எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, December 6, 2010

என் அன்புச் சகோதரி…

4 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
என் அன்புச் சகோதரியான தர்ஷிகா அவர்கள், இன்று 27 வயது முடித்து 28வது வயதில் கால் பதிக்கின்றார்..ஆகவே இன்றைய 27 வது பிறந்த தின நாளில் இந்த அன்பு தம்பி தன் இப்பதிவின் ஊடாக தன் வாழ்த்தினை அக்காவிற்கு தெரிவிக்கின்றான்.....


1983 டிசெம்பர் மாதம் 06ம் திகதி காலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திரு திருமதி சிவஞானம் பாக்கியம் தம்பதியினருக்கு இறைவன் அருளால் ஒரு பெண் குழந்தையாய் பிறந்தவள் என் அக்கா..

சத்திரச்சிகிச்சை மூலம் இடம்பெற்ற அந்த மகப்பேற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் திருவாளர் “வைத்திய கலாநிதி” சபாரட்ணம் அவர்கள்.
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பிய பெற்றோர்கள் அக் குழந்தைக்கு தம்-எம் உறவுகள் நண்பர்களுடன் கலந்தாலோசித்த பின் “தர்ஷிகா”(Tharshika) என்ற பெயரினை சூட்டினர்..

சிறு வயதிலேயே சுட்டிப் பெண்ணாக இருந்த இவர், பெற்றோர்கள் வெளிமாவட்டங்களில் ஆசிரிய பணிகளில் இருந்த காரணத்தால் அம்மாவுடன் வவுனியாவில் வசிக்க தொடங்கினார்...வவுனியா பாவற்குளம் மகா வித்தியாலயத்தில் அம்மா கல்வி கற்பித்ததால் அங்கு இருந்த பிற ஆசிரியர்களின் பாசத்தை தன் அழகிய சிரிப்பாலும் சுட்டித்தனத்தாலும் முழுமையாக பெற்றுக்கொண்டது மட்டுமன்றி அப் பாடசாலை மாணவ மாணவிகளின் பாசத்தையும் அன்பையும் வாரி சுருட்டிக் கொண்டார்.
இவரை துாக்கி, இவருடன் பேசி, விளையாடுவதற்கென பாடசாலை முடிவுற்றதும் ஆசிரியர்கள் பலரும் மாணவர்களும் ஆசிரியர் தங்கும் விடுதிக்கு வருவார்களாம்....

இப்படியாக குறும்புத்தனத்துடனும் செல்லமாகவும் வளர்ந்த இவர் தன் முதல் வயது நிறைவையடுத்து,
தம் மகளின் முதல் பிறந்த தினத்தை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என எண்ணிய பெற்றோர் யாழ்ப்பாணம் திரும்பினர்..அதன் பின் அம்மா வவுனியாவில் இருந்து இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் ஆவரங்கால் மகாஜன வித்தியாலயத்தில் கடமையாற்றினார். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்ற நிகழ்வுகளால் தன் வவுனியா உறவுகளை பிரிய நேரிட்டது.
இருப்பினும் சொந்த ஊருக்கு திரும்பியதால் தம் உறவுகள் சுற்றத்தாருடன் வாழும் பாக்கியம் தர்ஷிக்கு கிடைத்தது.

சிறு வயதிலேயே ஓடி ஆடி திரிந்து குறும்புத் தனத்துடன் அந்த இந்த வேலைகளை செய்த இவர் தன் 4 வயதில் முன்பள்ளியில் இணைந்து தன் கல்வி வாழ்க்கையை ஆரம்பித்தார்.
1989 ஜனவரி மாதம் யா/அச்சுவேலி சென்.தெரேசா மகளிர் கல்லுாரியில் தரம் 01 கல்வியை ஆசிரியை செல்வி.இ.இராஜமலர் அவர்களை வகுப்பாசிரியராய் கொண்டு ஆரம்பித்ததன் ஊடாக தர்ஷிகா பாடசாலை கல்வியில் தன்னை இணைத்துக் கொண்டார்.(அக்காலத்தில் அம்மாவும் அங்கேயே பணியாற்றினார்...)
“அந்த சிறு வயதிலேயே பாடசாலைகளில் நடைபெறும் போட்டி நிகழ்வுகளில் தானே முன் சென்று பங்கு கொள்ளும் தர்ஷிகாவை இன்னும் ஞாபகப்படுத்துவேன்” என்று ஆசிரியை இராஜமலர் அவர்கள் கூறுவார்.
         தரம் மூன்றில் கல்வி கற்கும் போது (1991) விடுதலைப்புலிகள் அமைப்பு அன்று யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கிடையில் பகுதி பகுதியாக நடாத்திய மாவீரர் தின பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தன் கணீா் என்ற தெளிவான குரலில் பேசி கோட்ட மட்டத்தில் வெற்றி பெற்று பரிசையும் சான்றிதழையும் பாராட்டையும் பெற்றார். நாட்டு சூழ்நிலைகளால் இப்போட்டி தொடர்ந்து வலய மட்டம் மாவட்ட மட்டம் என நடைபெறவில்லை. இவ்விடத்தில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் இதுவே அக்காவின்
முதல் போட்டி
முதல் பேச்சு
முதல் வெற்றி என்பதே...

