சச்சின் உலகின் மிகச் சிறந்த வீரர். கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் தூதராக செயல்பட்டு வருகிறார். எனது சிறு வயதில், சச்சினின் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.அப்போது தான் அவரைப் போல கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை எனக்குள் வளர ஆரம்பித்தது. இன்று நான் கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது. என தென்னாபிரிக்க அணி தலைவர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு இருபது-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, இன்று செஞ்சுரியனில் ஆரம்பமாகி உள்ளது.
இதுவரை டெஸ்ட் அரங்கில் 49 சதம் கடந்துள்ள இந்திய மாஸ்டர் பெட்ஸ்மென் சச்சின், தென் ஆப்ரிக்க தொடரில் 50 ஆவது சதத்தை பதிவு செய்ய காத்திருக்கிறார். இந்நிலையில், சச்சினை வெகுவாக புகழ்ந்துள்ளார் தென்னாபிரிக்க அணி தலைவர் ஸ்மித்.
இது குறித்து இவர் கூறியதாவது: சச்சின் உலகின் மிகச் சிறந்த வீரர். கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் தூதராக செயல்பட்டு வருகிறார். எனது சிறு வயதில், சச்சினின் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். அப்போது தான் அவரைப் போல கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை எனக்குள் வளர ஆரம்பித்தது. இன்று நான் கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
இந்திய அணியின் பயிற்சியாளரை பொறுத்த வரையில், கிறிஸ்டன் இந்திய அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறார். எனது கிரிக்கெட் விருப்பத்துக்குரியவர்களில் அவரும் ஒருவர். அவருடன் இணைந்து தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். இந்திய வீரர்கள் அவர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர். இவ்வாறு ஸ்மித் தெரிவித்தார்.
இதேவேளை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, தென் ஆபிரிக்கா சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுவரை தென் ஆபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த அணிக்கும் அளிக்கப்படாத வரவேற்பு என அந்நாட்டு கிரிக்கெட் சபைத் தலைவர் ஜெரால்டு மஜ்லோ தெரிவித்தார்.
இரு அணி வீரர்களும் இதில் கலந்து கொண்டனர். தென் ஆபிரிக்க அதிபர் டுடஜெலி யோகா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய அணியை பாராட்டிப் பேசிய யோகா கூறுகையில்,உலகின் முதல் நிலை அணியான இந்தியாவுக்கு, அதற்கான முழுத் தகுதி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, இந்திய அணி, உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றிகளை குவித்துள்ளது. கிரிக்கெட் அரங்கில் நீண்ட காலமாக அசத்தி வரும், இந்திய வீரர் சச்சினுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்காத நினைவுகளை தந்த அவரது சிறப்பான ஆட்டத்துக்கு நன்றியை செலுத்த விரும்புகிறேன். அவர் சிறந்த வீரர், உண்மையான ஹீரோ, ஒரு விளையாட்டு வீரராகவும், கிரிக்கெட் வீரராகவும், மிகச் சிறந்த மனிதராகவும் உள்ள உங்களுக்கு எனது வணக்கங்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சபைகள் இடையிலான நட்புறவு, நீண்ட காலம் தொடர வேண்டும் என விரும்புகிறேன், என்றார்.
அருமையான அலசல் ஜனகன் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா...