எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, February 21, 2011

என்ன ஒரு ஒற்றுமைகள் - உலக கிண்ண கிரிக்கட்

4 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மகிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற உலக கிண்ண இலங்கை – கனடா அணிகளுக்கிடையிலான போட்டிக்கும் 2007 ம் ஆண்டு உலககிண்ண போட்டி தொடரில் இலங்கையின் முதல் போட்டியான Queen's Park Oval, Port of Spain, Trinidad ல் இடம்பெற்ற பெர்முடா அணிக்கெதிரான போட்டிக்குமிடையில் பல அதிசயமான ஒற்றுமைகள் உள்ளன..

அவை எவை என்பதை இங்கு பகிர்கின்றேன்.

1. இரண்டு போட்டிகளும் இலங்கை அவ்வவ் உலக கிண்ண தொடரில் விளையாடிய முதல் போட்டிகளாகும்.
1.        நாணய சுழற்சி
இரு போட்டிகளிலும் இலங்கையே நாணயசுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

2.        முதல் பந்து
இரு போட்டிகளிலும் முதல் பந்தை எதிர் கொண்டவர் உபுல் தரங்க

3.        முதல் விக்கட் இழப்பு
2007ம் ஆண்டு போட்டியில் இலங்கையின் முதல் விக்கட் 62 ஓட்டங்களுக்கு பறிபோனது. (சனத்)
இம் முறை 63 ஓட்டங்களில் முதல் விக்கட் இழக்கப்பட்டது. (தரங்க)

அத்தோடு இரண்டாவது விக்கட் வீழ்த்தப்பட்ட விதமும் ஆச்சரியம் தருகிறது.
2007ல் 78 ஓட்டங்களுக்கும் இம்முறை 88 ஓட்டங்களுக்கும் 2வது விக்கட் இழக்கப்பட்டுள்ளது.

நான்காவது விக்கட்டை பாருங்கள்..! அதுவும் ஆச்சரியம் தருகிறது
கடந்த முறை 267 ஓட்டங்களில் இழந்த விக்கட் இம்முறை 276 ஓட்டங்களுக்கு இழக்கப்பட்டது. இதில் இரண்டிலும் ஆட்டமிழந்தவர் மகேல ஜெயவர்த்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சார்பில் இழக்கப்பட்ட இறுதி விக்கட்டை பாருங்கள்
கடந்த முறை 316 வது ஓட்டங்களில் 6வது விக்கட்டை இழந்த இலங்கை இம்முறை 314 வது ஓட்டங்களில் 7வது விக்கட்டை இழந்துள்ளது இவ்விரு விக்கட்டுகளும் M வீரர்களுடையதுதான் (2007-maharoof 2011-mathews)
2007 world cup

2011 world cup

4.       மொத்த ஓட்ட எண்ணிக்கை
2007 போட்டியில் இலங்கை 50 ஓவர்களில் 321 ஓட்டங்களை பெற இம்முறை 50 ஓவர்களில் 332 ஓட்டங்களை பெற்றுள்ளது.இரண்டும் அண்மித்த ஓட்டங்கள் தான். ஓட்ட சராசரியும் கிட்டத்தட்ட ஒற்றுமைதான் 2007ல் 6.42 ஆகவும் இம்முறை 6.64 ஆகவும் உள்ளது.
அத்தோடு இருவர் மட்டுமே இரட்டை ஓட்ட எண்ணிக்கையை இரு போட்டியிலும் கடக்கவில்லை.

  
5.        மகேல-சங்கா
இவர்களின் பிரபலமான துடுப்பாட்ட இணையானது இங்கும் பிரதிபலித்துள்ளது.
2007ல் இவர்கள் இணைந்து 3வது விக்கட்டுக்கு பகிர்ந்து கொண்டது சத இணைப்பாட்டம் (150 ஓட்டங்கள்)
2011ல் பெற்றுக்கொண்டது அது 3வது விக்கட்டுக்காக 179 ஓட்டங்கள்.
இதில் மகேல மாத்திரம் இரண்டு போட்டிகளிலும் அதிகபட்ச ஓட்டங்களை பெற்று சாதித்துள்ளார். 2007 போட்டியின் போது 85(90balls) ஓட்டங்களை குவித்த இவர் இம்முறை 100(81balls) ஓட்டங்களை குவித்துள்ளார். அத்தோடு சங்ககாராவும் இரு போட்டிகளிலும் அரைச்சதம் பெற்றுள்ளார் (2007- 76runs 83balls, 2011- 92runs 87balls)



ஆண்டுகள் 4 கடந்தாலும் நாங்கள் நாங்கள்தான்..

6.        வெற்றியும் ஆட்டநாயகனும்.
பந்து வீச்சில் இலங்கை அணி இரு போட்டிகளிலும் எதிரணிகளின் முதல் விக்கட்டை 00 ஓட்டங்களுக்கு வீழ்த்தியதை தொடர்ந்து 2007 போட்டியில் பெர்முடா அணியை 78 ஓட்டங்களுக்குள் சுருட்டி 243 ஓட்டங்களினால் பெருவெற்றியை பதிவுசெய்தது.
இம்முறை கனடா அணியை 122 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி 210 ஓட்டங்களினால் வெற்றியை பதிவு செய்தது இலங்கையணி. இவ்விரு வெற்றிகளும் 200 ஓட்ட வித்தியாசத்தில் பெறப்பட்டுள்ளன என்பதே சிறப்பு.

ஆட்டநாயகனாக நேற்றைய போட்டியில் தெரிவான மகேல ஜெயவர்த்தனா, 2007ம் ஆண்டு இடம்பெற்ற அப் போட்டியிலும் ஆட்டநாயகனாக தெரிவாகியிருந்தார் என்பதும் சிறப்புக்குரிய ஒற்றுமைகள்தான்.
2007 போட்டியில்...
இவை பற்றி மேலும் அறிய...,

சரி இந்த ஒற்றுமைகள் இன்னும் தொடருமா? இல்லையா என்பது கேள்விக்குரியதே..தொடர்ந்தால் மகிழ்ச்சி..ஆனால் இறுதிப்போட்டியில் இந்த ஒற்றுமை வேண்டாம்..!

குறிப்பு:- நேற்றைய போட்டியில் என் ஆதரவு கனடா அணிக்காக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரமின்மையால் பதிவு சிறியதாக வருகிறது..மன்னிக்கவும்
இப்பதிவுக்கான சிந்தனை காலையில் வெற்றியில் விடியல் கேட்டுகொண்டிருக்கும் போது லோஷன் அண்ணா, இன்றைய தினமே (21.02.1996ல் இலங்கை அணி தன் உ.கிண்ண வெற்றி பயணத்தை ஆரம்பித்தது என நேயர் ஒருவரின் கேள்விக்கு பதில் கூறும் போது கூறியிருந்தார். அச்சமயமே இது பற்றி தற்செயலாக cricinfo வில் அறிய ஆரம்பித்தேன்.
படங்கள் தரவுகளை பெற உதவிய Cricinfo தளத்திற்கு நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்
என்றும் அன்பின்,


4 Responses so far

  1. Unknown says:

    எப்பிடி உங்களால மட்டும் ?
    நல்லா இருக்கு பாஸ்.

  2. நன்றாகத் தான் அலசியுள்ளீர்கள் நன்றி..

    சித்தாரா
    முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

  3. தம்பி கண்ணக்குள்ள எண்ணெய விட்டுட்டுப் பாக்கிறிரோ...

  4. ஏன் இன்ட்லியில் இணைக்கல...

Leave a Reply

Photobucket