எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, December 31, 2011

உண்மை சொல்கின்றேன்..- 2011ல் என் காதல்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..

ஆரம்பமும் முடிவும் எப்போதும் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. அது தானாகவே நடந்து முடிகின்றன.
இன்று 2011 ஆம் இறுதிநாள்.. பல இன்பங்கள், சோகங்கள், மாற்றங்கள், வரவுகள், செலவுகள் என கடந்து வந்த வருடங்கள் தந்த அனைத்தையும் எமக்கு வழங்கியிருக்கின்றது இந்த 2011.
இதில் அரசியல் மாற்றங்கள், எதிர்பாதார நிகழ்வுகள், அதிர்ச்சி தரும் அம்சங்கள் என பல விடயங்களை மீள்பார்வைக்கு கொண்டு வரலாம்.
ஆனால் இந்த விடங்களை நாங்கள் மீண்டும் நினைக்கும் போது ஏதோ ஒரு வெறுப்பும், வேதனைகளும் வருவது தவிர்க்க முடியாதனவாகின்றன. வருடத்தின் இறுதி நாள் - புதிய வருடத்திற்கு இன்னும் ஒரு நாள் என்று இன்றைய டிசம்பர் 31ம் திகதி இருக்கின்ற நிலையில் 2012ஐ வரவேற்க தயாராகும் நாம் மகிழ்ச்சியுடன் 2011க்கு விடை கொடுத்தால் நல்லது தானே. ஆகையால் இப்பதிவு எப்போதும் எம் இன்பத்திலும் துன்பத்திலும் தோழனோடு சேர்ந்து துணை நிற்கும் பாடல்கள், திரைப்படங்கள் பற்றியதாக பேசி செல்லவிருக்கின்றது.

ஆம், 2011ல் வெளிவந்து என் மனதை கவர்ந்த 10 பாடல்களும், 10 திரைப்படங்களுமே இப்பதிவை அலங்கரிக்கவுள்ளன.
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன். நான் ஒரு அனுபவம் மிக்க விமர்சகன் அல்ல. ஆகையால் என் ரசனைகளை இங்கு கொட்டுகின்றேன். அதில் இந்த இலக்கங்கள் ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியால் போகின்றது.
இருப்பினும் இந்த இலக்கங்கள் தரவரிசைக்காக அல்ல என்பதை குறிப்பிட்டு சொல்லுகின்றேன்.

முதலில் பத்து பாடல்கள்.

10- உன்னாலே உன்னாலே...- ஒஸ்தி


இல்லை இல்லை இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும்
கடவுளை போலவே

தேவதையை கனவில் ஏங்கினேன் அப்போ

உன் விழியில் தெரியுதே ஏக்கமும் இப்போ
பூமழையே வானமே துாறுமே அப்போ.
உன் நினைவு துாறலா சேருதே இப்போ.
போன்ற யுகபாரதியின் வரிகளும் பாடலின் இசையும் கவர்ந்து விட அண்மையில் அதிகம் முணுமுணுத்த பாடலாகிப்போனது இப்பாடல்


இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து ரீட்டா பாடிய இப்பாடலின் காட்சியுருவாக்கமும் என்னை கவர்ந்ததும் மகிழ்ச்சி. தேவையற்ற இடைச்செருகலாக அல்லாமல் படத்துடன் ஒன்றித்த இப்பாடலில் சிம்பு மற்றும் ரிச்சா இருவரின் முகபாவங்களும் அருமை. (சிம்புவின் படத்தில் நாயகியை அதிகம் புடவையில் பார்த்ததும் இப்படத்தில்தான்..)


09- என்ன சொல்ல போறாய்..- வேங்கை

பாடலின் அனைத்து வரிகளும் பிடித்து போக ரசித்து கேட்ட பாடல்.
தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் M.L.R.கார்த்திகேயனின் குரலில் இருந்த உணர்வு என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
பாடல் காட்சியின் தேயிலை தோட்டங்களின் ரம்மியம், மிக இலகுவான சந்தத்திற்கேற்ற நடனங்கள் என பல விடயங்களினால் பிடித்து போன பாடலாக இப்பாடல் மாறிப்போனது.



08- குதிக்கிற குதிக்கிற..- அழகர் சாமியின் குதிரை.

இசைஞானியின் இளமை குரல்,அதில் இருந்த நளினம், எளிமையான பாடல் வரிகள், காட்சியமைப்பு என அனைத்து அம்சங்களினாலும் கவரப்பட்ட பாடல்.
நான் ரசித்து பார்த்த படங்களில் அழகர் சாமியின் குதிரை படமும் ஒன்று.
நடிகனுக்கு உரிய வரைமுறையை கடந்து சாதாரண மனிதனும் நடிகன்தான் என காட்டிய படம்தான் அழகர் சாமியின் குதிரை.