அன்று ஆரம்பித்த இவரின் கலை செயற்பாடுகள் தமிழ் மொழி மூல பேச்சு,கட்டுரை,படைப்பாக்கம் ஆங்கில மொழி மூல பேச்சு,கட்டுரை,படைப்பாக்கம்,கிரகித்தல் என்பவற்றுடன் நடனத்துறையும்(பரதம்) இவரை பாடசாலை மட்டத்தில் இருந்து கோட்ட மட்டம்,வலய மட்டம் வரை அழைத்துச் சென்றது...

1993ல் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் 162 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் தரம் 06 ல் இணைந்து இடைநிலைக்கல்வியை தொடர்ந்து மேற்கொண்டார்...அங்கு தனது ஆங்கில அறிவை மேம்படுத்திய தர்ஷி 1999 G.C.E (O/L) பரீட்சையில் 9D,C பெறுபேற்றை பெற்றுக்கொண்டார்.
உயா்தரத்தில் உயிரியல்(BIO)பிரிவில் கல்வியை அங்கேயே தொடர்ந்த தா்ஷி 2002 G.C.E (A/L) பரீட்சையில் 3C பெறுபேற்றை பெற்றுக்கொண்டார்.

ஆயுள்வேத துறைக்கு பல்கலைகழக அனுமதி கிடைத்த போதிலும் 2005ல் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லுாரியில் ஆங்கில பட்டப்படிப்பை மேற்கொண்டார்..பட்டப்படிப்பை முடித்த பின் 2008ல் யாழ்ப்பாணம் புத்துார் ஸ்ரீ சோமஸ்கந்தக் கல்லுாரியில் ஆசிரிய பணியை ஆரம்பித்தார்.
கல்வியியல் கல்லுாரியில் இருந்த போது அங்கு விளையாட்டு துறையிலும் மிளிர்ந்தார்.. அத்தோடு பிரிவுகளுக்கிடையில் இடம்பெற்ற நாடக போட்டியில் ஷேக்பியரின் புகழ் பெற்ற “ஒதலோ” நாடகத்தில் நடித்து அந்த நாடகம் வெற்றி பெற காரணமாய் இருந்தார்..
         இவ்விடத்தில் இவரின் பாடசாலை,கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அக்காவின் நண்பிகளான நாரயணி,திருமகள்,தர்ஷிபா,சிவசங்கரி,துஸ்யந்தி,பிரஷாந்தி,கார்த்திகா,டாருணி,தாட்சாயணி,சங்கீதா,ஆர்லின்,இந்திகா,தயானி(happy birth day dhayani அக்கா-06.12) ஆகியோருக்கு என் நன்றிகள்..இன்னும் பல நண்பிகளின் பெயர் விபரங்கள் எனக்கு தெரியவில்லை..மன்னிக்கவும்..!
இந்நிலையில் அக்காவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை நம் பெற்றோர் மேற்கொண்டதற்கிணங்க 21/08/2008 ல் நாவற்குழி கிழக்கை சொந்த இடமாகவும் Scarborogh,Canada வில் வசித்து வரும் திரு திருமதி தியாகராஜா தம்பதியினரின் மைந்தன் திரு.மணிமாறன் அவர்களுக்கும் எம் இல்ல திருமகள் தர்ஷிகா அவர்களுக்கும் Colombo-12 Brighten Rest திருமண மண்டபத்தில் இனிதே திருமணம் நடைபெற்றது.. இவ் மங்கள நிகழ்வினால் செல்வி தர்ஷிகா சிவஞானம், திருமதி தர்ஷிகா மணிமாறன் ஆனார்.
21/08/2008 அன்று திருமணம்

23/08/2008அன்று திருமணப்பதிவில் அப்பா,அம்மா,தம்பி&மாமி உடன் மணமக்களாய்..


