என்னடா இது புதுசா தலைப்பு இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா...?
பெரிதாக எதுவுமில்லை..! இவ்வருடத்தின் பொங்கல் வெளியீடுகளில் இருந்து ஒரு தொகுப்பு..(ஏதோ நம்மளால முடிஞ்சது..)
முதலில் ஐயயோ..
பெரிய தயாரிப்பு நிறுவனம்,அரசியல் ஆதிக்கம்,உறுதியான விளம்பரப்படுத்தல்கள் என்பவற்றை கடந்து தனுஸ் என்ற இளைஞனின் நடிப்பின் மேல் கொண்ட நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமே ஆடுகளம்.
நம்பிக்கையுடன் ஆர்வத்தை துாண்டியது படத்தில் பாடல்கள்..
அதிலும் ஐயயோ நெஞ்சு அலையுதடி...பாடல்- பிரசாந்தினியின் மனதை மயக்கும் ஹம்மிங்குடன் பாடல் ஆரம்பித்து தொடர்ந்து இசை குடும்பத்தினர் SPB&SPB சரண் இணைந்து கொண்டதும் அப் பாடலில் இருந்து வெளிவர முடியாமல் மறுக்கும் மனம் படும்பாடு இருக்கே...
அந்த சுகத்தை அனுபவிக்க ஐயயோ மனம் அலையுதே...
G.V.பிரகாஸ் பாடலின் இசைக்குள் இருந்து ஒரு காதல் இளைஞனாக(புது மாப்பிள்ளைதானே) வலம் வருகிறார் அடம்பிடக்கும் சிறுவனை போல.
“பூ வாசம் அடிக்கிற காற்று என் கூட நடக்கிறதே...”
“கண்சிமிட்டும் தீயே என்னை எரிச்சுப்புட்ட...” என்ற வரிகள் பாடலின் சரணங்களை முடிக்கும் போது நிலா பொழியும் உணர்வு மனதுக்குள்...!
பாடல் காட்சியை பார்க்க வேண்டும் என தவமிருந்த எனக்கு படம் ஓரளவு வரம் தந்தது..
இதோ அந்த மனதை அலைய விடாமல் கவர்ந்திழுக்கும் பாடலும் காட்சியும்..
அடுத்து செல்லம்..
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு திரைப்படம் சிறுத்தை..!
அண்ணன்(சூர்யா) போல் தம்பி கார்த்தியும் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்த்தும் இறுதியில் சலிப்படைய வைத்ததுதான் மிச்சம்.
ஆரம்பத்தில் பாடல்களை ரசிக்காமல் விட்டாலும் படத்தில் டிரைலர்களில் கேட்டதும் ரசிக்க ஆரம்பித்த பாடல்தான் செல்லம் இந்தா செல்லம்..
பாடல் கவர காரணமாய் அமைந்தவை கார்த்தியின் அழகு,பாடல் காட்சி,இசை இவற்றுடன் தமன்னா..! எனக்கு தமன்னாவை பிடிக்காது என்றாலும் இப்படத்தின் ஏனைய பாடல்களுடன் ஒப்பிடும் போது இடுப்பை கண்காட்சியாக்கும் காட்சிகள் இப்பாடலில் குறைவு என்பதாலோ என்னவோ தமன்னாவை இப்பாடலில் ரசித்தேன்...!(சம வயது தோழியாக)
சுர்முகியின் குரல் குறிப்பிட்டே ஆக வேண்டியது..வம்சம் பாடலின் பின் மீண்டும் நான் ரசித்தேன் இப்பாடலில் இவரின் குரலை.
வரிகள் சாதாரணமாக ஒரு டுயட் பாடலுக்குரிய வரிகள்தான்..பிடித்திருக்கின்றன.
அடுத்தது யாத்தே யாத்தே..
மனதுக்கு பிடித்த அழகான பெண்ணை காதலிக்க தொடங்கும் போது மனதில் உண்டாகும் உணர்ச்சி போராட்டங்களின் இசைவடிவமே இப்பாடல்..
இப்பாடலை பற்றி நான் என்ன சொல்ல..பெரும்பாலான எல்லா பதிவர்களுமே எழுதி தள்ளிய பாடல் இது..இதன் பின் நான் என்ன சொல்லி என்ன புரிய வைக்க..?
அழகான வரிகள்,மனதுள் துள்ளும் இசை,அனுபவிக்க வைக்கும் G.Vன் குரல் என அனைத்தும் +++
பாடல் காட்சியில் தப்ஷியை ஒரு சிறு பிள்ளை அழைக்க அவளும் திரும்பி கையசைத்து விட்டு செல்ல அவளை பின் தொடர்ந்த தனுஸ் அக்காட்சியை கண்டதும் ஒருகணம் திகைப்பார் பாருங்கள்...பலே பிரமாதம் தனுஸ்.
யாரடி நீ மோகினியின் பின் தனுஸின் ஒருதலை காதல் நடிப்பை இப்பாடலில் ரசித்தேன்..
பட்டாம்பூச்சி..
பலத்த போராட்டம்,அரசியல் மட்டுமன்றி பிற எதிர்ப்புகள்,என்ற தடைகளை தாண்டி விளம்பரங்களே இல்லாமல் உண்மையான ரசிகர்களை மட்டுமே நம்பி வெளிவந்த திரைப்படம் தான் காவலன்!
