வணக்கம் நண்பர்களே..
ஆரம்பமும் முடிவும் எப்போதும் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. அது தானாகவே நடந்து முடிகின்றன.
இன்று 2011 ஆம் இறுதிநாள்.. பல இன்பங்கள், சோகங்கள், மாற்றங்கள், வரவுகள், செலவுகள் என கடந்து வந்த வருடங்கள் தந்த அனைத்தையும் எமக்கு வழங்கியிருக்கின்றது இந்த 2011.
இதில் அரசியல் மாற்றங்கள், எதிர்பாதார நிகழ்வுகள், அதிர்ச்சி தரும் அம்சங்கள் என பல விடயங்களை மீள்பார்வைக்கு கொண்டு வரலாம்.
ஆனால் இந்த விடங்களை நாங்கள் மீண்டும் நினைக்கும் போது ஏதோ ஒரு வெறுப்பும், வேதனைகளும் வருவது தவிர்க்க முடியாதனவாகின்றன. வருடத்தின் இறுதி நாள் - புதிய வருடத்திற்கு இன்னும் ஒரு நாள் என்று இன்றைய டிசம்பர் 31ம் திகதி இருக்கின்ற நிலையில் 2012ஐ வரவேற்க தயாராகும் நாம் மகிழ்ச்சியுடன் 2011க்கு விடை கொடுத்தால் நல்லது தானே. ஆகையால் இப்பதிவு எப்போதும் எம் இன்பத்திலும் துன்பத்திலும் தோழனோடு சேர்ந்து துணை நிற்கும் பாடல்கள், திரைப்படங்கள் பற்றியதாக பேசி செல்லவிருக்கின்றது.
ஆம், 2011ல் வெளிவந்து என் மனதை கவர்ந்த 10 பாடல்களும், 10 திரைப்படங்களுமே இப்பதிவை அலங்கரிக்கவுள்ளன.
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றேன். நான் ஒரு அனுபவம் மிக்க விமர்சகன் அல்ல. ஆகையால் என் ரசனைகளை இங்கு கொட்டுகின்றேன். அதில் இந்த இலக்கங்கள் ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியால் போகின்றது.
இருப்பினும் இந்த இலக்கங்கள் தரவரிசைக்காக அல்ல என்பதை குறிப்பிட்டு சொல்லுகின்றேன்.
முதலில் பத்து பாடல்கள்.
10- உன்னாலே உன்னாலே...- ஒஸ்தி
இல்லை இல்லை இதயமே தொலைந்திடும்
தினம் உன்னை காணவே
இங்கே இங்கே எதுவுமே தெரிந்திடும்
கடவுளை போலவே
தேவதையை கனவில் ஏங்கினேன் அப்போ
உன் விழியில் தெரியுதே ஏக்கமும் இப்போ
பூமழையே வானமே துாறுமே அப்போ.
உன் நினைவு துாறலா சேருதே இப்போ.
போன்ற யுகபாரதியின் வரிகளும் பாடலின் இசையும் கவர்ந்து விட அண்மையில் அதிகம் முணுமுணுத்த பாடலாகிப்போனது இப்பாடல்
இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து ரீட்டா பாடிய இப்பாடலின் காட்சியுருவாக்கமும் என்னை கவர்ந்ததும் மகிழ்ச்சி. தேவையற்ற இடைச்செருகலாக அல்லாமல் படத்துடன் ஒன்றித்த இப்பாடலில் சிம்பு மற்றும் ரிச்சா இருவரின் முகபாவங்களும் அருமை. (சிம்புவின் படத்தில் நாயகியை அதிகம் புடவையில் பார்த்ததும் இப்படத்தில்தான்..)
09- என்ன சொல்ல போறாய்..- வேங்கை
பாடலின் அனைத்து வரிகளும் பிடித்து போக ரசித்து கேட்ட பாடல்.
தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் M.L.R.கார்த்திகேயனின் குரலில் இருந்த உணர்வு என்னை மிகவும் ரசிக்க வைத்தது.
பாடல் காட்சியின் தேயிலை தோட்டங்களின் ரம்மியம், மிக இலகுவான சந்தத்திற்கேற்ற நடனங்கள் என பல விடயங்களினால் பிடித்து போன பாடலாக இப்பாடல் மாறிப்போனது.
08- குதிக்கிற குதிக்கிற..- அழகர் சாமியின் குதிரை.
இசைஞானியின் இளமை குரல்,அதில் இருந்த நளினம், எளிமையான பாடல் வரிகள், காட்சியமைப்பு என அனைத்து அம்சங்களினாலும் கவரப்பட்ட பாடல்.
நான் ரசித்து பார்த்த படங்களில் அழகர் சாமியின் குதிரை படமும் ஒன்று.
நடிகனுக்கு உரிய வரைமுறையை கடந்து சாதாரண மனிதனும் நடிகன்தான் என காட்டிய படம்தான் அழகர் சாமியின் குதிரை.
