எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, June 6, 2011

பேரி்ன்ப பேச்சுக்காரன் லோஷன் - வாழ்த்துப்பதிவு.

6 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

ஒரு வானொலியாளன் மக்களிடையே பிரபல்யமாவது என்பது சாதாரண விடயமன்று.. அவர்களை கவர வேண்டும், குரல் பிடித்திருக்க வேண்டும், தனிப்பட்ட திறமைகள் இருத்தல் வேண்டும்,வித்தியாசமான அணுகுமுறை இருத்தல் வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கெ கொண்ட வானொலியாளன் திரு.A.R.V.லோஷன் அண்ணா.

அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது சூரியன் ஊடாக.. ஆரம்பத்தில் சக்தி யாழில் கேட்கமுடியாமல் இருந்தமையால் சூரியனில் அண்ணா வந்த பின்னர் தான் அவருடைய குரலை நான் கேட்டேன். ஒரு வித ஈர்ப்பு அந்த குரலில் ஒளிந்திருந்தது. அப்போது தரம் 08 படித்துக் கொண்டிருந்தேன். பாடசாலை நாட்களில் காலையிலும் விடுமுறை நாட்களில் தவறாமலும் அண்ணாவின் நிகழ்ச்சியை கேட்பது என் வாடிக்கை. அத்தோடு என் வீட்டினரும் அதில் லயித்திருப்பர் தம் பாடசாலை பணிகளுக்கும் மத்தியில்..

சூரியனில் அண்ணா இருந்த போது அவருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.. சூரியன் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் இயங்க ஆரம்பித்த நாளில் அண்ணாவின் குரலைக் கேட்க ஆவலுடன் வானொலிப்பக்கம் சென்றால் ஏமாற்றமே கிடைத்தது. அந்த நேரத்தில் பலர் (பாடசாலை நண்பர்கள் மற்றும் இதர வானொலி ஆர்வமுள்ளவர்கள்) கூறினார்கள் அண்ணா,மற்றும் செந்துாரன் அண்ணா,விமல் அண்ணா,பிரதீப் அண்ணா உள்ளிட்டோர் வெளிநாடு சென்று விட்டனர் என்று.. அதன் பின் என் வானொலி கேட்கும் ஆர்வம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் 2008ல் என் சகோதரியின் திருமணத்திற்காக கொழும்பு சென்றிருந்த சமயம், ஒரு மதிய வேளையில் கொழும்பில் ஒலிக்கும் வானொலிகளை radio வில் தேடிய போது வெற்றி Fm கிடைத்தது. அதன் நிலைய குறு இசையில் அண்ணாவின் குரலை கேட்டதும் பின் விமல் அண்ணா நிகழ்சியை தொகுத்து வழங்கியதையும் கேட்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். நான் வெற்றியில் முதல் கேட்ட பாடல் குசேலன் திரைப்படத்தின் “பேரி்ன்ப பேச்சுக்காரன் யாரு யாரு கூறப்பா..”
அன்றைய தினத்தின் பின் திருமண வேலைகளினால் வெற்றியை கேட்க முடியாமல் போக பின்னர் வெற்றி யாழ் மண்ணில் ஒலிக்க தொடங்கியதும் நண்பனின் தகவலை தொடர்ந்து வெற்றியின் தீவிர ரசிகனாகினேன் லோஷன் அண்ணா மீது இருந்த அன்பினால்,ஈர்ப்பினால்..
அன்றிலிருந்து இன்று வரை வெற்றியின் விடியலை கேட்க தவறுவதில்லை. நான் உயர்தர பரீட்சைக்கு சென்றது கூட நிகழ்ச்சியை அண்ணா ஆரம்பித்த பின்தான்.. வீட்டில் இருக்கும் நாட்களில் விடியல் நிகழ்ச்சி முடிந்த பின்தான் எங்கு செல்வது என்றாலும்.. அந்த அளவுக்கு அவரின் அறிவிப்பு கவர்ந்திருந்தது.

