எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, November 27, 2010

உதட்டில் ஓர் காயம்...

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
ஒரு ஜனாதிபதி விளையாட்டை விளையாட்டாக விளையாட போய் அது வினையாக மாறிய சம்பவம் இன்று(அங்கு 26-11-2010 வெள்ளி காலை) நடந்தேறியது...

அமெரிக்க அதிபர் இல்லம்,வெள்ளை மாளிகை மைதானத்தில் தன் உறவினருடன் விளையாட போன அதிபர் பாரக் ஒபாமாவே வினையை வாங்கி வந்துள்ளார்.(பழகிய தோசமோ?)
ஒபாமா எப்படி ஒரு சிறந்த அரசியல்வாதியோ அவ்வளவு விளையாட்டிலும் திறமையானவர்...காலையில் தன் உறவுகள்,நண்பர்களுடன் மைதானத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். தன் அரசியல் அழுத்தங்களை மறந்து நிம்மதியாக “நன்றி பகிர்தல்” தினத்தை முன்னிட்டு (நமக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது) Duke University கூடைப்பந்து வீரர்களுடன் விளையாட்டில் கலக்கி கொண்டிருந்த போது, பந்தை பறிக்க வந்த பல்கலைககழக வீரரின் கை அவரின் உதட்டை பதம் பார்த்தது..வேகமாக பந்துடன் முன்னேறிய ஒபாமாவை தடுத்து எப்படியாவது பதவியை சீ பந்தை  பறித்து விட வேண்டும் என்ற ஆவேசத்துடன் அவர் மீது பாய்ந்த வீரரின் கை பந்தை தொடமுன் முழங்கை உதட்டை தொட்டது..இல்லை இல்லை தாக்கியது என்பதே பொருத்தம்.
அடிபட்டது தான் தாமதம் உதடு உடைந்து விட்டது. ரத்தம் பீறிட்டது. வலியால் துடித்த ஓபாமா ஓலமிட்டார்...இதற்கிடையில் எப்படியும் இடித்தவனை திட்டியிருப்பார்(எப்படி நம்மவர்கள் போல் “பரதேசி பன்னாடை” “கண்ணில்லா கபோதி” என்று திட்டி இருப்பாரோ..!)
வலியால் அவதிப்பட்ட ஒபாவை அலுவலர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த வெள்ளை மாளிகை வைத்தியர்கள் அவர் உதட்டில் தையல்(stitches)போட நேரிட்டது. ஒன்றல்ல  இரண்டல்ல பன்னிரண்டு தையல்கள்....!(சின்னன் சின்னனா நிறைய போட்டிருப்பாங்களோ...?)
இந் நிலையில்,வெள்ளை மாளிகை பேச்சாளர் Robert Gibbs இது பற்றி தெரிவிக்கையில், "After being inadvertently hit with an opposing player's elbow in the lip ... the president received 12 stitches today, administered by the White House Medical Unit," என்றார்.
                        சிகிச்சையின் பின் ஒபாமா
இக் காயம் ஆற எப்படியும் இரண்டு வாரங்கள் தேவைப்படும் நிலையில் ஆட்சி விவகாரங்கள் பற்றி எப்படி விவாதிக்க போகிறார்? இவரின் அர்த்தமுள்ள உரையை (சிரிக்காதீங்கப்பா....சீரியஸா சொல்லுறேன்) கேட்காமல் அமெரிக்க அமைச்சரவை எப்படி இருக்க போகிறதோ??
இந்த இடைவெளியில் ஈரான்,வட கொரியா நாடுகள் ஏதும் பேசாமல் இருந்தால் சரி....மாறாக பேசினால் நம்மவர்கள் சொல்வது போல் “இனி வாய் பேசாது கை தான் பேசும்” என்று நடக்குமோ அல்லது “தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பது நடக்குமோ...பார்ப்போம்...
ஆனால் இந்த சம்பவம் எக்காரணத்தை கொண்டும் ஆட்சி விசயங்களை பாதிக்காது..ஏனெனில் அங்குதான் ஜனாதிபதிக்கு உதவுவதற்கென 10 பேர் கொண்ட இலாகா/அமைச்சு இருக்கின்றதே..பிறகென்ன கவலை....





பதிவில் ஓர் குறள்
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா 
மானம் உடைய தரசு.

கலைஞர் உரை:
அறநெறி தவறாமலும்குற்றமேதும் இழைக்காமலும்வீரத்துடனும்மானத்துடனும் ஆட்சி  நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

மு. உரை:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.

Translation:
Kingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains.

Explanation:
He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.

11 Responses so far

  1. என்ன ஒரு செய்தி முடியல ஜனகன்
    உண்மையில் இடித்தவனை எப்படி திட்டியிருப்பார் ????

  2. ஃஃஃஃ“இனி வாய் பேசாது கை தான் பேசும்” என்று நடக்குமோ அல்லது “தானாடா விட்டாலும் தசை ஆடும்” என்பது நடக்குமோ...பார்ப்போம்..ஃஃஃஃஃ

    பார்ப்போம் பார்ப்போம் உங்க புளொக் லிங்கை ஆளுக்கு அனுப்புறேன் மனுசன் பாத்திட்டு பில்கெட்சை கொண்டு ஹக் பண்ணவைக்கிறேன்....

  3. Harini Nathan;- வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அக்கா....உங்கள் கேள்விக்கான பதிலை பெறும் பொருட்டு அவருக்கு தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்தினேன்....ஆனால்..........கிடைத்தது....!!!!!....வேண்டாமே....



    ம.தி.சுதா;- அவ்..........
    இதில உங்க பங்கும் இருக்கே....(சின்னன் சின்னனா நிறைய போட்டிருப்பாங்களோ...?)hi hi hi.....
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணா..

  4. This comment has been removed by the author.
  5. //இனி வாய் பேசாது கை தான் பேசும்” என்று நடக்குமோ //

    நடந்தாலும் நடக்கும் 3-ம் உலகபோர்
    கலக்கல் ஜனகன் வாழ்த்துக்கள்

  6. டிலீப் said...
    //இனி வாய் பேசாது கை தான் பேசும்” என்று நடக்குமோ //

    நடந்தாலும் நடக்கும் 3-ம் உலகபோர்
    கலக்கல் ஜனகன் வாழ்த்துக்கள்

    நன்றி நண்பா டிலீப்....
    மீண்டும் இடப்பெயர்வா???? இருங்க வர்றேன்.....எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டு......

  7. Unknown says:

    வாழ்த்துக்கள் ஜனகன்! :-)

  8. roshaniee says:

    நல்ல பதிவு

  9. ஜீ... said... வாழ்த்துக்கள் ஜனகன்! :-)

    நன்றி நண்பரே..........

    roshaniee said... நல்ல பதிவு

    நன்றி சகோதரி......வருகைக்கும் கருத்துக்கும்.....

  10. எல அந்தாளு என்ன பாவம்பண்ணிச்சோ..
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  11. Cool Boy கிருத்திகன். said... எல அந்தாளு என்ன பாவம்பண்ணிச்சோ..
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்.


    அமெரிக்க ஜனாதிபதி ஆனது தான் பெரிய பாவமோ???
    நன்றி நண்பரே..

Leave a Reply

Photobucket