எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, January 1, 2011

கடந்து சென்றது 2010.....

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
2009ன் பதற்றங்கள்,பரபரப்புக்கள்,சர்ச்சைகள் என்பவற்றை தொடர்ந்து அமைதியாக பிறந்தது 2010
ஜனவரி 01 தொடக்கம் டிசம்பர் 31 வரை எம்மை கடந்து சென்ற இவ்வாண்டு பதிந்து சென்றவற்றில் என் மனதில் பதிந்தவை-மனதை பாதித்தவை என்ற சில காலப் பதிவுகளை இப் பதிவில் இடுகின்றேன்..

JANUARY
01:- இலங்கையின் மலையக அரசியல் வாதி திரு.பெ.சந்திரசேகரன் மரணம்.
05:- சூரியக் குடும்பத்தில் 5 புதிய கோள்கள் கெப்லர் விண் தொலைகாட்டியினால் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றுக்கு கெப்லர் 4b,5b,6b,7b,8b என பெயரிட்டனர் விஞ்ஞானிகள்

13:- கெய்டி தீவில் போட் ஒவ் ஃபிறின்ஸில் 7.0 ரிக்டர் அளவில் பதியப்பட்ட நில நடுக்கம்..இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணித்ததுடன் பலர் நிர்க்கதியானார்கள்.
15:- இவ்நுாற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம் “கங்கண சூரிய கிரகணம்” உண்டானது.
17:- இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் மேற்குவங்க முதலமைச்சர் திரு.ஜோதி பாசு மரணம்.
26:- இலங்கை ஜனாதிபதி தேர்தல்
மகிந்த ராஜபக்ஸ- 6,015,934 வாக்குகள் பெற்று வெற்றி
சரத் பொன்சேகா- 4,173,186 வாக்குகள்

FEBRUARY
01:- இசைப்புயல் A.R.ரகுமானுக்கு இரு கிராமி விருதுகள் வழங்கப்பட்டது.
09:- மூத்த பாரம்பரிய  கலைஞர் திரு.செல்லையா மெட்ராஸ் மயில் (52 வயது) அவர்கள் காலமானார்.
20:- “பல்கலை கலைஞர்” திரு. ஸ்ரீதர் பிச்சையப்பா (47வயது) அவர்கள் மரணமடைந்தார்.
24:- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் தனிநபர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டமான 200 ஓட்டங்களை தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்றார்.
27:- சிலியில் 8.8 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்.




MARCH
02:- சுவாமி நித்தியானந்தாவின் லீலைகளை சன் தொலைக்காட்சி அம்பலமாக்கியது.
04:- தாய்வானில் 6.4 ரிக்டர், 6.8 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவு.
07:- ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன
சிறந்த திரைப்படம்- the Hurt Logger
சிறந்த இயக்குனர்- Katharin Bigalo
13:- உலக கிண்ண ஹாக்கி போட்டியில் ஜேர்மனியை 2-1 goal கணக்கில் வென்று அவுஸ்திரேலியா சம்பியன்.

21:- ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு.

APRIL
08:- 14வது இலங்கை பாராளுமன்ற தேர்தல்
ஐ.ம.சு.கூ- 144 ஆசனங்கள்
ஐ.தே.மு- 60 ஆசனங்கள்
த.கட்சி- 14 ஆசனங்கள்
ஜ.தே.கூ- 07 ஆசனங்கள்
10:- ரஸ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லேக் காச்சின்ஸ்கி Lech Kaczyński இறப்பு. இவ்விபத்தில் அவரின் மனைவி உட்பட 80 பேர் கொல்லப்பட்டனர்.
14:- சீனாவின் சிங்காய் Qinghai மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
15:- ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம்..விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17:- பெங்களுரில் I.P.L போட்டிகளின் போது குண்டு வெடித்ததில் 08 பேர் காயமடைந்தனர்.
22:- சுவாமி நித்தியானந்தா இமாச்சல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
25:- I.P.L-3 ன் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
CSK 168 (20 over)
MI 146/9 (20 over)

MAY
06:- பிரித்தானிய பாராளுமன்ற தேர்தல்
டேவிட் கமருன் வெற்றி பெற்று மே 10ல் பதவியேற்றார்.



08:- யாழ் இந்து கல்லுாரி vs கொக்குவில் இந்து கல்லுாரி இடையிலான Battle of the Hindus போட்டியில் கொக்குவில் இந்து கல்லுாரி 08 விக்கட்டுகளால் வெற்றி.
09:- இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.
16:- ICC T20 World Cup இங்கிலாந்து 07 விக்கட்டுகளால் அவுஸ்திரேலியாவை வென்று சம்பியன்.
22:- செயற்கை செல் கண்டுபிடிப்பு.

JUNE
07:- பாக்கிஸ்தானில் Phet புயல் வீசியதில் பலத்த வெள்ளப் பெருக்கு.
11:- உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் தென்னாபிரிக்காவில் கோலாகல ஆரம்பம்
22:- ஃபர்வேஸ் மகருவ் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கட்ரிக் சாதனை.
23:- உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஆரம்பித்து 27 ம் திகதி முடிவடைந்தது.
அவுஸ்ரேலியாவின் முதல் பெண் பிரதமராக Julia Gillard பதவியேற்பு.
24:- நீண்ட நேரம் இடம்பெற்ற டெனிஸ் போட்டி.- அமெரிக்காவின் John Isner defeated க்கும் பிரான்ஸின் Nicholas Mahut க்கும் இடையில் (70-68 செட்) 11 மணித்தியாலம் 5 நிமிடங்கள் கடும் போட்டி.
*ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா வெற்றி.
27:- யாழ் இந்து கல்லுாரி vs கொழும்பு இந்து கல்லுாரி இடையிலான North vs South போட்டியில் கொழும்பு இந்து கல்லுாரி 66 ஓட்டங்களால் வெற்றி.

JULY
04:- டோனி – சாக்ஸி சிங் ராவத் திருமணம்
11:- உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று சம்பியன்.



22:- முத்தையா முரளீதரன் ரெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 800 விக்கட் கைப்பற்றி சாதனை. அத்துடன் இப் போட்டியுடன் ரெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு.


25:- விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் இராணுவ குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட ஆரம்பித்தது.
30:- Voice of Asia நிறுவனம் மீதான தாக்குதல்.
வெற்றி Fm மற்றும் சகோதர வானொலிகளின் செய்தி பிரிவின் மீது காடையர்கள் தாக்கி தீ மூட்டிய கறுப்பு நிகழ்வு.

AUGUST
08:- பிடல் காஸ்ரோ மீண்டும் பாராளுமன்றில் உரையாற்றினார்.
19:- ஈராக்கில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா அறிவிப்பு.
*வெற்றி fm நிறுவனத்தின் பணிப்பாளராக திரு A.R.V.லோஷன் அவர்கள் பதவி உயர்வு பெற்றார்.
28:- நிலவில் பிளவுகள் தோன்றி நிலவு சுருங்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.






29:- இந்தோனேசியா சுமாத்திராவில் சினாபுங் எரிமலை வெடித்தது.

SEPTEMBER
08:- இலங்கை அரசியல் யாப்பில் 18வது அரசியலமைப்பு சீர்திருத்தம் 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டு இணைப்பு.
தமிழ் நடிகர் முரளி (46வயது) மாரடைப்பால் மரணம்.

12:- தமிழ்,தெலுங்கு,மலையாள பின்ணணி பாடகி சுவர்ணலதா நுரையீரல் பாதிப்பால் மரணம்.
22:- தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டு நிறைவு.
26:- டைட்டானிக் திரைப்படத்தின் வயது முதிர்ந்த பாத்திரத்தின் நாயகி Gloria Stewart (87 வயது) மரணம்.



30:- இந்திய இசையமைப்பாளர் திரு சந்திரபோஸ் மரணம்.

OCTOBER
06:- சச்சின் டெண்டுல்கர் இவ்வாண்டின் சிறந்த வீரராக ICC இனால் தெரிவு.
10:- சிலியில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்.

13:- சிலியின் San Jose சுரங்கத்தில் 70 நாட்களாக சிக்கியிருந்த 33 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சாதனை.