வானொலியாளனாக அவரை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் சாதாரணமாக அறிவிப்பாளர்கள் தாமே நிகழ்சிகளை தொகுத்து வந்து வழங்குவர்.ஆனால் அண்ணா நேயர்களிடம் இருந்து கூட விடயங்களை பெற்று நிகழ்ச்சி படைக்கும் வல்லமை கொண்டிருந்தார். பல நேரங்களில் திறமையான நேயர்களை மனமார பாராட்டுவதிலும் தயங்கமாட்டார். நிகழ்ச்சி நேரங்களில் அண்ணாவுடன் தொலைபேசியில் பேசி ஏதோ எனக்கு தெரிந்ததை பகிர்ந்தும் தெரியாததை அறிந்தும் கொண்டு வந்தேன்..வருகின்றேன்.

அறிவிப்பாளராக அறிமுகமான லோஷன் அண்ணாவை சமூக வலைத்தளம் (Facebook) ஊடாக ஓரளவு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல ஞாபகம் 12.08.2010ல் என் முகப்புத்தக நண்பர் வேண்டுகோளை அண்ணா ஏற்றுக்கொண்டார். அதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் மறுநாள் உலக இடதுகையாளர்கள் தினம்.அதற்கான சிறு தரவு ஒன்றை அண்ணாவிற்கு Facebook massage ஊடாக அனுப்பியிருந்தேன்.அதனை தொடர்ந்து அதற்கு நன்றியும் பாராட்டையும் கூறிவிட்டு பின் என் நண்பர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். அதாவது என்னிடம் ஏதோ இருக்கின்றது என நம்பீட்டார் போல..!ஹி ஹி

அதன் பின்பு அண்ணாவின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றை படித்து படித்து பார்க்கும் போது பதிவு எழுதும் ஆசை எனக்குள் வந்தது. ஆனால் நாம் எல்லாம் எழுதலாமா என்ற தயக்கமும் சற்று இருந்தது. அப்போது தான் பதிவுலகை சேர்ந்த மதிசுதா அண்ணாவின் தொடர்பு கிடைத்தது..அதுவும் முகப்புத்தகம் ஊடாகத்தான். அவரின் உந்துதலில் பதிவுலகினுள் நுழைந்தேன்.. ஏதோ எழுதுகின்றேன்..

லோஷன் அண்ணாவின் மீதான என் பார்வை பரந்து விரிய காரணம் அவரின் பதிவுகள் தான். இன்று வரை அவரின் பதிவை படிக்க தவறியதே இல்லை எனலாம் (காலம் தாழ்த்தியும் கூட).

அண்ணாவை முதன்முதலில் பார்க்கும் வாய்ப்பு கடந்த வருடம் டிசம்பரில் கிடைத்தது. ஆனால் அதற்கு முன் அண்ணா யாழ்ப்பாணம் வந்த போது அண்ணாவை சந்திக்க முயன்றும் முடியாமல் போனது வேதனையாக இருந்தது. அது கடந்த டிசம்பரில் மறைந்தது எனலாம். வெற்றி அலுவலகத்தில் அண்ணாவை சந்தித்து பேசி,பழகும் வாய்ப்பு கிடைத்தது..
அதற்கு முன்னர் கடந்த ஆண்டு மே மாதம் என் சகோதரியின் மகளுக்கு பெயர் வைக்கும் விடயமாக கனடாவில் இருந்து அக்காவின் வேண்டுகோளின் படி அண்ணாவுடன் பேசினேன். ஆனால் அண்ணாவின் வேலைப்பழு அதற்கு இடம்தரவில்லை..சற்று கவலைதான்

பின்பு இவ்வருடம் அவருடன் நான் பழகியது அதிகம் எனலாம்.. உலககிண்ண சுற்றுலா காலத்தில் Facebookல் அடித்த மொக்கைகளும் Comment களையும் அண்ணா மறக்கமாட்டார் என நினைக்கின்றேன். அந்நேரத்தில் தான் வெற்றியின் யாழ் மண்ணில் செய்த முதல் தனியார் ஊடக அனுசரனை ஞாபகம் வருகின்றது..
அண்ணாவின் ஒலிபரப்பில் கவர்ந்த விடயம் காலம் சென்றாலும், வயது ஏறினாலும் (ஆமா ஏதோ 58வயதுதானே) அவரின் குரலும்,தெளிவும்,துல்லியமும் அந்த ஸ்டைலும் மாறாமல் இருப்பதுதான். என் அப்பா அடிக்கடி கூறுவார்..“இவனால மட்டும் எப்படி முடியுது இப்படி எல்லாம் சொற்களுக்கு பஞ்சமில்லாமல் பேச..”என்பார்.