2009ல் கனடா சென்ற அக்கா இன்று “சங்கவி” என்னும் அழகிய பெண் குழந்தைக்கு தாயாகி இல்லறத்தை நல்லறமாக தொடர்கின்றார்..
(சங்கவி பிறந்த அன்று(27/05/2010) காலை வெற்றி FM வானொலியில் அறிவிப்பாளர் திரு.பிரதீப் அண்ணா குரலில் எம் வாழ்த்துச் செய்து இணையம் ஊடாக கனடாவை சென்றடைந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்தி மகிழ்கின்றேன்.)


அக்காவும் நானும்
புனருத்தாரணம் செய்யபட்டு கொண்டிருந்த எம் ஊர் ஆலடி முருகன் ஆலயத்தின் முன்..(1994)
நானும் அக்காவும் சிறு வயது முதல் குறும்புதனமாக சண்டை போட்டு கொண்டே இருப்போம்..(உடைந்த கதிரைகள்,பொருட்கள் சாட்சி சொல்லுது....!) இருப்பினும் பாசம் நிறைந்தோர் நாம்.... இதை சொல்ல வார்த்தையே இல்லை...(கண்களில் ஈரம் துளிர்க்கிறது)

இவ்விடத்தில் என் அக்காவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். என் கல்விக்காக எம் பெற்றோர்களுடன் இணைந்து பல உதவிகளை செய்துள்ளார்.. இன்றும் என் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றார்..இன்னும் கொடுப்பார்..

எல்லாம் வல்ல இறைவன் அருளைப் பெற்று பல செல்வங்களுடன் இன்பமாக வாழ பிறந்த நாள் வாழ்த்துகளுடன் வாழ்த்தி பதிவை நிறைவு செய்கின்றேன்.

தனித்தனியே பிறந்தாலும் இருந்த இடம் ஒன்றுதான்.....!























பதிவில் ஓர் குறள்

அறத்துப்பால் - இல்லறவியல் - மக்கட்பேறு

குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

கலைஞர் உரை:
பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

மு. உரை:
தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

Translation:
Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.

Explanation:
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
Continue reading →
Wednesday, December 1, 2010

இப்படியும் பயணம்.............!

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இன்று மாலை 5.30 மணி இருக்கும்...! எனது கல்வி செயற்பாட்டை முடித்து நெல்லியடியில் அமைந்திருக்கும் esoft கணனி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக நெல்லியடி பஸ் நிலையத்தில் என் நண்பருடன் (தன்சயன்) நின்றிருந்தேன். சுமார் 15 நிமிடத்தின் பின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்வதற்காக (750 சாலை இலக்கம் கொண்ட பஸ்) வந்து நின்றது. நானும் என் நண்பரும் பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டோம்..அந்த நேரம் பஸ் நடத்துனர் பயணச்சீட்டு எடுப்பதற்காக எம்மிடம் வந்தார்..என் நண்பர் அச்சுவேலியில் இறங்க இருந்ததால் “ஒரு அச்சுவேலி ஒரு ஆவரங்கால்” என கூறி ரூபா 40 ஐ அவரிடம் நீட்டினேன் இரண்டு 20 ரூபாய் நோட்டுகளாக..
அவரும்
நெல்லியடி – அச்சுவேலி 18.00
நெல்லியடி – ஆவரங்கால் 20.00
        என்று பயணச்சீட்டு எழுதி எம்மிடம் தந்து விட்டு சென்று விட்டார்..(மீதி 02 ரூபாய் நாம் வழக்கமாய் கேட்பதில்லை..கேட்டால் கிடைப்பதுமில்லை..)
சரி என்று பயணத்தை ஆரம்பித்த நாம் இமையாணன்,வல்வை என்னும் இடங்களை கடந்து அச்சுவேலியை வந்தடைந்தோம்.. அங்கு என் நண்பர் இறங்கி விட நான் தனித்து பயணத்தை தொடர்ந்தேன்..