07- நீ கோரினால்..- 180

2011 முழுவதும் தன் வரிகளினால் ஆக்கிரமித்திருந்தவர் மதன் கார்க்கி எனலாம்.
கார்க்கியின் அழகிய வரிகளினால் கட்டுண்டு ரசித்த பாடல் இது.
என் மீதி பார்வை பிம்ம பூவே பட்டுப்போகாதே..
சரத்தின் இசையில் இடம்பெற்ற இப்பாடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மயக்கும் தன்மையை இன்றும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரினதும் குரல்களின் நளினமும் அருமை.



06- தம்பி தம்பி..- சங்கமம் இசைத்தொகுப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி மாணவர்களின் படைப்பில் உருவான சங்கமம் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் இது.
மாணவர்களின் குறும்புத்தனங்களையும் சொல்லி அவர்களுக்கு அறிவுரை தருவதாகவும் அமைந்த இப்பாடலின் வரிகள் அருமை.
மாணவன் மதீசனின் வரிகளுக்கு சத்தியன் இசையமைக்க ஜெகதீஸ் அருமையாக பாடியிருந்தார்.
பாடலை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.
இலங்கையில் இப்பாடலை வெற்றி பெற வைத்த வெற்றி வானொலிக்கும் நன்றிகள்.



05- முளைச்சு மூணு...- வேலாயுதம்

பெண்ணை வர்ணித்து களைத்து விட்ட கவிஞர்கள் இன்று எதை எதையோ கொண்டு வர்ணிக்க விவேகா காய்கறிகளை கொண்டு வர்ணித்தது இப்பாடல் பிடிக்க பிரதான காரணம்.
மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகாய்
கனிந்த காய் தோட்டம் நீதானா..?


சிரிப்பு கற்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கரு வண்டு அடி விழுந்தேன் அதைக் கண்டு.. - அடடடடா..


பிரசன்னா மற்றும் சுப்ரியா ஜோசி பாடிய பாடலில் பிரசன்னாவின் குரலின் நளினம் அழகு.. (அதிலும் பாவம் என் நெஞ்சு.. என்ற இடம்)



04- கம்பி மத்தாப்பு...- சேவற்கொடி

அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்



கவிப்பேரரசு வைரமுத்துவின் எளிமையான வரிகள் - பெண்ணின் ஒவ்வாரு செயலையும் கிராமிய காதலாக்கிய வரிகள் 
சத்தியாவின் தாளம் போட வைக்கும் இசையில் M.L.R. கார்த்திகேயன் தன்னை ரசிகர்கள் ரசிக்கும் பாடகராக நிலைநிறுத்திய பாடல்.

துாங்கி எழுந்தா பிள்ளை அழகு.. அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு..


03- ஜகிட தோம்...- தெய்வதிருமகள்

எந்த நேரத்திலும் உற்சாகம் தரும் பாடல் வரிகள். வரிகளை விழுங்காமல் பாடும் S.P.Bன் குரல் மற்றும் மாயா,ராஜேஸ் ஆகியோரின் இணைக்குரல்கள் என்பவற்றால் முதலில் கவர்ந்த பாடல் படம் வெளியாகிய பின்னர் காட்சியோடு இணைந்தும் பிடித்துப்போனது.
நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விலக்க ஒரு சூரியன் அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்..
இந்த வரிகள் நான் சோர்ந்திருக்கும் போது உற்சாகம் தந்தன. காலம் கடந்தும் என் மனதில் நிலைக்கும் பாடலாக இது மாறியது-மாறும் என்பதே உண்மை
இந்த வருடத்தில் நான் அதிகம் கேட்ட பாடலும் இதுதான்.



02- பட்டாம் பூச்சி..- காவலன்

பொதுவாகவே பாடல்களில் சந்திரன், நிலவு, நிலா முதலிய வார்த்தைகள் வந்தால் என்னமோ தெரியவில்லை உடனேயே எனக்கு பிடித்து விடும். அப்படி ஒரு பாடல்தான் இது. விஜயின் பாடல்கள் எல்லாமே பிடித்தாலும் இப்பாடல் மீது ஒரு தனி ஈர்ப்பு.
காரணம் பாடலை பாடிய இருவரின் குரலிலும் உள்ள வசீகரம். பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்பதில் வரிகளுக்கு இருக்கும் பங்கின் அதே அளவு பங்கு பாடகர்களிடமும் உள்ளது.
முகம் தெரியாத காதலிக்காக ஏங்கும் தன் காதலன்(பரீட்சை நேரத்திலும்) தன்னைப் பற்றியே தன்னிடம் கூறியதும் அவள் மனதில் தோன்றும் இந்த பாடல் படம் வரமுன்னமே பாடலின் இசை,வரிகள்,இவற்றுடன் K.K மற்றும் ரீட்டா வின் குரல் ஆகியவற்றால் கவர்ந்து நின்றது.

“ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்...”
“யானை தந்தத்தின் சிலை நீயே..தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே..” 

காட்சியில் விஜயின் முற்றுமுழுதான மாற்றம்,அசினின் அழகு (படம் முழுக்க அசின் நடிப்பிலும் அழகிலும் மீண்டும் அசர வைக்கின்றார்..) என்பன இன்னும் பாடல் மீதான காதலை துாண்டி விட்டது..!




01- யாரோ நீ....உறை விட்டு வந்த வாளோ.. - உருமி


மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்றோ
ஒளியோ ஒளியின் தெளிவோ பிளிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ..?
வைரமுத்துவின் வைர வரிகளுக்கு மீண்டும் ஒரு சாட்சி.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் பெரும்பாலும் இசையினால் வருடிச் செல்வது அன்றைய நாளில் இருந்து இன்று வரை தொடர்கின்றது. அதில் இப்பாடலும் ஒன்று.
ஹரிகரனின் காந்த குரலுடன் ஸ்வேதா மோகனின் காதல் குரல் இணையும் போது பாடலில் ஒரு ஏகாந்த சுகம் இணைகின்றது.
பாடலின் ஆரம்ப இசை எம்மை ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க முடியாதது. ஆனாலும் கதைக்களம், பாடல் படமாக்கப்பட்ட விதம் இதனை நிருபித்து விட்டது.




காதல் பூக்களின் வாசம் உன் கூந்தல் எங்கிலும் வீசும்
பார்வைகள் எனும் படையெடுப்பாலே பாதத்தில் விழுந்திடும் தேசம்
எனை வெல்லும் பாகம் மிக பெரிது நான் தோற்கும் பாகம் மிகச்சிறிது..
காமம் தாண்டிய முனிவனும் உனது கண்களை தாங்குதல் அரிது..
உன் அழகினால் எனை அழிக்கிறாய்.. நீ ஆடை கொள்ளும் பெண் நெருப்பா..??ஆஹா. என்ன வரிகள் கவிஞரே..


இந்த பாடலின் காட்சியமைப்பையும் மலையாள வடிவத்தையும் பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியினுாடக சென்று பார்க்கவும்..
Urumi Song - Aaro nee aaro

சரி நண்பர்களே.. இவை மட்டுமன்றி இன்னும் பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தாலும் 2012க்கும் நான் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்றால் அவை இவைதான்.
மேலும் நண்பன் திரைப்படத்தின் பாடல்களில் அஸ்க் லஸ்கா..., இருக்காண்ணா.., என் ஃப்ரண்ட போல.., All Is Well ஆகிய பாடல்களும், 3 திரைப்படத்தின் நீ பார்த்த விழிகள்.. பாடலும் என்னை கவர்ந்துள்ளன. இவை 2012ன் பாடல்களின் வரிசைக்குள் இடம்பெறும் என நம்புகின்றேன்.

முடிந்தால் இன்றிரவு மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன். அல்லது மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.



நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,


Continue reading →
Saturday, December 24, 2011

நண்பன் - All Is Well...!

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..!

இன்று இளைய தளபதி விஜய்யின் நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன.  பாடல்கள் வெளியாகிய நேரத்தில் இருந்து இப்போது வரை மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளன ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அமைந்த பாடல்கள் எனலாம்.

இத்திரைப்படத்தில் 6 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன வழமையான விஜய் படங்களை போன்றே. ஆனால் சற்று வித்தியாசமான பாடல்களாக இவை இருப்பது மேலும் ரசிக்க வைக்கின்றது.

இப்பதிவில் நான் அந்த ஆறு பாடல்களினதும் வரிகளை முழுமையாக தரலாம் என வந்துள்ளேன்..
அட சந்தோசத்தை பாருங்கோ.....!!


