எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, November 12, 2010

“செந்தமிழ்” பாடல்

6 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
“செந்தமிழ்” பாடல்
 
இலங்கையின் முண்ணணி பத்திரிகை நிறுவனமாக விளங்குகின்ற வீரகேசரி நிறுவனம் கடந்த 80வருடங்களாக தமிழ் பணி ஆற்றி வருகின்றது..
அவ் வகையில் அதன் தமிழ் பணிகளின் மகுடமாக அண்மையில் அவர்களால் வெளியிடப்பட்ட “செந்தமிழ்” பாடல் விளங்குகின்றது..
முத்து முத்தாய் விளங்கும் தமிழுக்காய் அமைந்த இப் பாடலின் வைர வரிகளை “கவிபேரரசு” வைரமுத்து எழுத, அண்மைக்காலத்தில் கலைஞரின் வம்சம் திரைப்படம் மூலம் புகழடைந்த தாஜ் னுார் இசையமைக்க, பாடலை பத்மஸ்ரீ S.P.பாலசுப்ரமணியம்,அனுராதா ஸ்ரீராம் மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.மேலும் பாடலின் இடையே வரும் இலங்கையின் உலக அறிவிப்பாளர் B.H அப்துல் கமீத் அவர்களின் கம்பீர குரல் பாடலை மேலும் மெருகூட்டுகின்றது..

தமிழே தமிழே தமிழர் உயிரே....
என ஆரம்பிக்கும் பாடலின் வரிகளை கவனியுங்கள்..
அறிவே அறிவே அறிவின் தெளிவே..
நீயே எங்கள் அடையாயம்..
நீயே எங்கள் ஊர்கோலம்..
நீயே எங்கள் வரலாறு..
நீயே எங்கள் பண்பாடு..
                    இவை தமிழின் தொன்மையை பறைசாற்றி நிற்கின்றன.
மேலும்...
உறவே உலகென வாழும் உலகில் உலகே உறவென ஓங்கி மொழிந்தாய்.....
            அன்று கணியன் புங்குன்றனார் கூறிய “யாதும் ஊரே யாவரும் கேளீர்..” என்பதன் புதிய வடிவம் போலும்....!!!
இலங்கை வளர்த்த – இலங்கையில் வளர்ந்த தமிழ் பற்றி கூறும் B.H.A ன் குரல் பாடலின் பலம் எனலாம்...
யாழ்ப்பாணத்தில் யாழான தமிழே...
         மரபை சொல்லுகிறது...
         இப் பாடலில் என்னை கேட்டதும் கவர்ந்து இழுத்த வரி...
பேரண்டம் தான் முடிவதுமில்லை....செந்(எம்)தமிழ் என்றும் அழிவதுமில்லை...

இனி பாடலை கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்...இதோ.....
இப் பாடலை உலகறிய செய்வது எம் கடமை…


இந்த பதிவை நான் எழுதும் போது என்னுள் உண்டான பரவசத்திற்கும்,உற்சாகத்திற்கும் அளவே இல்லை எனலாம்.....
உலகே உனதென ஓங்கி வளர்ந்தாய்..
செந்தமிழ் என்றும் அழிவது இல்லை...

6 Responses so far

 1. //////////இந்த பதிவை நான் எழுதும் போது என்னுள் உண்டான பரவசத்திற்கும்,உற்சாகத்திற்கும் அளவே இல்லை எனலாம்....////////////

  இது உங்களுக்கு மட்டும் ஏற்ப்படும் பரவசம் இல்லை நண்பரே தமிழை சுவாசிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்ப்படும் மாற்றம்தான் . பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி

 2. உண்மைதான்....
  நன்றி நண்பரே......

 3. சிறப்பான பதிவு, வாழ்த்துக்கள்..

 4. நல்லதொரு பதிவு.. தங்களைப் போல் தான் வெற்றி விடியலில் கேட்கும் போதே பயங்கர பரவசமாக இருந்தது...

 5. நன்றி ம.தி.சுதா அண்ணா....
  ஆனால் அந்த பரவசத்தை தொடர்ந்து கேட்க முடியலயே...அதுதான் கவலை....

Leave a Reply