இந் நிலையில் ஆவரங்கால் சந்தி என்ற இடத்தில் இ.போ.ச பயணச்சீட்டு பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறினர்..வழக்கம் போல் பயணச்சீட்டை பரிசோதித்து கொண்டு வந்த அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார்..
பார்த்தவர் என்னிடம் கேட்டது.. “எங்க போறீங்க..??”
நான் “ஆவரங்கால்”
அவர் “ஆவரங்கால் எவடம்”
நான் “ஆவரங்கால் யுனியனடி(Union)”
அவர் “யுனியனடி???அப்படி எண்டா 06 ரூபாய்க்கு டிக்கட் எடு” என்றார்.
ஆசனத்தில் இருந்து சடுதியாக எழுந்த நான் “ஏன்?” என்று கேட்டேன்..
அவர் சொன்னார் “ஆவரங்கால் யுனியன் புத்துாரில் இருக்கு..அதால எடுக்கணும்” என்றார்..
நான் “இவடம்  எப்ப புத்துார் ஆனது..??” என்றேன் மறுபடியும்..
ஆடிப்போன அவர் மௌனமானார்...
நான் தொடர்ந்தேன்..
“நான் பிறந்து வளர்ந்தது இங்க…எனக்கு தெரியாம எப்படி??? எண்ட N.I.C ல கூட ஆவரங்கால் எண்டே இருக்கு...அப்படி இருக்க எப்படி இது புத்துார் ஆனது...??” என்று கேள்வி எழுப்பினேன்..
தடுமாறிப்போன அவர் சமாளிக்க முற்பட்டார்…
 இவ்விடத்தில் நீங்கள் அறிய வேண்டிய விடயம்..
ஆவரங்கால் புத்துார் எல்லை நான் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 100m தொலைவில் உள்ளது..
நான் பாடசாலை காலத்தில் பயணிக்கும் போது மாதாந்த பருவச்சீட்டில் ஆவரங்கால் என்றே பதியப்பட்டிருந்தது..
பாடசாலை காலத்தின் பின் தற்போது யாழ்ப்பாணம் செல்வதற்காக அதே யுனியனின் முன் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸில் புறப்படும் போது பஸ் நடத்துனர் ஆவ – யாழ்(ஆவரங்கால் – யாழ்ப்பாணம்) என்றே எழுதி 35 ரூபாய்க்கு பயணச்சீட்டு தருவார்..பணமும் பெற்று கொள்வார்..!
இப்படியாக இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் போது இவ்விடம் ஆவரங்கால் ஆக இருக்க (அதுவே உண்மை) நெல்லியடியில் இருந்து இங்கு வர மட்டும் இவ்விடம் புத்துாராக மாறுவது எப்படி....??? என்பது குழப்பத்துக்குரிய கேள்வியாகும்.
      சரி இனி விடயத்துக்கு வருவோம்..
அவரோ 06 ரூபாய்க்கு டிக்கட் எடுக்கும் படி கூறவும் நான் அதை மறுப்பதுமாக இருக்க நான் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது..
பஸ் சாரதியை நான் கேட்டு கொண்டதை அடுத்து பஸ் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டது..
எனினும் வாக்குவாதம் தொடர்ந்தது..
இந்நிலையில் சட்டென்று வீதியில் இருந்த கடையொன்றின் பெயர்பலகை என் கண்ணில் தட்டுப்பட்டது...அதை அவர்களிடம் காண்பிக்க பஸ்ஸில் அவர்களை நோக்கிய ஏளனச்சிரிப்பு உதிர்ந்தது... வெட்கிப்போன அவர்கள் சரி சரி தம்பி இதோட இத விடப்பா...என்று கூற நானும் பஸ்ஸில் இருந்து இறங்கினேன். அப்போது சாரதி என்னை பார்த்து “இதாண்டா சரி” என்ற  பொருளில் புன்னகைக்க பெருமிதம் என்னுள்....

      இப்படி உண்மை இருக்க ஏன் இந்த நடத்துனர்கள்,பரிசோதகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்...?
இப்படியான செயற்பாடுகள் நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கின்றது..இதை தடுக்க நாம் நம் பிரதேசத்தின் எல்லை,பரப்பு,வீதி அமைப்பு போன்ற விடயங்களை முறையாகவும் தெளிவாகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




பதிவில் ஓர் குறள்
குறள் 385:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு.

கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

மு. உரை:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

Translation:
A king is he who treasure gains, stores up, defends, 
And duly for his kingdom's weal expends.

Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
Continue reading →
Photobucket