சு நியூஸ் பேப்பர், மேகஸின்சை சுருட்டி, மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..

 • பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட, ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி அலைவான்.. 'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..

 • ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு , டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பி ஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.

 • எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க.. ஒருவேளை லூசாக இருக்கச் சான்ஸ் உண்டு.

 • திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்.. தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க.. அப்புறம் 'வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தா நாளைக்குக் கருவாடு'ன்னு 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி தத்துவம் பேச ஆரம்பிப்பான். அப்புறம் நீங்க கூட சாமியாருக்கிட்ட ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.இன்னும் நிறைய இருக்கு.. ஆனாலும் பொண்ணுங்களா... நீங்க ரொம்பவே புத்திசாலிங்க… இது போதும் உங்களுக்கு காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு...
அதனால சமத்தா நல்லாப் படிச்சு அம்மா, அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா அவங்களைக் காதலிங்க..


டேய் எவண்டா அவன் கொலை மிரட்டல் விடுறது….


நான் இருக்கும் ----------கட்சியில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இன்று முதல் இரும்புக் கோட்டையாகிய -------கட்சிக்கு தாவுகின்றேன்….

ஏதோ நம்மளால முடிஞ்சது.. இப்படியாவது பெண்கள் ஆதரவை பெருக்கி அடுத்த தேர்தல்ல களத்தில் குதிக்கலாம் பாருங்க… (கலைஞரே தோக்கிறாரு என்றால் நாம வெல்ல மாட்டமா???)

நன்றி...மீண்டும் சந்திப்போம்...
என்றும் அன்புடன்,

Continue reading →