எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Thursday, December 9, 2010

“இவன் நம்ம இனம்”

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
நேற்றுமுன் தினம் வெளியான உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது நீங்கள் அறிந்ததே...
பரீட்சை முடிவின் பின் என் நண்பர் பிரஜாபதி எழுதிய கவிதை இது...!
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...பழைய நினைவுகள் தாலாட்டும்...

பரீட்சை பெறுபேறு வெளிவந்து விட்டது என்றறிந்து தட்டினேன் என் கைத்தொலைபேசியை..
இம்முறை இன்னும் வீழ்ச்சி என்று முடிவு என்னை பார்த்து சிரிக்க...(தான் வென்று விட்டேனாம்..-முடிவின் எண்ணம்..)
நம் விதி அதுதானே என எண்ணி மூடி விட்டேன்
என் எதிர்கால எண்ணங்களை...
தொடர்ச்சியாக சிணுங்கிய தொலைபேசியை அணைத்தபடியே அடைந்து விட்டேன் என் அன்பு இல்லத்தை..
           வழக்கத்துக்கு மாறாக என் அரண்மனைக் கதவுகள் எனக்காக திறக்கப்பட்டன
என் முகத்தைக் கூட ஏதோ திரையில் அறிமுகமாகும் கமல் ஹாசன் முகம் போல பார்க்கவே செய்தனர் என் குடும்பத்தினர்...
முடிவு என்ன???-அம்மாவின் கேள்வி
வழக்கம் போல...! என்று எனது வழக்கமான பதில்
மேலும் பல கேள்விகள் கேட்கப்பட்டன போலும்
பதில் மட்டும் இல்லையே நம்மிடம்...

அம்மாவின் பார்வை, படித்தவன் போல கவலைப்படுகிறானே...(?) இவன் என என் மீது ஏளனமாய் விழுந்தது
அப்பா-
அன்று ஏனோ எதுவும் பேசவில்லை..
கொஞ்சம் பொறுங்கோ..பேசுவதை விட கொடுமை அவர் பேசாமல் இருப்பது...
அண்ணன்-
     “இவன் நம்ம இனம்” என்று அலட்சியமாக அலட்டிக் கொள்ளவில்லை...
அன்புத் தங்கைகள்-
     அவர்களுக்கு ஒருத்தன் சிக்கீட்டான் என்ற எண்ணம்...

           முடியுமான வரை அன்று நானும் மௌன விரதம்தான்..
அதனால் தான் என்னமோ வீட்டாரும் மௌனித்து விட்டனர்.
எம் புராணம் முடிந்து விட்டதோ என்று நம்பி இருந்த நேரம் அயல் வீட்டாரின் பொற்பாதங்கள் (இனி எல்லாம் பித்தளையாகட்டும்) என் வீட்டு முற்றத்தை முத்தமிட்டன..
அவளுக்கு அப்படி...அவனுக்கு இப்படி என்று முடிந்த வரை என் அம்மா வயிற்றில் எண்ணை ஊற்றி விட்டு புறப்பட்டனர் அந்த புண்ணியவதிகள்..(கணக்கில் விஜயகாந் தோற்று விடுவார் போலும்..! அப்படி ஒரு தரவு..)
மீண்டும்...!
     முடியும் முடியும் என்று எண்ணும் போதெல்லாம் தொடரும் மெகா சீரியல் போல தொடர்ந்தது அம்மாவின் திட்டல்கள்..இன்னும் கடுமையாக.

                முடியவில்லை.. முடியவில்லை..
தேடினேன் என் தலையணையை..துாங்க இல்லை துவண்டு அழ..
குப்புறப் படுத்து குமுறினே்-என்னை நானே திட்டினேன்
அப்போது என்னை விறாண்டியது என் மொபைல்!
எடுத்தேன்......! நான் சிரிப்பதா அழுவதா....???
     அழைப்பில் என்........

கவிதை எப்புடி....!?
திருப்பவும் சொல்லுறன் இது நண்பனின் படைப்பு....முழுப் பெருமையும் அவருக்கே...... 

சரி அப்படியே இந்த படத்தையும் பார்த்துட்டு போங்கோவன்....

பரீட்சை முடிவுகள் வரும் நேரம் ஏற்பட்ட பரபரப்புகளின் போது நண்பர்கள் பலர் பகிர்ந்த படம்....

5 Responses so far

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    [ma] கருத்தடை முறை உருவான கதை - contraception[/ma]

  2. அடடா ரொம்பக் கலக்கலான பதிவு சின்னத்துரை அத்திக்கடா உன்னோட மனதை...

  3. @ ம.தி.சுதா:-
    நன்றி அண்ணா....தங்கள் சுடுசோற்று வருகைக்கும்....தேற்றலுக்கும்....

    தங்கள் பதிவை படித்தேன்...ஆனா கருத்திடும் அளவுக்கு நான் வயதில பெரியவனாகலயே.....!அதான் அமைதி....ஆனதும் தேடி வந்து தங்களின் இந்தப்பதிவுக்கு பின்னுட்டுவேன்.....!

  4. Shafna says:

    பரீட்சையில் நீங்கள் தோற்றதா ஏன் நினைக்குரிங்க..எவ்வளவுதான் கீழ் தரமான முடிவைத்தந்திருந்தாலும் வெட்கம்,மானம்,சூடு,சொரண இல்லாம அந்த பரீடசை மட்டும் நம்மல தேடித்தேடி வருதுல்ல..நாம மட்டும் ஏன் சளைக்கனும்?ரெண்டுல ஒரு கை பாத்திருவோம்

  5. @ Shafna :-ha ha நண்பனிடம் சொன்னேன்.....சிரித்தான்...........

    நன்றி அக்கா............

Leave a Reply

Photobucket