எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Sunday, January 23, 2011

127 Hours எதிர் 127 Second

8 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

டேனி பாயல் - ஏ.ஆர்.ரஹ்மான் தான் 'ஸ்லம்டக் மில்லியனர்' திரைப்படத்தின் நாயகர்கள் என படம் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். திரைக்கதை நேர்த்தியும், பிண்ணனி இசையும் இணைந்து அனைவரினது கவனத்தையும் ஈர்த்தெடுத்தது அத்திரைப்படம்.
அப்படியான இரு இமயங்கள் இணைந்த புதிய திரைப்படம் 127 HOURS. முன்னைய திரைப்படத்தினை போலவே சிறப்பாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினை பன்மடங்கு பூர்த்தி செய்திருக்கிறார்கள் இருவரும். ஸ்லம்டக் மில்லியனர் அளவுக்கு எக்கச்சக்க பாடல்கள் இல்லையென்றாலும் இப்படத்திற்கு இசையமைத்த ஒரே பாடலிலேயே (If I RISE..) அமெரிக்க ரசிகர்கள் தெரிவு விருதுக்கு தெரிவானார் ஏ.ஆர்.ரஹ்மான்.

படத்தின் இடைநடுவே வரும் பின்னணி இசையில் இந்திய இசைக்கலவையை புகுத்தி ஆசிய இசைக்கும் பெருமை சேர்த்திருந்தார் இசைப்புயல். படமும் சூப்பர் ஹிட்டாக ஓடத்தொடங்கியிருந்தாலும், இப்படத்தின் ஸ்பூஃப் (Spuf) மீள்பிரசுரமாகி படத்தை விட சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது அதியச உண்மை.
127 Hours இன் அடிப்படை கதையை அப்படியே கார்ட்டூனாக 2006லேயே எடுத்துவிட்டோம் என நக்கலடிக்கிறது இவ்வீடியோ! அதை இங்கு பார்த்துவிட்டு சொல்லுங்களேன்....!127 Hours திரைப்படத்தின் Trailer
இக்கார்ட்டூன் வெளியீட்டாளர்கள் Mondo Mini Shows உரிமையாளர்கள். பொதுவாக சிறுவர்களுக்காகத்தான் கார்ட்டூன் திரைப்படம் உருவாக்கப்படும். ஆனால் சிறுவர்கள் நிச்சயம் பார்க்க கூடாது என வெளிவந்த கொஞ்சம் வன்முறையான புதிய கார்ட்டூன் வகையையே மொண்டோ மினி ஷோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்பூஃப் வீடியோ YouTube ன் அதிகம் பார்வையிடப்பட்ட அனிமேஷன் எனும் பெருமையும் இப்போது பெற்றுக்கொண்டுள்ளது. இதுவரை இதனை பார்வையிட்டவர்கள் 18,924,933 பேர். விரும்பியதாக தெரிவு (Like) செய்தவர்கள் 31,875 பேர்.
நன்றி:-Tamil Media இணையதளம்
மீண்டும் சந்திப்போம்..
என்றும் அன்பின்,

8 Responses so far

 1. Jana says:

  ஆஹா.. இப்படியும் ஒன்று இருக்கா என்ன? வித்தியாசமான பதிவு. புதியதும்கூட. நன்றி.

 2. KANA VARO says:

  படத்தை தவற விடாமல் பார்க்கணும்..

 3. தகவலுக்கு நன்றிகள்!

 4. நல்லாயிருக்கு.

 5. pபடம் எண்ணமும் பார்க்க வில்லை.

  ஆனால், ரகுமானுக்கு ஒஸ்கார் கிடைக்கணும்

 6. அருமை..பார்ப்போம் ஒஸ்கார் கிடைக்குதா எண்டு

 7. அருமையாக வடித்துள்ளீர்கள் நன்றி தம்பி..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

 8. அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள்.

Leave a Reply