வரிசையான தோல்விகளில் இருந்து வெளிவர இப்படம் விஜய்க்கு மிக முக்கியமாகவே இருந்தது..இதை உணர்ந்து கொண்ட முட்டாள்கள் தங்கள் படம் போல பெரிய விளம்பரம் செய்யப்படுவதை தடுத்தும்,அரசியல் அழுத்தங்களால் மிரட்டியும் பார்த்தனர்.இறுதியில் ரசிகர்கள் முன் விளம்பரங்கள் பிரசாரங்கள் எல்லாம் தவிடுபொடியாகின.
இளையதளபதி விஜய் எப்படியான படங்கள் நடித்தாலும் அவற்றை எல்லாம் ரசிக்கும் ஒரு ரசிகன் நான்..! ஹீரோயிசம் காட்டுகிறார் என குற்றம் சாட்டுபவர்களே! தமிழ் சினிமாவில் ஹீரோயிசம் காட்டாத நடிகரை எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்..
தொடர்ச்சியாக காதல் படங்கள் நடித்தால் “சொக்லட் போய்” குடும்ப படங்கள் நடித்தால் ”ஃபமிலி மான்” என்று முத்திரை குத்திவிடுகிறீர்கள்.அதிலிருந்து மீண்டுவர ஆக்ஸன் படம் நடித்தால் ஹீரோயிசம் காட்டுகிறான் என்கிறீர்கள்..அப்போ அவர்கள் என்னதான் செய்வது.?
ஏன் விஜய் காதல் படங்கள் நடிக்கவில்லையா??
விஜய் நடித்த படங்களுள் காதல் படங்களும் குடும்ப கமர்ஷியல் படங்களும் தான் அதிகமானவை. இப்படி இருக்கையில் ஆக்ஸன் படம் நடித்தால் என்ன தவறு??
சரி அதெல்லாம் போகட்டும்..“பலம் பலவீனத்தை அடக்குவது நாட்டுக்கல்ல காட்டுக்குதான்...மனிதர்களை அன்பால் அடக்கணும்” என்ற காவலன் பட வசனம் ஒன்றே போதும் இவை அனைத்துக்கும்.
இனி விசயத்துக்கு வருவோம்..
ஆண் கொண்டுள்ள மரியாதை ஒரு பெண் தன் காதலை அவ் ஆணிடம் வெளிப்படுத்த விடாமல் செய்யும் பரிதாபத்தை உணர்வு பொங்க சொல்லிய திரைப்படம் காவலன்.
இதில் என்னை கவர்ந்த பாடல்கள் இரண்டு!
ஒன்று “விண்ணைக் காப்பான் ஒருவன்...”
இரண்டு “பட்டாம் பூச்சி கூப்பிடும் போது..”
முதலில் பட்டாம் பூச்சி..பாடலை பார்ப்போம்..
முகம் தெரியாத காதலிக்காக ஏங்கும் தன் காதலன்(பரீட்சை நேரத்திலும்) தன்னைப் பற்றியே தன்னிடம் கூறியதும் அவள் மனதில் தோன்றும் டுயட் பாடல்தான் இது..
படம் வரமுன்னமே பாடலின் இசை,வரிகள்,இவற்றுடன் K.K மற்றும் ரீட்டா வின் குரல் ஆகியவற்றால் கவர்ந்து நின்றது இப்பாடல்.
“ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்...”
“யானை தந்தத்தின் சிலை நீயே..தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே..” போன்ற வரிகள் அபாரம்.
பல இடங்களில் K.K யின் குரல் பிரமாதம்...தன்னை மறந்து முணுமுணுங்க வைக்கும்..
காட்சியில் விஜயின் முற்றுமுழுதான மாற்றம்,அசினின் அழகு (படம் முழுக்க அசின் நடிப்பிலும் அழகிலும் மீண்டும் அசர வைக்கின்றார்..) என்பன இன்னும் பாடல் மீதான காதலை துாண்டி விட்டது..!
விண்ணைக் காப்பான் ஒருவன்....
பொதுவாகவே விஜய் திரைப்படத்தின் முதல் பாடல் கலக்கலாகவே இருக்கும்..இதுவும் அப்படியே..
வேகமான இசை,திப்புவின் குரல்,நல்ல வரிகள் என எல்லாம் கச்சிதமாய் பொருந்தியிருந்தது..
பாடல் காட்சியை பொறுத்தவரையில் படம் ஆரம்பித்து நீண்ட நேரத்தின் பின் பாடல் முதல் பாடலாய் வருவதும்,ஆர்ப்பாட்டமற்ற நடனம்,படமாக்கப்பட்ட இடம்,பாடல் முடிய காட்சியும் முடியாமல் அப்படியே தொடர்வதும், ஏனைய பாடல்கள் போலல்லாமல் முதல் பாடலிலேயே கதாநாயகி இருப்பது என அனைத்தும் செதுக்கல்..!
(படத்தில் எல்லா பாடலிலும் அசின் இருப்பது என்னை கவர்ந்த இன்னொரு விடயம்)
எப்படி என் ரசனை......!
சரி என் இம்மாதத்திற்கான இறுதி பதிவில் மீண்டும் சந்திப்போம்..
நன்றி..
என்றும் அன்பின்,

ஐஐயோ நெஞ்சு அலையுதடி...
ஆகாயம் இப்போ வளையுதடி..
என் வீட்டில் மின்னல் ஒழியுதடி..
என்மேல நிலா பொழியுதடி.
டாப்பு...(Top)
அருமை! 'யாத்தே யாத்தே' பாடலை நேற்றுத்தான் பார்த்தேன்!
யாத்தே யாத்தே பாடல் அருமை ஆனால் காட்சியாக என்னைக் கவர்ந்தது "ஒத்த சொல்லாலே " உங்கள் பார்வை அருமை
பாடல் தெரிவுகள் எனக்கும் பிடித்தது...