முதலில் All Is Well...

heartile battery..charge தான் all is well

தோல்வியா tension-ah..சொல்லிடு

all is well..

tight ஆகா lifey ஆனாலும்

லூசாக நீ மாறு

பப்பாளி போலே நீ வாழ்ந்தால்

பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

காட்டு வழியிலே நூலை கண்டால்

all is well

நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்

மாச கடைசியில் kings um தீர்ந்தால்

all is well

துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம் ( heartile battery..charge தான் all is well..)

சரணம் – 1
ஏலே வெல்ல சொக்கா

கையில் என்ன book அஹ ?

zoo கெட்ட cook ah?
scene போடாதே
ஹேலே மக்கா மக்கா
மக்கா நிக்கும் மாக்க
ஒத்த காலு கொக்கா
நீ mark-u கொத்தி நோகாதே


சோடா கோலியா

நீ load மேல load ஏத்த மூளை காலிய

மூளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u

topper என்பதால் hero இல்லை

all is well

topic மாறினால் அவனும் zero
topper-um
joker என்பதால் zero இல்லை
all is well
சீட்டு கட்டிலே நீ தான் hero ( heartile battery..charge தான் all is well..)

சரணம் – 2
நீயும் கூட பிரம்மா

table desk-ah தம்மா ..மாத்தி குத்து கும்மா

tune போடம்மா
students என்ன யம்மா
cell குள்ள sim-ah?..பூட்டி வைக்கலாமா ?
நாம் escape ஆகி போவோமே
bathroom தாபால் இல்லை என்றால்
பாடு பாடேண்டா
ஒரு tms-ah ஜேசுதாஸா ஆவோம் வாயேண்டா
முளையதான் மூட்டை கட்டு
follow your heart-u beat-u root-u

bathroom-u குள் பாம்பு வந்தால்

all is well

தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
all is well

beer-u அடிச்சு தான் தொப்பை போட்டால்

all is well

நீயும் ஆகலாம் police ஏட்டு.. ( heartile battery..charge தான் all is well..)

வரிகள் :- நா.முத்துக்குமார்
பாடியவர்கள் :- ஹேமசந்திரன், முகேஸ்
.....................................................................................................................
.....................................................................................................................
2. இருக்காண்ணா..
இருக்காண்ணா

இடுப்பிருக்காண்ணா

இல்லையானா இலியானா

உன் இடைத்தானாஇன்பக்

கடை தானா மெல் இடைதாண்டி

குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு..!

நான் துத்த நாகத் தகடு..!

உன் ஓதட்டுக்குள் எத்தன ஒதடு..!
ஒன்னு குடு குடு..!

அடி அஞ்சன மஞ்சன மயிலு..!

நீ கஞ்சன் ஜங்கா ரயிலு..!

உன் இடுப்பே ஆறாம் விரலு..!
நீ கிளு கிளு..!

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி

மல்லி வாச மல்லி

உன் மேனி வெண்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி

கிள்ளி கன்னம் கிள்ளி

விளையாட வந்தவன் கில்லி

சரணம் – 1
ஒருவாட்டி இடுப்பாட்டி

மலை இறக்க இறக்கத்துல தள்ளேன்

இடங்காட்டி தடம்காட்டி
என்னை அறக்க பறக்க வந்து
கொல்லேன்

அடங்காட்டி மடங்காட்டி

வாய் உறைக்க உறைக்க முத்தம் வைப்பேன்

படங்காட்டி பயங்காட்டி
நெஞ்சு இறைக்க இறைக்க தப்பு செய்வேன்

நான் சின்ன பையன்

நீ கண்ண வையேன்

நான் சொன்னா செய்யேன்
வா வாயில் வாழ வாயேன்

சரணம் – 2
லயிச்சானா லயிச்சானாஇதழ்

லவங்கம் லவங்கம் கடிச்சானா

இனிச்சானா இனிச்சானா- வாய்
மடலில் கடல் தினிச்சானா..?

கொழுக்கானா மொழுக்கானநல்லா

பழுத்துப் பழுத்து தளுக்கானா

இழைச்சானா குழைச்சானா- ரொம்ப
செதுக்கி செதுக்கி உழைச்சானா

நீ ஜெங்கிஸ்கானா

நீ உன் கிஸ் தானா

நான் மங்குஸ் தானா

உன் கையில் கஜகஸ்தானா..??