இந்த குரலும்,தெளிவும்,அறிவும் என்றும் மாறாமல் எங்களுடன் இருக்க வேண்டும் என அவரின் பிறந்தநாளான இன்றைய தினத்தில் இறைவனை வேண்டி நிற்கின்றோம் எங்களின் குடும்பத்தின் அனைவரும்.. அண்ணாவிற்காக கனடாவில் என் சகோதரி குடும்பத்தினர் கோவிலில் விஷேட பூஜை நாடத்தினர் என்ற நற்செய்தியையும் இத்தால் தெரிவிக்கின்றேன்..

அத்தோடு இன்றைய தினம் அண்ணாவின் வாழ்வில் மறக்க முடியாத இன்னுமொரு சம்பவம் நடந்த தினமுமாகும்..அதாவது கடந்த 2005ல் இன்று போல் ஒரு தினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி சேகரிக்கும் ”நெஞ்சினிலே நெஞ்சினிலே” இசை நிகழ்ச்சியை தொகுத்து வளங்கியிருந்தார். அதில் பங்கேற்றோர் P.சுசீலா, S.ஜானகி, K.J.ஜேசுதாஸ் இவர்களுடன் மஹதி.
இன்று மற்றுமாரு நிகழ்ச்சி.. வெற்றியின் எம்மால் முடியும் செயற்திட்டத்தின் கீழ் வெற்றிக்காக ஒரு மரம் நடுவோம் என்ற தொனிப்பொருளில் மரநடுகை என்ற புண்ணிய கருமம் இன்று காலை இடம்பெற்றது.

இந்நேரத்தில் அவரின் அன்புக்குரிய நேயர்கள் வழங்கிய பரிசு பெருமதிப்பு வாய்ந்தது எனலாம்.. கொழும்பு நகரின் மிகச் சிறந்த வானொலியாக வெற்றி Fm தெரிவு செய்யப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியானதும் வரவேற்கதக்க விடயமும் ஆகும்.
மீண்டும் அண்ணாவிற்கு இனிய 16வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு அவரின் சிறுவயது முதல் இன்று வரையான வரலாற்று பதிவினை புகைப்படங்கள் வாயிலாக ஓரளவு பகிர்ந்து கொள்கின்றேன்.. லோஷன் அண்ணா ஏதும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும்.


படம்-01,02 :- சிறு வயதில் தல சகோதரர்களுடன்..

பாடசாலைப்பருவம்.
நிற்பவர்களில் முன்வரிசை இடமிருந்து வலம் 06வது..

03Prefects guild A/L 97,98 CHC 
அமர்ந்திருப்பவர்களில் இடமிருந்து வலம் 05வது..

தொழில்.
வானொலியாளனாக..

ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்புக்கு சென்றிருந்த வேளை..(25TH FEB'07)
திரைக்கதை பிடிக்காமல் பின் விலகியிருந்தார்..



வாழ்வின் முக்கிய தருணம்.

சிறுத்தை கார்த்தியின் ரோல் மொடல்.


சிறந்த பேச்சாளனாக..

என் கையில் கிடைத்த முதல் படம்.

யாழில் A.R.V

சாகித்ய அக்டமி விருது கௌரவமான போது..

அன்புள்ள தந்தை.

சிறந்த பந்து வீச்சாளர்.

மூத்த பதிவர்.

அன்பான அன்னையின் பிறந்த தினத்தில்..

வானொலி, தொலைக்காட்சி.-வெற்றி



சந்திப்புகள்.
வசீம் அக்ரமுடன் ஹம்பாந்தோட்டையில்..

மைக்கல் வோகனுடன்..

இரு சகல துறை வீரர்களும்..

இந்திய ஊடகவியலாளர் சுச்சி சிறீதர் வெற்றிக்கு வந்த போது..

செந்துாரனின் திருமண நிகழ்வில்.

என் தந்தையின் தெரிவுப் படம்.

மக்களில் மத்தியில்...

வெற்றிக்காக மரம்....

அறிவிப்பாளர் பாடகனானது..

மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
பிறந்த நாளின் பார்ட்டி..(இப்படி இருந்தால் நன்று அண்ணே..)

வாழ்த்துகள் அண்ணா... தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர...
மன்னிக்கவும் பிறந்த நாள் பதிவு பிந்தியமைக்கு..இதில் சுவாரஷ்யம் என்னவென்றால் நேற்றுக்காலை 07.00 மணியளவில் தொடங்கிய பதிவு இரவு 09.00 மணிக்கு பூர்த்தியடைந்தது.. இருந்தும் வெளியிடுவதற்கு முன் ஒரு குட்டித்துாக்கம்  போட்டேன்..(இணைய வேகம் சற்று மோசம்) அது இன்று காலை 04.45 வரை நீடித்து விட்டது..மன்னிக்கவும்.


அண்ணாவின் விருப்பப் பாடல்களில் ஒன்று..


மீண்டும் என் குடும்பத்தினர் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் லோஷன் அண்ணா...

நன்றி.மீண்டும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,

Continue reading →
Saturday, June 4, 2011

“பாடும் நிலா”விற்கு வாழ்த்து பதிவு

5 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இன்று தன் 65வது அகவையில் கால் பதிக்கும் “குரல் மார்க்கண்டேயர்” “பாடும் நிலா” S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...


கற்கண்டு கொண்டு தூரிகை செய்து.... அதைத் தேனிலே நனைத்தெடுத்து...வான் அலைகளில் வரையப்படும் ராக ஓவியம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்....

காற்றின் மேடையிலே நர்த்தன அற்புதம் நிகழ்த்தும்
ராக வசீகரம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்....

1946 ஜுன் மாதம் 04 திகதி இந்தியாவின் ஆந்திர பிரதேசம்,நெல்லுார் மாவட்டம், கோனேதம்மபெட்டாவில் உதித்த இசை நிலவே நம் பாடும் நிலா S.P.பாலசுப்ரமணியம் (ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்).
தந்தையார் S.P.சாம்பமூர்த்தி இவர் ஹரிஹதா இசைக்கலைஞர் ஆவார். 
S.P.B க்கு 2 சகோதரர்கள் 5 சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரே பாடகி S.P.சைலஜா.
இவரின் மனைவி சாவித்ரி. பிள்ளைகள் S.P.B சரண், S.P.B பல்லவி.

இசையுலகம்.
1964ம் ஆண்டு தெலுங்கு காலச்சார மையம் நடாத்திய இசைப்போட்டியில் அப்போது பொறியியல் மாணவனாக இருந்த S.P.B பங்குபற்றி முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
“நிலவே என்னிடம் நெருங்காதே..” என்ற P.B.சிறீநிவாஸின் பாடல் அவரை திரையுலகிற்குள் தெரிவு செய்து அழைத்து வந்தது.

1969ல் தமிழில் அறிமுகமாகிய எஸ்.பி.பி முதலில் பாடிய பாடல் அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புலமைப்பித்தனின் வரிகளுக்கு M.S.விஸ்வநாதன் மற்றும் K.V மகாதேவன் இணைந்து இசையமைத்த “ஆயிரம் நிலவே வா..”பாடலாகும். இப்பாடலை P.சுசீலா அவர்களுடன் இணைந்து பாடினார் S.P.B


இருப்பினும் முதலில் வெளியாகிய பாடலாக 1969ல் வெளியாகிய சாந்தி நிலையம் திரைப்படத்தின் கண்ணதாசனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த “இயற்கை என்னும் இளைய கன்னி..” பாடல் அமைந்தது.


தொடர்ந்து R.K.சேகர் அவர்களால் மலையாள திரையுலகிற்கு கடல் பாலம்(1969) திரைப்படத்தின் “இன்கடலும் மறுகடலும்..”என்ற பாடலுாடாக அறிமுகமானார்.



இவர் பல்வேறு மொழிகளிலும் தொடர்ச்சியாக அறிமுகமாகி பிரபலமடைந்து வருகையில் இந்தி திரையுலகம் தேசிய விருதுடன் இவரை வரவேற்றது. 1981ல் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய Ek Duuje Ke Liye திரைப்படத்தில் பாடிய முதல் ஹிந்தி பாடலே 2வது முறையாகவும் தேசிய விருதை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.


இவரின் தனிப்பட்ட சாதனைகள் என குறிப்பிடும் போது ஒரு தினத்தில் 20க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இச்சாதனையை 1976ல் கர்நாடக இசையமைப்பாளர் உபந்திராவின் இசையில் மேற்கொண்டார். இதில் 15 பாடல்கள் ஜோடிப்பாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இதுவரை 15 மொழிகளில் 52,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.இது கின்னஸ் சாதனையும் கூட..


ஒரு திறமையான பாடகர் என்பதைக் கடந்து S.P.B அவர்கள் நடிகராகவும்,இசையமைப்பாளராகவும்,பின்னணி குரல் கொடுப்பவராகவும் மிளிர்ந்துள்ளார். 1969ல் Pellante Noorella Panta என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய இவரை தமிழில் நடிகராக்கி வைத்தார் இயக்குனர் சிகரம் 1987ல் தன் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தினுாடாக..


இதுவரை 70 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதில் 23 தமிழ் திரைப்படங்களும் 37 தெலுங்கு திரைப்படங்களும் 08 கர்நாடக திரைப்படங்களும் 01 மலையாள திரைப்படமும் உள்ளடங்குகின்றன.
தன் பாடகர் அனுபவத்தை கொண்டு இசையமைப்பாளராக அறிமுகமாகியது 1977ல் தெலுங்கில் கன்யகுமாரி என்ற திரைப்படத்தினுாடாக.. தமிழில் ரஜனிகாந் ன் துடிக்கும் கரங்கள் திரைப்படம் மூலம் 1983ல் கால்பதித்தார். S.P.B இதுவரை 47 திரைப்படங்களுக்கு இசை வழங்கியுள்ளார். அதில் 05 திரைப்படங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. இறுதியாக உன்னை சரணடைந்தேன்(2003) திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

         சந்தனம் பூச மஞ்சள் நிலாவும்.. - துடிக்கும் கரங்கள்

பின்னணிக்குரல் கலைஞராக கமல்ஹாசன்,அர்ஜுன் சர்ஜா முதலிய பல நடிகர்களுக்காக பிற மொழிகளில் குரல் கொடுத்துள்ளார். இன்றும் தெலுங்கு மொழியில் கமல்ஹாசனுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகின்றார். மேலும் 1997ல் அன்னமயா திரைப்படத்திற்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான நந்தி விருதை வென்றெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

விருதுகள் & அங்கீகாரங்கள்.
பாடும் நிலா அவர்கள் தன் குரலினால் குவித்த விருதுகள் ஏராளம் ஏராளம்..அவற்றில் 24 நந்தி விருதுகளும்(21 பாடகர், 01 இசையமைப்பு, 01 டப்பிங், 01 துணைநடிகர்) 03 Film Fare விருதுகளும் இவை அனைத்துக்கும் கிரீடமாக 06 தேசிய விருதுகளும் அவரை அலங்கரித்துள்ளன.
Film Fare விருதுகள் மூன்றும் Maine Pyar Kiya (1989-ஹிந்தி) திரைப்படத்தின் “தில் தீவானா..” பாடலுக்கும், Sri Ramadasu (2006- தெலுங்கு) படத்தின் “அடிகடுகோ..” பாடலுக்கும், 2007ல் தமிழின் மொழி திரைப்படத்தின் “கண்ணால் பேசும் பெண்ணே..” பாடலுக்காகவும் வழங்கப்பட்டன.


தேசிய விருதுகள்.
* Dr.K.விஷ்வானந் இயக்கத்தில் 1979ல் வெளியான சங்கராபரணம் என்ற தெலுங்கு திரைப்படத்துக்காக முதல் தேசிய விருது கிடைத்தது S.P.Bக்கு..ஆனால் இப்பாடலுக்கான கர்நாடக சங்கீத அறிவு அப்போது S.P.B யிடம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்..கேள்விஞானத்திலேயே இப்பாடலை அவர் பாடியிருந்தார்.
                         K.V.மகாதேவனின் இசையில் ”ஓம்கார நாதானு..”



