எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, December 10, 2010

வீதிகளும்(ளில்) விதிகளும்...

6 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இது என் இன்றைய இரண்டாவது பதிவு...(பதிவேற்ற அதிகாலையாகி விட்டதே...) இதற்கு முன் தந்த பதிவு என் நண்பனின் பார்வையில் வந்தது....இப்போது வரும் இப் பதிவு என் பார்வையில் பட்ட விடயம் பற்றி பேச உள்ளது....

யாழ்ப்பாணத்தில் இவ்வருட ஆரம்பத்திலேயே ஆரம்பித்த பணி வீதிகள் அகலமாக்கல் செயற்பாடு...! தொடங்கிய போதே பல சர்ச்சைகள் எதிர்ப்புகள்...இருப்பினும் மக்களுக்கு நன்மை தரும் விடயம் இது என்பதாலோ அல்லது அரசியல் செல்வாக்கோ இவ் சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கின..வழக்குகள், தீர்ப்புகள் என இழுபட்டு பின் எப்படியோ ஒரு மாதிரியாக ஆரம்பித்த அகலமாக்கல் பணி முதலில் யாழ்-பருத்தித்துறை வீதியில் வல்லை வெளிக்கும் ஆவரங்காலுக்கும்(2km) இடைப்பட்ட வீதியை அகலமாக்கியது...பின் புத்துார் வரை விரிவாக்கப்பட்ட இச் செயற்பாடு முழுமையாக நிறைவேற வெறுமனே 3 மாதங்களாகின....
ஆனால் அதை தொடர்ந்து இப்பணிகளின் வேகம் ஆமை வேகத்தை மிஞ்சியது...கிட்டத்தட்ட இவ்வருடத்தின் வைகாசி-ஆனி மாத காலத்தில் ஆரம்பித்த இன்று வரை முழுமையாக முடியவில்லை.... இதில் என்ன வேதனை என்றால் இதுவரை பூரணமான வீதியின் துாரம் கிட்டத்தட்ட 6km களே..(நீர்வேலி-வல்லை சந்தி) ஆனால் நீர்வேலியில் இருந்து கோப்பாய் வரை வீதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு சிறிது இடையுறு ஏற்படுத்தி வேலைகள் நடந்து வருகின்றன..
           சரி எல்லாம் ஒழுங்காதானே நடக்குது...உனக்கு இப்ப என்ன பிரச்சினை என்று நீங்க கேட்கிறது புரிகிறது...
பிரச்சினை என்னவென்றால் மழைகாலம் ஆரம்பித்து இப்போது உக்கிர நிலையில் இருப்பதுதான்....
வீதிகளின் அகலம் குறுக்கப்பட்டு இருப்பதால் குறிப்பிட்ட இடங்களில் வீதிகளில் பயணம் என்பது அந்தரத்தில் நடப்பதற்கு சமன்...! தேங்கி நிற்கும் வெள்ளம் வீதியை சாரதிகளுக்கு மறைக்கின்றன…அதிலும் மழை பொழியும் நேரம் என்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை..!
இதற்கு சான்று, இங்கு நடக்கும் விபத்துகள்....
சித்திரை மாத ஆரம்பத்தில் காலையில் கொட்டும் மழையின் மத்தியில்  மினி பஸ் கவிழ்ந்து நடத்துனர் தலை நசிந்து மரணமான கொடூரம் உதாரணம்....
மரணங்களை சொத்தாக பிறப்பின் போதே வாங்கி வந்தவர்கள் யாழ் மக்கள் என்பதால் பின் நடந்த விபத்துகள் பெரிதும் உயிர் ரீதியான இழப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் உடமை சேதத்தினை ஏற்படுத்தியிருந்தன....
தனியார் சொத்துக்கள் மட்டுமன்றி அரச-பொதுச் சொத்துகளும் சேதமாகி இருக்கின்றன..இதற்கு உதாரணம் காட்டுவதாய் அமைந்ததே இவ் விபத்து....!(09/12/2012)
சில மாதங்களுக்கு முன் தொண்டைமானாறு-பருத்தித்துறை வீதியில் விபத்துக்கு பின் இடம்பெற்ற விபத்து இது.....
நீர்வேலி வில்லு வளைவினை அடுத்து வரும் சற்று தொலைவில் நேற்றுக்காலை 09.30 மணியளவில் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிளை தாண்டி முன் நோக்கி செல்ல முற்பட்ட போது வீதியில் காணப்பட்ட சதுப்பு தன்மையால் பயணிகளுடன் வந்த பேருந்து சரிந்தது...வீதி அருகில் இருந்த தென்னை மரம் தாங்கி கொண்டதால் பஸ் குடை சாயவில்லை...அப்படி நிகழ்ந்திருந்தால்......???

விபத்து இடம்பெற்று சிறிது நேரத்தின் பின் அவ்வழியால் நண்பருடன் மோட்டார் சைக்கிளில்-உந்துருளியில் யாழ்ப்பாணம் சென்ற போது சம்பவத்தை அறிந்ததும் என் கையடக்க தொலைபேசி “கிளிக்” செய்த புகைப்படம் இது.......



வீதி அகலமாக்கலில் வடமராட்சி பகுதியின் தற்போதைய நிலைவரங்கள் பற்றி பதிவர் ம.தி.சுதா அவர்கள் எழுதினால் பொருத்தமாய் இருக்கும் என எண்ணுகின்றேன்....!




வழக்கமாக என் பதிவோடு திருக்குறளையும் தரும் நான், இப் பதிவை தயாரிக்கும் போது இரவின் தனிமையை போக்கிய S.P.B, சித்ரா, K.J.யேசுதாஸ், உன்னிகிருஸ்ணன், ஹரிஹரன், மனோ, A.R.RAHMAN, S.ஜானகி, ஆகியோருக்கு நன்றி கூறுகின்றேன்..அத்துடன் ஒரு மனதை கவர்ந்த பாடல் வரிகள் முழுமையாக......

வாடா நண்பனே வேளாண்மை அன்பனே
பட்டணம் தாண்டி நாம் போகலாம் வா...
நாளை இந்தியா கிராமத்தில் உள்ளதாம்
அங்கு நாம் சென்று தான் பார்க்கலாம் வா...

இந்த ஏரோட்டம் இங்கே இல்லாம
பள பள பட்டண சாலையில் காரு ஓடுமா....
இங்க சேத்தோட கூத்து ஆடாம
பள பள five star hotel லில் பந்தி நடக்குமா...
ஏ...உணவோ உடையோ கொடுப்பது யாரு
நிலமென்னும் தாய்தானே...

பூ பூக்கும் வாழை புதுப்பொண்ண போல
பணிஞ்சு பணிஞ்சு பாக்குது..உன்ன குனிஞ்சு குனிஞ்சு பாக்குது..
விளைஞ்ச கரும்பு வளைஞ்சு நிக்குது..
கொழுத்த மனுசன் நிமிந்து நிக்கிறான்…
உப்பான மண்ணில் உற்பத்தி செஞ்சும்
விளைஞ்ச கரும்பு இனிக்குது.. அது புளிஞ்சா சக்கர கொடுக்குது...
கெட்டது செஞ்சும் கரும்பு இனிக்கும் நல்லது செய்ய மனசு கசப்பா…
மண்ண பொளந்தா ஒண்ணு கிடைக்கும்
ஒண்ண பொளந்தா என்ன கிடைக்கும்…
அட சாமி மறந்தும் பூமி கைவிடாது…
ஒரு முருங்க மரமும் பசுவும் போதும் ஏழை வாழ்வு நிறைஞ்சு போகும்..
அடடா ஒரு கலப்பை இருந்தா பொன்னும் மின்னும்....

நீ ஒரு நெல்ல போட்டா பல நெல்லு விளையும்
இதான் மண்ணின் ரகசியம்....
அது இயற்கை தந்த அதிசயம்...
வெவ்வேறு சாதி ஒண்ணாக சேர்த்தால்
ஒட்டு மாங்கனி கிடைக்குது..
இது எட்டு நாளைக்கு ருசிக்குது....
சில மலர்கள் செத்தும் மணக்கும்
நீ மறைந்தால் என்ன மணக்கும்...
அட மனிதா மனதில் கர்வம் வேண்டாம்...
ஒரு மலரும் செடியும் கொடியும் புல்லும் மனிதன் படிக்க பாடம் சொல்லும்…
அடடா அதை படிக்க உள்ளம் வெல்லும் வெல்லும்….!

6 Responses so far

  1. உண்மைதான் ஜனகன் விதிகள் செய்வது இப்போ ஆரம்பாம் வெகு வேகமாக தொடங்கினாலும் போகப்போக ஆமை வேகம் தான்

    இதற்க்கு பொறுப்போ யார் என்று தெரியவில்லை ?????

    ஆம் நீகள் சொன்னது போல மதி சுதா தொடர் பதிவு எழுதுவதா சிறந்தது தான் :)

    பாடல் நெஞ்சை வருடிச் செல்கிறது
    வாழ்த்துக்கள் தம்பி
    http://harininathan.blogspot.com

  2. நல்ல பதிவொன்று தம்பி... எழுதும் எண்ணம் இருந்தது ஆனால் நம்மளுக்கு எழுத வெளிக்கிட்டால் ஒழிவு மறைவோடு எழுதத் தெரியாது சரி முயற்சிக்கிறேன்...

    தங்கள் பாடல் தெரிவு அருமை..
    ஃஃஃஉப்பான மண்ணில் உற்பத்தி செஞ்சும்
    விளைஞ்ச கரும்பு இனிக்குதுஃஃஃ

    அதிலும் இந்த வரி ரொம்பப் பிடிக்கும்...

  3. @Harini Nathan:-நன்றி அக்கா....

    @ஜீ... :-நன்றி அண்ணா.....

    @ம.தி.சுதா :- நன்றி அண்ணா.....
    கண்டிப்பாக எழுதுங்கள்...காத்திருக்கின்றேன்....

  4. அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் http://tamilblogs.corank.com/

  5. tamil blogs:- நன்றி....வருகைக்கு...
    கண்டிப்பாக........

Leave a Reply

Photobucket