எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, June 6, 2011

பேரி்ன்ப பேச்சுக்காரன் லோஷன் - வாழ்த்துப்பதிவு.

6 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

ஒரு வானொலியாளன் மக்களிடையே பிரபல்யமாவது என்பது சாதாரண விடயமன்று.. அவர்களை கவர வேண்டும், குரல் பிடித்திருக்க வேண்டும், தனிப்பட்ட திறமைகள் இருத்தல் வேண்டும்,வித்தியாசமான அணுகுமுறை இருத்தல் வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கெ கொண்ட வானொலியாளன் திரு.A.R.V.லோஷன் அண்ணா.

அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது சூரியன் ஊடாக.. ஆரம்பத்தில் சக்தி யாழில் கேட்கமுடியாமல் இருந்தமையால் சூரியனில் அண்ணா வந்த பின்னர் தான் அவருடைய குரலை நான் கேட்டேன். ஒரு வித ஈர்ப்பு அந்த குரலில் ஒளிந்திருந்தது. அப்போது தரம் 08 படித்துக் கொண்டிருந்தேன். பாடசாலை நாட்களில் காலையிலும் விடுமுறை நாட்களில் தவறாமலும் அண்ணாவின் நிகழ்ச்சியை கேட்பது என் வாடிக்கை. அத்தோடு என் வீட்டினரும் அதில் லயித்திருப்பர் தம் பாடசாலை பணிகளுக்கும் மத்தியில்..

சூரியனில் அண்ணா இருந்த போது அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. சூரியன் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இயங்க ஆரம்பித்த நாளில் அண்ணாவின் குரலைக் கேட்க ஆவலுடன் வானொலிப்பக்கம் சென்றால் ஏமாற்றமே கிடைத்தது. அந்த நேரத்தில் பலர் (பாடசாலை நண்பர்கள் மற்றும் இதர வானொலி ஆர்வமுள்ளவர்கள்) கூறினார்கள் அண்ணா,மற்றும் செந்துாரன் அண்ணா,விமல் அண்ணா,பிரதீப் அண்ணா உள்ளிட்டோர் வெளிநாடு சென்று விட்டனர் என்று.. அதன் பின் என் வானொலி கேட்கும் ஆர்வம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் 2008ல் என் சகோதரியின் திருமணத்திற்காக கொழும்பு சென்றிருந்த சமயம், ஒரு மதிய வேளையில் கொழும்பில் ஒலிக்கும் வானொலிகளை radio வில் தேடிய போது வெற்றி Fm கிடைத்தது. அதன் நிலைய குறு இசையில் அண்ணாவின் குரலை கேட்டதும் பின் விமல் அண்ணா நிகழ்சியை தொகுத்து வழங்கியதையும் கேட்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். நான் வெற்றியில் முதல் கேட்ட பாடல் குசேலன் திரைப்படத்தின் “பேரி்ன்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா..”
அன்றைய தினத்தின் பின் திருமண வேலைகளினால் வெற்றியை கேட்க முடியாமல் போக பின்னர் வெற்றி யாழ் மண்ணில் ஒலிக்க தொடங்கியதும் நண்பனின் தகவலை தொடர்ந்து வெற்றியின் தீவிர ரசிகனாகினேன் லோஷன் அண்ணா மீது இருந்த அன்பினால்,ஈர்ப்பினால்..
அன்றிலிருந்து இன்று வரை வெற்றியின் விடியலை கேட்க தவறுவதில்லை. நான் உயர்தர பரீட்சைக்கு சென்றது கூட நிகழ்ச்சியை அண்ணா ஆரம்பித்த பின்தான்.. வீட்டில் இருக்கும் நாட்களில் விடியல் நிகழ்ச்சி முடிந்த பின்தான் எங்கு செல்வது என்றாலும்.. அந்த அளவுக்கு அவரின் அறிவிப்பு கவர்ந்திருந்தது.

வானொலியாளனாக அவரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் சாதாரணமாக அறிவிப்பாளர்கள் தாமே நிகழ்சிகளை தொகுத்து வந்து வழங்குவர்.ஆனால் அண்ணா நேயர்களிடம் இருந்து கூட விடயங்களை பெற்று நிகழ்ச்சி படைக்கும் வல்லமை கொண்டிருந்தார். பல நேரங்களில் திறமையான நேயர்களை மனமார பாராட்டுவதிலும் தயங்கமாட்டார். நிகழ்ச்சி நேரங்களில் அண்ணாவுடன் தொலைபேசியில் பேசி ஏதோ எனக்கு தெரிந்ததை பகிர்ந்தும் தெரியாததை அறிந்தும் கொண்டு வந்தேன்..வருகின்றேன்.

