எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Wednesday, December 1, 2010

இப்படியும் பயணம்.............!

14 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இன்று மாலை 5.30 மணி இருக்கும்...! எனது கல்வி செயற்பாட்டை முடித்து நெல்லியடியில் அமைந்திருக்கும் esoft கணனி நிறுவனத்தில் இருந்து வீடு திரும்புவதற்காக நெல்லியடி பஸ் நிலையத்தில் என் நண்பருடன் (தன்சயன்) நின்றிருந்தேன். சுமார் 15 நிமிடத்தின் பின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்வதற்காக (750 சாலை இலக்கம் கொண்ட பஸ்) வந்து நின்றது. நானும் என் நண்பரும் பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டோம்..அந்த நேரம் பஸ் நடத்துனர் பயணச்சீட்டு எடுப்பதற்காக எம்மிடம் வந்தார்..என் நண்பர் அச்சுவேலியில் இறங்க இருந்ததால் “ஒரு அச்சுவேலி ஒரு ஆவரங்கால்” என கூறி ரூபா 40 ஐ அவரிடம் நீட்டினேன் இரண்டு 20 ரூபாய் நோட்டுகளாக..
அவரும்
நெல்லியடி – அச்சுவேலி 18.00
நெல்லியடி – ஆவரங்கால் 20.00
        என்று பயணச்சீட்டு எழுதி எம்மிடம் தந்து விட்டு சென்று விட்டார்..(மீதி 02 ரூபாய் நாம் வழக்கமாய் கேட்பதில்லை..கேட்டால் கிடைப்பதுமில்லை..)
சரி என்று பயணத்தை ஆரம்பித்த நாம் இமையாணன்,வல்வை என்னும் இடங்களை கடந்து அச்சுவேலியை வந்தடைந்தோம்.. அங்கு என் நண்பர் இறங்கி விட நான் தனித்து பயணத்தை தொடர்ந்தேன்..

இந் நிலையில் ஆவரங்கால் சந்தி என்ற இடத்தில் இ.போ.ச பயணச்சீட்டு பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறினர்..வழக்கம் போல் பயணச்சீட்டை பரிசோதித்து கொண்டு வந்த அவர்களில் ஒருவர் என்னிடம் வந்து பயணச்சீட்டை வாங்கிப் பார்த்தார்..
பார்த்தவர் என்னிடம் கேட்டது.. “எங்க போறீங்க..??”
நான் “ஆவரங்கால்”
அவர் “ஆவரங்கால் எவடம்”
நான் “ஆவரங்கால் யுனியனடி(Union)”
அவர் “யுனியனடி???அப்படி எண்டா 06 ரூபாய்க்கு டிக்கட் எடு” என்றார்.
ஆசனத்தில் இருந்து சடுதியாக எழுந்த நான் “ஏன்?” என்று கேட்டேன்..
அவர் சொன்னார் “ஆவரங்கால் யுனியன் புத்துாரில் இருக்கு..அதால எடுக்கணும்” என்றார்..
நான் “இவடம்  எப்ப புத்துார் ஆனது..??” என்றேன் மறுபடியும்..
ஆடிப்போன அவர் மௌனமானார்...
நான் தொடர்ந்தேன்..
“நான் பிறந்து வளர்ந்தது இங்க…எனக்கு தெரியாம எப்படி??? எண்ட N.I.C ல கூட ஆவரங்கால் எண்டே இருக்கு...அப்படி இருக்க எப்படி இது புத்துார் ஆனது...??” என்று கேள்வி எழுப்பினேன்..
தடுமாறிப்போன அவர் சமாளிக்க முற்பட்டார்…
 இவ்விடத்தில் நீங்கள் அறிய வேண்டிய விடயம்..
ஆவரங்கால் புத்துார் எல்லை நான் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து 100m தொலைவில் உள்ளது..
நான் பாடசாலை காலத்தில் பயணிக்கும் போது மாதாந்த பருவச்சீட்டில் ஆவரங்கால் என்றே பதியப்பட்டிருந்தது..
பாடசாலை காலத்தின் பின் தற்போது யாழ்ப்பாணம் செல்வதற்காக அதே யுனியனின் முன் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸில் புறப்படும் போது பஸ் நடத்துனர் ஆவ – யாழ்(ஆவரங்கால் – யாழ்ப்பாணம்) என்றே எழுதி 35 ரூபாய்க்கு பயணச்சீட்டு தருவார்..பணமும் பெற்று கொள்வார்..!
இப்படியாக இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் போது இவ்விடம் ஆவரங்கால் ஆக இருக்க (அதுவே உண்மை) நெல்லியடியில் இருந்து இங்கு வர மட்டும் இவ்விடம் புத்துாராக மாறுவது எப்படி....??? என்பது குழப்பத்துக்குரிய கேள்வியாகும்.
      சரி இனி விடயத்துக்கு வருவோம்..
அவரோ 06 ரூபாய்க்கு டிக்கட் எடுக்கும் படி கூறவும் நான் அதை மறுப்பதுமாக இருக்க நான் இறங்க வேண்டிய இடம் வந்து சேர்ந்தது..
பஸ் சாரதியை நான் கேட்டு கொண்டதை அடுத்து பஸ் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டது..
எனினும் வாக்குவாதம் தொடர்ந்தது..
இந்நிலையில் சட்டென்று வீதியில் இருந்த கடையொன்றின் பெயர்பலகை என் கண்ணில் தட்டுப்பட்டது...அதை அவர்களிடம் காண்பிக்க பஸ்ஸில் அவர்களை நோக்கிய ஏளனச்சிரிப்பு உதிர்ந்தது... வெட்கிப்போன அவர்கள் சரி சரி தம்பி இதோட இத விடப்பா...என்று கூற நானும் பஸ்ஸில் இருந்து இறங்கினேன். அப்போது சாரதி என்னை பார்த்து “இதாண்டா சரி” என்ற  பொருளில் புன்னகைக்க பெருமிதம் என்னுள்....

      இப்படி உண்மை இருக்க ஏன் இந்த நடத்துனர்கள்,பரிசோதகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்...?
இப்படியான செயற்பாடுகள் நாடு முழுவதும் நடந்து கொண்டு இருக்கின்றது..இதை தடுக்க நாம் நம் பிரதேசத்தின் எல்லை,பரப்பு,வீதி அமைப்பு போன்ற விடயங்களை முறையாகவும் தெளிவாகவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.




பதிவில் ஓர் குறள்
குறள் 385:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த 
வகுத்தலும் வல்ல தரசு.

கலைஞர் உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

மு. உரை:
பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன்.

Translation:
A king is he who treasure gains, stores up, defends, 
And duly for his kingdom's weal expends.

Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.

14 Responses so far

  1. அடடா நீங்களும் மாட்டுப்பட்டாச்சா.... இதுக்காகத் தான் சொல்லறது நம்மள மாதிரி ரிக்கட் எடுக்கமல் பயணிக்கணுமுண்ணு.... அது சரி நம்ம ஊருக்குப் பக்கத்தால போயிருக்கிறிங்களே...

  2. Bavan says:

    ஹாஹா.. நல்ல பதிலடி ஜனகன், டிக்கெட் பாரிசோதகர் உங்கள மறக்கவே மாட்டார்..:)

  3. Unknown says:

    //இதாண்டா சரி”//

    :-)

  4. ம.தி.சுதா said... நன்றி அண்ணா வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்..
    ////இதுக்காகத் தான் சொல்லறது நம்மள மாதிரி ரிக்கட் எடுக்கமல் பயணிக்கணுமுண்ணு....////
    இது வேற நடக்குதா???

    ///அது சரி நம்ம ஊருக்குப் பக்கத்தால போயிருக்கிறிங்களே...////
    முன்தினம் நிறுவனம் சார்பில் உங்கள் ஊருக்கு வநதேன்...அடுத்த முறை வரும் போது சொல்லுறேன்...

  5. @Bavan..:- நன்றி பவன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்..
    /// டிக்கெட் பாரிசோதகர் உங்கள மறக்கவே மாட்டார்..:)///
    ம்ம்ம்...நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காரோ....???(காதலர்களே மன்னிக்கவும்.)

  6. @ஜீ..:- நன்றி நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்..

  7. //நான் பிறந்து வளர்ந்தது இங்க…எனக்கு தெரியாம எப்படி??? எண்ட N.I.C ல கூட ஆவரங்கால் எண்டே இருக்கு...அப்படி இருக்க எப்படி இது புத்துார் ஆனது..//


    பாத்து ஜனகன் பரிசோதகர் மட்டும் இல்லை இன்றைய கால அரசியல்வாதிகள் கூட யாழில் இரவோடு இரவாக வந்து புதிய சிங்கள கிராமத்தை உருவாக்கி விட்டு போயிடுவாங்க...அவ்வாறான நிலமை யாழில் காணப்படுகிறது.

  8. @டிலீப்..:- நன்றி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
    தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்....

  9. என்ன தம்பி உங்களுக்குமா ??
    எல்லாருக்கும் நடக்குற கத தான்
    அதுக்கு பேர் தான் இ.போ.ச(இதில் போவது சங்கடம் )
    என்ன பண்ணறது நிலைமை

  10. @Harini Nathan..:- நன்றி அக்கா...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
    ////அதுக்கு பேர் தான் இ.போ.ச(இதில் போவது சங்கடம்)////

    உண்மைதான்...........சங்கடமோ சங்கடம்.....

  11. sinmajan says:

    யாழ்ப்பாணத்தில் சில பயணச்சீட்டு பரிசோதகர்கள் நாகரிகமான முறையில் உரையாடுவதில்லை..அதனை நானும் அவதானித்திருக்கிறேன்.. ;)

  12. @sinmajan:-நன்றி அண்ணா...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
    ஃஃஃம்ம்ம்ஃஃஃ

  13. Unknown says:

    உங்களது துணிச்சலை பாராட்டுகிறேன்... கொஞ்சம் மாற்றம் செய்தால் அழகான சிறுகதை !

  14. க.சுரேந்திரகுமார்:-
    நன்றி அண்ணா...வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
    அண்ணா தங்கள் கருத்தில் (ஃஃஃகொஞ்சம் மாற்றம் செய்தால் அழகான சிறுகதை !ஃஃஃ)சிறு மாற்றம்..
    இதை சிறுகதை என்பதை விட சிறு பயணக் கட்டுரை என்றால் பொருத்தம் என என் சிறு அறிவு சொல்லுது....!

Leave a Reply

Photobucket