NOVEMBER
01:- பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதுடைய டில்மா ருசெஃப் (Dilma Rousseff) தெரிவு.
05:- இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்ததில் 125 மக்கள் இறப்பு.
*அவுஸ்திரேலியாவில் வைத்து ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.
06:- அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா, இந்தோனேசியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
12:- ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் பிரமாண்டமாக ஆரம்பம்.-நவம்பர் 27ல் முடிவுற்றது.
13:- மியன்மாரின் எதிர்கட்சி தலைவி ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டார்.

16:- இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் காதலி கேற் மிடில்டன் (Kate Middleton) இருவரும் தம் திருமணத்தை அறிவித்தனர்.
19:- இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2 வது ஜனாதிபதி பதவி காலத்திற்கான பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

DECEMBER
07:- விக்கி லீக்ஸ் ஸ்தாபகர் Julian Assange லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார்.

14:- நீதிமன்ற விசாரணையின் பின் Julian Assange பிணையில் விடுதலையானார்.
19:- சச்சின் டெண்டுல்கர் ரெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தன் 50 சதத்தை பதிவு செய்தார். 50 சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
22:- நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோட்டன்  சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன உலக மரபுரிமை பிரதேசமாக பிரகடனபடுத்தப்பட்டது.
30:- பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வின் “விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நுால் வெளியீடு.

இப்படியாக மகிழ்ச்சி, துக்கம் என்பவற்றை பகிர்ந்த 2010 எம்மை விட்டு சென்று விட்டது….
நம்பிக்கையோடு வரவேற்போம் 2011 ஐ.....


அனைத்து நண்பர்களுக்கும் என் ......

10 Responses so far

  1. Bavan says:

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா..:)

    நீங்கள் டயரி எழுதுறனீங்களா?
    எப்பிடி 12 மாதமும் தொடர்ந்து எழுதுறது? #டவுட்டு

  2. ha ha ha....நன்றிகள் நண்பா...

    டயரி எழுதும் அளவிற்கு பொறுமை இல்லை...இருந்தாலும் இப்படியான விடயங்களை குறித்து வைத்துக் கொள்வேன்...
    இது என் கல்லுாரியில் நான் பெற்ற பெரு விடயம்..எங்களின் நுால் வெளியீடு செய்யும் போது இப் பழக்கம் எனக்கு உதவியது...ஆகவே இன்னும் தொடர்கின்றேன்...

  3. test says:

    Nice! :-)
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  4. //இருந்தாலும் இப்படியான விடயங்களை குறித்து வைத்துக் கொள்வேன்...
    இது என் கல்லுாரியில் நான் பெற்ற பெரு விடயம்//

    அப்படியா ரொம்ப நல்லப் பழக்கம் ஜனகன் தொடரவும்

  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!)

  6. @ ஜீ...:-
    நன்றிகள் நண்பா..புத்தாண்டு வாழ்த்துகள்

    @தர்ஷன்:-
    நன்றி அண்ணா..

    @ Harini Nathan:-
    நன்றி சகோதரி...புத்தாண்டு வாழ்த்துகள்

  7. sinmajan says:

    அட..நான் கல்லூரியிலுருந்து இப்படியொரு பழக்கத்தைப் பெறாமல் விட்டு விட்டேனே..!! ;)

    நல்ல தொகுப்பு

  8. ஆகா ஜனகனின் டயறி என தலைப்பிடலாமோ.. நல்ல பல தகவல்கள்.. அருமை.. வாழ்த்துக்கள் தம்பி...

  9. ///sinmajan said...
    அட..நான் கல்லூரியிலுருந்து இப்படியொரு பழக்கத்தைப் பெறாமல் விட்டு விட்டேனே..!! ;)

    நல்ல தொகுப்பு///

    நன்றி அண்ணா

  10. ///ம.தி.சுதா said...
    ஆகா ஜனகனின் டயறி என தலைப்பிடலாமோ.. நல்ல பல தகவல்கள்.. அருமை.. வாழ்த்துக்கள் தம்பி...///////////

    ரொம்ப நன்றி அண்ணா...

Leave a Reply

Photobucket