அறிவிப்பாளராக அறிமுகமான லோஷன் அண்ணாவை சமூக வலைத்தளம் (Facebook) ஊடாக ஓரளவு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல ஞாபகம் 12.08.2010ல் என் முகப்புத்தக நண்பர் வேண்டுகோளை அண்ணா ஏற்றுக்கொண்டார். அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் மறுநாள் உலக இடதுகையாளர்கள் தினம்.அதற்கான சிறு தரவு ஒன்றை அண்ணாவிற்கு Facebook massage ஊடாக அனுப்பியிருந்தேன்.அதனை தொடர்ந்து அதற்கு நன்றியும் பாராட்டையும் கூறிவிட்டு பின் என் நண்பர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அதாவது என்னிடம் ஏதோ இருக்கின்றது என நம்பீட்டார் போல..!ஹி ஹி

அதன் பின்பு அண்ணாவின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றை படித்து படித்து பார்க்கும் போது பதிவு எழுதும் ஆசை எனக்குள் வந்தது. ஆனால் நாம் எல்லாம் எழுதலாமா என்ற தயக்கமும் சற்று இருந்தது. அப்போது தான் பதிவுலகை சேர்ந்த மதிசுதா அண்ணாவின் தொடர்பு கிடைத்தது..அதுவும் முகப்புத்தகம் ஊடாகத்தான். அவரின் உந்துதலில் பதிவுலகினுள் நுழைந்தேன்.. ஏதோ எழுதுகின்றேன்..

லோஷன் அண்ணாவின் மீதான என் பார்வை பரந்து விரிய காரணம் அவரின் பதிவுகள் தான். இன்று வரை அவரின் பதிவை படிக்க தவறியதே இல்லை எனலாம் (காலம் தாழ்த்தியும் கூட).

அண்ணாவை முதன்முதலில் பார்க்கும் வாய்ப்பு கடந்த வருடம் டிசம்பரில் கிடைத்தது. ஆனால் அதற்கு முன் அண்ணா யாழ்ப்பாணம் வந்த போது அண்ணாவை சந்திக்க முயன்றும் முடியாமல் போனது வேதனையாக இருந்தது. அது கடந்த டிசம்பரில் மறைந்தது எனலாம். வெற்றி அலுவலகத்தில் அண்ணாவை சந்தித்து பேசி,பழகும் வாய்ப்பு கிடைத்தது..
அதற்கு முன்னர் கடந்த ஆண்டு மே மாதம் என் சகோதரியின் மகளுக்கு பெயர் வைக்கும் விடயமாக கனடாவில் இருந்து அக்காவின் வேண்டுகோளின் படி அண்ணாவுடன் பேசினேன். ஆனால் அண்ணாவின் வேலைப்பழு அதற்கு இடம்தரவில்லை..சற்று கவலைதான்

பின்பு இவ்வருடம் அவருடன் நான் பழகியது அதிகம் எனலாம்.. உலககிண்ண சுற்றுலா காலத்தில் Facebookல் அடித்த மொக்கைகளும் Comment களையும் அண்ணா மறக்கமாட்டார் என நினைக்கின்றேன். அந்நேரத்தில் தான் வெற்றியின் யாழ் மண்ணில் செய்த முதல் தனியார் ஊடக அனுசரனை ஞாபகம் வருகின்றது..
அண்ணாவின் ஒலிபரப்பில் கவர்ந்த விடயம் காலம் சென்றாலும், வயது ஏறினாலும் (ஆமா ஏதோ 58வயதுதானே) அவரின் குரலும்,தெளிவும்,துல்லியமும் அந்த ஸ்டைலும் மாறாமல் இருப்பதுதான். என் அப்பா அடிக்கடி கூறுவார்..“இவனால மட்டும் எப்படி முடியுது இப்படி எல்லாம் சொற்களுக்கு பஞ்சமில்லாமல் பேச..”என்பார்.

இந்த குரலும்,தெளிவும்,அறிவும் என்றும் மாறாமல் எங்களுடன் இருக்க வேண்டும் என அவரின் பிறந்தநாளான இன்றைய தினத்தில் இறைவனை வேண்டி நிற்கின்றோம் எங்களின் குடும்பத்தின் அனைவரும்.. அண்ணாவிற்காக கனடாவில் என் சகோதரி குடும்பத்தினர் கோவிலில் விஷேட பூஜை நாடத்தினர் என்ற நற்செய்தியையும் இத்தால் தெரிவிக்கின்றேன்..

