எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, November 26, 2010

என் பெயர் ஓஸிமாண்டியாஸ் (Ozymandias)

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
        அண்மையில் இணையத்தில் நான் படித்து ரசித்த கவிதை ஒன்று இது.
இன்றைய நடைமுறை நிலையை நான் அதில் பார்த்து அதிர்ந்து விட்டேன்..அன்று முதல் இதுதான் நிலை என்று எனக்கு அது தெளிவாக புலப்படுத்தியது. நான் அனுபவித்தது இதோ உங்களுடன்.....


I met a traveller from an antique land
who said: Two vast and trunkless legs of stone
stand in the desert. Near them, on the sand,
Half sunk, a shattered visage lies, whose frown
And wrinkled lip, and sneer of cold command
Tell that its sculptor well those passions read
Which yet survive, stamped on these lifeless things,
The hand that mocked them and the heart that fed.
And on the pedestal these words appear:
"My name is Ozymandias, king of kings:
Look on my works, ye Mighty, and despair!"
Nothing beside remains. Round the decay
Of that colossal wreck, boundless and bare
The lone and level sands stretch far away.


தமிழாக்கம்

பழந்தேசத்து பயணி ஒருவரை சந்திக்க நேர்ந்தது
அவர் சொன்னார்:
பாலைவனத்தில் உடலற்ற இரு பெரும் கால்கள் நிற்கின்றன
அருகில் மணலில் சிதைந்த முகமொன்றைக் கண்டேன்
சுருங்கிய இதழ்களில் என்னவொரு அலட்சியமான கம்பீரம்!
வடித்த சிற்பி திறமைசாலி தான்
உயிரற்ற கல்லில் உணர்ச்சிகளை உயிர்ப்பித்திருக்கிறான்.
கால்கள் நின்ற பீடத்திலே எழுதியிருந்தது:

என் பெயர் ஓஸிமாண்டியாஸ்
அரசர்களுக்கெல்லாம் அரசன்
நான் படைத்தவற்றைப் பார், ஆற்றாமை கொள்

கால்களையும், உடைந்த முகத்தையும் தவிர
சுற்றி வேறொன்றும் இல்லை..
தொடுவானம் வரை அழிவும் மணலும் தான் தெரிந்தன.

இங்கே சொடுகி இக்கவிதையின் ஒலி வடிவை செவிமடுங்கள்...இந்த நிதர்சன கவிதை  200 ஆண்டுகளுக்கு முன் 1818ல் சோனட் வகை கவிதையா பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) அவர்களால் எழுதப்பட்டது.
இதில் குறிப்பிடப்படும் “ஓஸிமாண்டியாஸ்” என்ற வார்த்தை
பண்டைய எகிப்த்து பேரரசர்களுள் ஒருவரான இரண்டாம் ராமசேசை குறிக்கின்றது.
இரண்டாம் ராமசேசின் ஆட்சிப் பெயரான  User-maat-re Setep-en-re என்பதின் கிரேக்க மொழிபெயர்ப்பே ஓஸிமாண்டியாஸ்.இவரின் ஆட்சி காலத்தில் எகிப்தில் பல உன்னத கட்டிடங்கள் எழுந்தன...அவற்றில் ஒன்றின் பீடத்தில்,

நான், ஓஸிமாண்டியாஸ்..அரசர்களுக்கேல்லாம் அரசன். என் பெருமைகளை உணர வேண்டுமெனில் நான் படைத்தவற்றுள் ஏதேனும் ஒன்றை பார்.

King of Kings am I, Osymandias. If anyone would know how great I am and where I lie, let him surpass one of my works.

       என இருந்தது என கூறப்படுகிறது. இந்த புகழ் பெற்ற கவிதை ஜனவரி 11, 1818ல் த எக்சாமினர் என்ற இதழில் வெளியானது.

என்ன சைலன்ட் ஆகிட்டீங்க....?
நீங்களும் அனுபவித்தீர்களா..? உங்கள் அனுபவங்களை என்னோடு பகிருங்கள்....

பதிவில் ஓர் குறள்
பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி
குறள் 383:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் 
நீங்கா நிலனான் பவர்க்கு.
கலைஞர் உரை:
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும்
நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க   வேண்டியவையுமான பண்புகளாகும்.
மு. உரை:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

Translation:
A sleepless promptitude, knowledge, decision strong: 
These tree for aye to rulers of the land belong.

Explanation:
These three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a country

2 Responses so far

  1. /////// என இருந்தது என கூறப்படுகிறது. இந்த புகழ் பெற்ற கவிதை ஜனவரி 11, 1818ல் த எக்சாமினர் என்ற இதழில் வெளியானது.////

    பிரமிப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது.. தங்கள் தேடலின் வெற்றி நிச்சயம் அடைவீர்கள் வாழ்த்துக்கள்...

  2. நன்றி அண்ணா தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்.....

Leave a Reply