07- நீ கோரினால்..- 180
2011 முழுவதும் தன் வரிகளினால் ஆக்கிரமித்திருந்தவர் மதன் கார்க்கி எனலாம்.
கார்க்கியின் அழகிய வரிகளினால் கட்டுண்டு ரசித்த பாடல் இது.
என் மீதி பார்வை பிம்ம பூவே பட்டுப்போகாதே..
சரத்தின் இசையில் இடம்பெற்ற இப்பாடலுக்குள் இருக்கும் ஏதோ ஒரு மயக்கும் தன்மையை இன்றும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றேன்.
கார்த்திக் மற்றும் ஸ்வேதா மோகன் இருவரினதும் குரல்களின் நளினமும் அருமை.
06- தம்பி தம்பி..- சங்கமம் இசைத்தொகுப்பு
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி மாணவர்களின் படைப்பில் உருவான சங்கமம் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரு பாடல்தான் இது.
மாணவர்களின் குறும்புத்தனங்களையும் சொல்லி அவர்களுக்கு அறிவுரை தருவதாகவும் அமைந்த இப்பாடலின் வரிகள் அருமை.
மாணவன் மதீசனின் வரிகளுக்கு சத்தியன் இசையமைக்க ஜெகதீஸ் அருமையாக பாடியிருந்தார்.
பாடலை கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.
இலங்கையில் இப்பாடலை வெற்றி பெற வைத்த வெற்றி வானொலிக்கும் நன்றிகள்.
05- முளைச்சு மூணு...- வேலாயுதம்
பெண்ணை வர்ணித்து களைத்து விட்ட கவிஞர்கள் இன்று எதை எதையோ கொண்டு வர்ணிக்க விவேகா காய்கறிகளை கொண்டு வர்ணித்தது இப்பாடல் பிடிக்க பிரதான காரணம்.
மூக்கு மிளகாய் மூக்குத்தி கடுகாய்
கனிந்த காய் தோட்டம் நீதானா..?
சிரிப்பு கற்கண்டு உன் சிணுங்கல் அணுகுண்டு
விழிகள் கரு வண்டு அடி விழுந்தேன் அதைக் கண்டு.. - அடடடடா..
பிரசன்னா மற்றும் சுப்ரியா ஜோசி பாடிய பாடலில் பிரசன்னாவின் குரலின் நளினம் அழகு.. (அதிலும் பாவம் என் நெஞ்சு.. என்ற இடம்)
04- கம்பி மத்தாப்பு...- சேவற்கொடி
அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்
கவிப்பேரரசு வைரமுத்துவின் எளிமையான வரிகள் - பெண்ணின் ஒவ்வாரு செயலையும் கிராமிய காதலாக்கிய வரிகள்
சத்தியாவின் தாளம் போட வைக்கும் இசையில் M.L.R. கார்த்திகேயன் தன்னை ரசிகர்கள் ரசிக்கும் பாடகராக நிலைநிறுத்திய பாடல்.
03- ஜகிட தோம்...- தெய்வதிருமகள்
எந்த நேரத்திலும் உற்சாகம் தரும் பாடல் வரிகள். வரிகளை விழுங்காமல் பாடும் S.P.Bன் குரல் மற்றும் மாயா,ராஜேஸ் ஆகியோரின் இணைக்குரல்கள் என்பவற்றால் முதலில் கவர்ந்த பாடல் படம் வெளியாகிய பின்னர் காட்சியோடு இணைந்தும் பிடித்துப்போனது.
நடந்து நடந்து கால் தேயலாம்
விழித்து விழித்து கண் மூடலாம்
இருந்த போதும் வா போரிலே மோதலாம்..
இருட்டை விலக்க ஒரு சூரியன் அடுத்த திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை கூடலாம்..
இந்த வரிகள் நான் சோர்ந்திருக்கும் போது உற்சாகம் தந்தன. காலம் கடந்தும் என் மனதில் நிலைக்கும் பாடலாக இது மாறியது-மாறும் என்பதே உண்மை
இந்த வருடத்தில் நான் அதிகம் கேட்ட பாடலும் இதுதான்.
02- பட்டாம் பூச்சி..- காவலன்
பொதுவாகவே பாடல்களில் சந்திரன், நிலவு, நிலா முதலிய வார்த்தைகள் வந்தால் என்னமோ தெரியவில்லை உடனேயே எனக்கு பிடித்து விடும். அப்படி ஒரு பாடல்தான் இது. விஜயின் பாடல்கள் எல்லாமே பிடித்தாலும் இப்பாடல் மீது ஒரு தனி ஈர்ப்பு.
காரணம் பாடலை பாடிய இருவரின் குரலிலும் உள்ள வசீகரம். பாடல்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்பதில் வரிகளுக்கு இருக்கும் பங்கின் அதே அளவு பங்கு பாடகர்களிடமும் உள்ளது.