வரிகள் :- பா.விஜய்
பாடியவர்கள் :- விஜய் பிரகாஸ், ஜாவிட் அலி, சுனிதி சௌஹான்

.....................................................................................................................
.....................................................................................................................
3. எந்தன் கண் முன்னே..
எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

வரிகள் :- மதன் கார்க்கி
பாடியவர் :- ஆலாப் ராஜ்
.....................................................................................................................
.....................................................................................................................
4. என் ஃப்ரண்ட போல யாரு..
என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டை எல்லாம் மாத்தி வைச்சான்

நீ எங்க போனாய் எங்க மச்சான்
என்னை எண்ணி எண்ணி ஏங்க வைச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தைச்சான்
நம் கண்ணில் நீரை பொங்க வைச்சான்

சரணம் 
தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் துாரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி

உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் பெற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போல நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்..

வரிகள் :- விவேகா
பாடியவர்கள் :- க்ரிஸ், சுசித் சுரேசன்
.....................................................................................................................
.....................................................................................................................
5. நல்ல நண்பன்..
நல்ல நண்பன் வேண்டும் என்று

அந்த மரணமும் நினைகின்றதா..?

சிறந்தவன் நீ தான் என்று
உன்னை கூட்டி செல்ல துடிகின்றதா..?

இறைவனே இறைவனே

இவன் உயிர் வேண்டுமா..?

எங்கள் உயிர் எடுத்துகொள்
உனக்காது போதுமா..?
இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் திண்பதா..?
இவன் சிரித்து பேசும் மொழி
அதை வேண்டினோம் மீண்டும் தா

உன் நினைவின் தாழ்வாரத்தில்

எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா..?

மரணம் எனும் மேவனத்தில்
எங்கள் ஞாபகங்கள் போகவில்லையா..?

இறைவனே இறைவனே

உனக்கில்லை இரக்கமா..?

தாய் இவள் அழு குரல்
கேட்ட பின்பும் உறக்கமா..?

வா நண்பா வா நண்பா தோள்களில் சாயலாம்
வாழ்ந்திடும் நாளெலாம் நான் உன்னை தாங்கவா..?

வரிகள் :- நா.முத்துக்குமார்
பாடியவர் :- ராமகிருஸ்ணன் மூர்த்தி

.....................................................................................................................
.....................................................................................................................
6. அஸ்க் லஸ்கா...
அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ

அஸ்த் அஸ்த் லைபே..

அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..


அத்தனை மொழியிலும் வார்த்தை

ஒவ்வொன்றும் கொய்தேன்

மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்



உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்.



ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே

ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே


ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்

விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்

முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ..


பிளாடோவின் மகனாய் உன் வேடமா?

ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?

பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..


தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்

ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்

கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?


கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்

வெண்வண்ண நிழலை மண் வீசினாய்

புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே


அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா

இஷ்க் இஷ்க் மைலே..

லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ

ஒரு காதல் உந்தன் மேலே..

வரிகள் :- மதன் கார்க்கி
பாடியவர்கள் :- விஜய் பிரகாஸ், சின்மயி, சுவி
.....................................................................................................................
.....................................................................................................................
மதன் கார்க்கி எழுதிய அஸ்க் லஸ்கா.. பாடல் 16 மொழிகளில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளை கொண்டு உருவானது என்பது நீங்கள் அறிந்தது.. அவை எந்த எந்த மொழிகள்..?? என்ன அர்த்தம்..?? என்பது தொடர்பாக அடுத்து பார்ப்போம்..
  • Ask (அஸ்க்)- Turkish
  • Laska (லஸ்கா)- Šløvak
  • Amøur (ஆமோர்)- French/Španish
  • Ai (அய்)- Chinese
  • Ast (அஸ்த்)- Icelandic
  • Liebe (லேய்பெய்)- German
  • Ahava (ஆவா)- Hebrew
  • Bølingø (போலிங்கோ)- Lingala
  • Cinta (சிந்தா)- Malay
  • Ishq (இஸ்க்)- Arabic
  • Meile (மெய்லே)- Lithuanian
  • Løve - Ènglish
  • Ishtam (இஸ்டம்)- Telugu
  • Premam (பிரேமம்)- Malayalam
  • Pyaar (பியார்)- Hindi
  • Kaathal (காதல்)- Tamil
இவை அனைத்துக்கும் ஒரே அர்த்தம்தான்.. அது என்னவென்றால் காதல்....!!
தந்தையின் தேடலில் மகன் கார்க்கி... வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.
வார்த்தை ஒவ்வொன்றும் 
மொத்தமாய் கோர்த்துத்தான்

காதல் செண்டொன்று செய்தேன்


சரி நண்பர்களே, நண்பன் பாடல்களை கேட்டு ரசியுங்கள்.., படம் பொங்கலுக்கு வெளியாகுகின்றது... அதனையும் ரசிப்போம்..

நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,












Continue reading →
Photobucket