அத்தோடு இன்றைய தினம் அண்ணாவின் வாழ்வில் மறக்க முடியாத இன்னுமொரு சம்பவம் நடந்த தினமுமாகும்..அதாவது கடந்த 2005ல் இன்று போல் ஒரு தினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி சேகரிக்கும் ”நெஞ்சினிலே நெஞ்சினிலே” இசை நிகழ்ச்சியை தொகுத்து வளங்கியிருந்தார். அதில் பங்கேற்றோர் P.சுசீலா, S.ஜானகி, K.J.ஜேசுதாஸ் இவர்களுடன் மஹதி.
இன்று மற்றுமாரு நிகழ்ச்சி.. வெற்றியின் எம்மால் முடியும் செயற்திட்டத்தின் கீழ் வெற்றிக்காக ஒரு மரம் நடுவோம் என்ற தொனிப்பொருளில் மரநடுகை என்ற புண்ணிய கருமம் இன்று காலை இடம்பெற்றது.

இந்நேரத்தில் அவரின் அன்புக்குரிய நேயர்கள் வழங்கிய பரிசு பெருமதிப்பு வாய்ந்தது எனலாம்.. கொழும்பு நகரின் மிகச் சிறந்த வானொலியாக வெற்றி Fm தெரிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியானதும் வரவேற்கதக்க விடயமும் ஆகும்.
மீண்டும் அண்ணாவிற்கு இனிய 16வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு அவரின் சிறுவயது முதல் இன்று வரையான வரலாற்று பதிவினை புகைப்படங்கள் வாயிலாக ஓரளவு பகிர்ந்து கொள்கின்றேன்.. லோஷன் அண்ணா ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்.


படம்-01,02 :- சிறு வயதில் தல சகோதரர்களுடன்..

பாடசாலைப்பருவம்.
நிற்பவர்களில் முன்வரிசை இடமிருந்து வலம் 06வது..

03Prefects guild A/L 97,98 CHC 
அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து வலம் 05வது..

தொழில்.
வானொலியாளனாக..

ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்புக்கு சென்றிருந்த வேளை..(25TH FEB'07)
திரைக்கதை பிடிக்காமல் பின் விலகியிருந்தார்..வாழ்வின் முக்கிய தருணம்.

சிறுத்தை கார்த்தியின் ரோல் மொடல்.


சிறந்த பேச்சாளனாக..

என் கையில் கிடைத்த முதல் படம்.

யாழில் A.R.V

சாகித்ய அக்டமி விருது கௌரவமான போது..

அன்புள்ள தந்தை.

சிறந்த பந்து வீச்சாளர்.

மூத்த பதிவர்.

அன்பான அன்னையின் பிறந்த தினத்தில்..

வானொலி, தொலைக்காட்சி.-வெற்றிசந்திப்புகள்.
வசீம் அக்ரமுடன் ஹம்பாந்தோட்டையில்..

மைக்கல் வோகனுடன்..

இரு சகல துறை வீரர்களும்..

இந்திய ஊடகவியலாளர் சுச்சி சிறீதர் வெற்றிக்கு வந்த போது..

செந்துாரனின் திருமண நிகழ்வில்.

என் தந்தையின் தெரிவுப் படம்.

மக்களில் மத்தியில்...

வெற்றிக்காக மரம்....

அறிவிப்பாளர் பாடகனானது..

மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
பிறந்த நாளின் பார்ட்டி..(இப்படி இருந்தால் நன்று அண்ணே..)

வாழ்த்துகள் அண்ணா... தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர...
மன்னிக்கவும் பிறந்த நாள் பதிவு பிந்தியமைக்கு..இதில் சுவாரஷ்யம் என்னவென்றால் நேற்றுக்காலை 07.00 மணியளவில் தொடங்கிய பதிவு இரவு 09.00 மணிக்கு பூர்த்தியடைந்தது.. இருந்தும் வெளியிடுவதற்கு முன் ஒரு குட்டித்துாக்கம்  போட்டேன்..(இணைய வேகம் சற்று மோசம்) அது இன்று காலை 04.45 வரை நீடித்து விட்டது..மன்னிக்கவும்.


அண்ணாவின் விருப்பப் பாடல்களில் ஒன்று..


மீண்டும் என் குடும்பத்தினர் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் லோஷன் அண்ணா...

நன்றி.மீண்டும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,

6 Responses so far

 1. உங்கள் பதிவு மூலம் லோசன் அண்ணாக்கு என் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்... பதிவு அருமை...

 2. babu says:

  பதிவு அருமை ஜனகன்....

 3. LOSHAN says:

  ஆகா.. இப்படியும் ஒரு வாழ்த்தா? மிக்க நன்றி தம்பி..
  உங்கள் அன்புக்கு நன்றிகள்.

 4. லோஷன் அண்ணாவுக்கு
  எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

 5. அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...


  லோஷன் அண்ணா மிக்க நன்றி..நீங்கள் எங்களில் ஒருவர்...!!

Leave a Reply