முகம் தெரியாத காதலிக்காக ஏங்கும் தன் காதலன்(பரீட்சை நேரத்திலும்) தன்னைப் பற்றியே தன்னிடம் கூறியதும் அவள் மனதில் தோன்றும் இந்த பாடல் படம் வரமுன்னமே பாடலின் இசை,வரிகள்,இவற்றுடன் K.K மற்றும் ரீட்டா வின் குரல் ஆகியவற்றால் கவர்ந்து நின்றது.
“ஞாபகம் உன் ஞாபகம் அது முடியாத முதலாகும்...”
“யானை தந்தத்தின் சிலை நீயே..தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே..”
காட்சியில் விஜயின் முற்றுமுழுதான மாற்றம்,அசினின் அழகு (படம் முழுக்க அசின் நடிப்பிலும் அழகிலும் மீண்டும் அசர வைக்கின்றார்..) என்பன இன்னும் பாடல் மீதான காதலை துாண்டி விட்டது..!
01- யாரோ நீ....உறை விட்டு வந்த வாளோ.. - உருமி
மடல் தொட்டு வந்த காற்றோ
மலை தொட்டு வந்த ஊற்றோ
ஒளியோ ஒளியின் தெளிவோ பிளிவோ
விடமோ மதுவோ இதில் நீ எதுவோ..?
வைரமுத்துவின் வைர வரிகளுக்கு மீண்டும் ஒரு சாட்சி.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் பெரும்பாலும் இசையினால் வருடிச் செல்வது அன்றைய நாளில் இருந்து இன்று வரை தொடர்கின்றது. அதில் இப்பாடலும் ஒன்று.
ஹரிகரனின் காந்த குரலுடன் ஸ்வேதா மோகனின் காதல் குரல் இணையும் போது பாடலில் ஒரு ஏகாந்த சுகம் இணைகின்றது.
பாடலின் ஆரம்ப இசை எம்மை ஒரு மலைப்பகுதிக்கு அழைத்து செல்வதை தவிர்க்க முடியாதது. ஆனாலும் கதைக்களம், பாடல் படமாக்கப்பட்ட விதம் இதனை நிருபித்து விட்டது.
காதல் பூக்களின் வாசம் உன் கூந்தல் எங்கிலும் வீசும்
பார்வைகள் எனும் படையெடுப்பாலே பாதத்தில் விழுந்திடும் தேசம்
எனை வெல்லும் பாகம் மிக பெரிது நான் தோற்கும் பாகம் மிகச்சிறிது..
காமம் தாண்டிய முனிவனும் உனது கண்களை தாங்குதல் அரிது..
உன் அழகினால் எனை அழிக்கிறாய்.. நீ ஆடை கொள்ளும் பெண் நெருப்பா..?? - ஆஹா. என்ன வரிகள் கவிஞரே..
இந்த பாடலின் காட்சியமைப்பையும் மலையாள வடிவத்தையும் பார்க்க விரும்புபவர்கள் இந்த சுட்டியினுாடக சென்று பார்க்கவும்..
Urumi Song - Aaro nee aaro
சரி நண்பர்களே.. இவை மட்டுமன்றி இன்னும் பல பாடல்கள் எனக்கு பிடித்திருந்தாலும் 2012க்கும் நான் அழைத்துச் செல்லும் பாடல்கள் என்றால் அவை இவைதான்.
மேலும் நண்பன் திரைப்படத்தின் பாடல்களில் அஸ்க் லஸ்கா..., இருக்காண்ணா.., என் ஃப்ரண்ட போல.., All Is Well ஆகிய பாடல்களும், 3 திரைப்படத்தின் நீ பார்த்த விழிகள்.. பாடலும் என்னை கவர்ந்துள்ளன. இவை 2012ன் பாடல்களின் வரிசைக்குள் இடம்பெறும் என நம்புகின்றேன்.
முடிந்தால் இன்றிரவு மற்றுமொரு பதிவில் சந்திக்கின்றேன். அல்லது மீண்டும் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.

துாங்கி எழுந்தா பிள்ளை அழகு.. அவ சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
வணக்கம் ஜனகன், நல்ல ரசனை.. நல்ல விமர்சனம்.. இதில் தவிர்க்க முடியாமல் என்னை கொள்ளை கொண்ட இரண்டு பாடல்களும் இடம் பிடித்திருக்கின்றன. ஒன்று 'நீ கோரினால்', இரண்டாவது 'கம்பி மத்தாப்பு'... இந்த இரண்டு பாடல்களையும் அதன் ஒவ்வொரு வரிகளுக்காகவும் ரசித்தவை.
உறை விட்டு வந்த வாளோ இன்றைக்குத்தான் கேக்கிறன். நன்றி ஜனகன், பகிர்வுக்கு நன்றி :-))