எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Wednesday, January 5, 2011

திருடிய இசை

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
அன்று முதல் இன்று வரை இசை என்பது என்னவோ ஒன்றுதான்...அவை வெளிப்படும் விதம் தான் வேறுபடுகின்றது..தாளம்,மெட்டு,என்பவற்றின் ஊடாக இதன் வேறுபாட்டை அறிகின்றோம்.
ஆனால் இன்று, ஒரே மெட்டில் இன்னொரு பாடல் அதாவது Remix வடிவில் உருவாகி-உருவாக்கப்பட்டு வருகின்றது.
இது இன்று தான் என்றால் அது தவறு.

1996ல் தமிழில் வெளிவந்த, சுந்தர்.c இயக்கத்தில் “நவரச நாயகன்” கார்த்திக் கதாநாயகனாகவும், ரம்பா நாயகியாகவும் நடித்த “உள்ளத்தை அள்ளித் தா” திரைப்படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பார்த்திருப்பீர்கள்..
இத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சிற்பி.
சிற்பியின் இசையில் மனோ சுஜாதா இணைந்து பாடிய கலக்கல்-காதல்-உறவு பாடல்தான் “சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு....” என்ற பாடல்.
அழகிய வரிகள், இதமான இசை, அழகான காட்சியமைப்பு இப்பாடலை ரசிக்கும் படி செய்தது.
இந்த வரிகளை கவனியுங்கள்...!
ஆண் :- வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும்
பூமியெல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா..

பெண் :- நீ எனக்கு தந்த மதி உன் மடியில்
கிடைக்கும் நிம்மதிதான் என்று
உந்தன் காதில் வந்து சொல்லவா..
பாடலை கேட்க பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள் 

பாடலை கேட்டும் பார்த்தும் ரசித்திருப்பீர்கள்.


ஆனால் இப் பாடலின் இசையின் மூல வடிவம் எடுக்கப்பட்டது 1987ல் வெளிவந்த Mera Laung Gawacha என்ற பஞ்சாப் மொழி திரைப்படத்தின் “பிச்சி பிச்சி...” என்ற பாடலில் இருந்து..இத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷாலிமர் குலாம் அலி (Shalimar Ghulam ali) என்பவர்.
அவரின் புகழ் பெற்ற உருது மொழி பாடல் இதோ..

கேட்டீர்கள் தானே...எப்படி இரு பாடல்களும்...?
இதில் இன்னொரு உதிரி தகவல், இந்த ஒரிஜினல் பாடல் அண்மையில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வடிவ பாடல்


மீண்டும் சந்திப்போம்..
என்றும் அன்பின்,

10 Responses so far

  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

  2. நல்ல தகவல் தம்பி அனால் இப்போ பார்க்க முடியல அதிகாலை பார்க்கட்டுமா..???

  3. தம்பி வாக்கப்பட்டை இணைத்தால் இன்னும் வருகையாளர் கூடும்...

  4. Original பாட்டு மொழி தெரியாவிட்டாலும் கொடுக்கும் கிக் அதிகம்

  5. நல்ல தகவல் ஜனகன்

  6. Jana says:

    அருமை அண்ணா.

  7. அட நல்லத் தகவல்
    பொதுவாகவே சிற்பி அரபி இசையிலிருந்துதான் உருவுவார் இங்கே உருது பாடல்

  8. @ம.தி.சுதா said...:-
    நன்றி அண்ணா....படித்தேன்...
    இதோ செய்து விட்டேன்...
    உங்கள் உதவி தேவை

    @யோ வொய்ஸ் (யோகா) :-
    நன்றி அண்ணா...ம்ம்ம் உண்மைதான்

    @Harini Nathan said...:-
    நன்றி சகோதரி

    @ Jana said...:-
    நன்றி அண்ணா

    @தர்ஷன் said...:-
    நன்றி அண்ணா...அதென்னவோ உண்மைதான்...

  9. Unknown says:

    சூப்பர் அண்ணா! ஏன் இன்ட்லில இணைக்காமல்?

Leave a Reply

Photobucket