*1982ல் கமல்ஹாசன்,ரதி,மாதவி நடித்த K.பாலசந்தரின் Ek Duuje Ke Liye திரைப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த் பக்ஸியின் வரிகளுக்கு லக்ஷ்மிகாந் இசையமைத்த தேரே மேரே பீச்சுமே..(Tere Mere Beech Mein) பாடல் இரண்டாவது தேசிய விருதை பெற்றுத்தந்தது.


*மீண்டும், தெலுங்கில் 1984ல் வெளிவந்த Dr.K.விஷ்வானந் இயக்கத்தில் கமல்ஹாசன்,ஜெயபிரதா நடித்த சாகர சங்கமம் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் விருதி சுந்தர ராம மூர்த்தியின் வரிகளுடன் இடம்பெற்ற “வேதம் அனுவன நாதம்..” பாடல் மூன்றாவது விருதை பெற்று தந்தது. இப்படத்துக்காக இளையராஜாவிற்கும் தேசிய விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


*மீண்டும் இளையராஜவின் இசையில் 1989ல் ருத்ர வீணை (தெலுங்கு) திரைப்படத்தின் “செப்பாலனே உந்தி..” பாடலுக்காக நான்காவது தேசிய விருது..
பாடல் வரிகள்- சிறீ வெண்ணில சீதாராமா சாஸ்திரி


* அதனை தொடர்ந்து ஹம்சலேகாவின் இசையில் 1996ல் வெளியான Ganayogi Panchakshari Gavayi (கர்நாடகம்) திரைப்படத்தின் “உமண்டு குமண்டு கன கார..” பாடலின் நெளிவு சுழிவுகள் ஐந்தாவது தேசிய விருதை பாடும் நிலாவிற்கு பெற்றுக்கொடுத்தது..


* 6வது தேசிய விருது.. இளையவரான இசைபுயலின் இசைவடிவில் உருவான பாடலுக்காக கிடைத்தது.. 1998ல் மின்சாரகனவு திரைப்படத்தின் “தங்கத்தாமரை மலரே..” பாடலுக்காக விருது வழங்கப்பட்டது. இதுவே இவரின் தமிழ் பாடலுக்கான முதல் தேசிய விருதாகவும் அமைந்தது.

இவ்வாறு விருதுகள் பல பெற்ற இவருக்கு மேலும் 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் 1999,2009,2010 ஆகிய ஆண்டுகளில் டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டதோடு 2001ல் பத்ம ஸ்ரீ விருதும் 2011ல் பத்ம பூஸன் விருதும் இந்திய அரசால் வழங்கி கௌரவம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2009ல் ஆந்திர பல்கலைக்கழகம் “கலாபரபூர்ண” என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.


40 ஆண்டுகள் இசையுலகில் இருந்தாலும் இன்றும் சலிக்காமல் அதே இளமைக்குரலில் பாடும் S.P.B ஐ ரசிகர்கள் பாடும் நிலா என செல்லமாக அழைப்பர். இதற்கு சரியான விளக்கத்தை வைரமுத்து முன்வைத்தார். 
“பாலு பாட ஆரம்பித்தது நிலா பாட்டில்.. அதை தொடர்ந்து நிலவை காதலித்தார்,காமுற்றார்,வெறுத்தார், ஆனாலும் நிலா அவரை வெறுப்பதாக இல்லை.. அதிக நிலா பாடல்களை பாடியிருப்பதால், பாடுவதால் இவருக்கு ”பாடும் நிலா” எனும் பெயர் களங்கமல்லாத பொருத்தம்” என்றார்


இன்று தன் 65வது அகவையில் காலெடுத்து வைக்கும் அந்த இளைஞனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளை இப்பதிவின் ஊடாக தெரிவிக்கின்றேன். 


கடந்த வருடம் வெற்றி Fm ல் பாடும் நிலாவின் பிறந்த தினத்திற்கு வாழ்த்தி கூறிய கவிதை ஒலிகோப்புகளால் மெருகேற்றப்பட்டுள்ளது.. கேட்டுப்பாருங்களேன்..



குறிப்பு :-  பாடும் நிலாவின் பாடல்களில் என் தெரிவுகள் பற்றிய பதிவு விரைவில் வர உள்ளது.






நேற்று கொழும்பு நகரின் முதல்நிலை வானொலியாக வெற்றி Fm தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.. எல்லையற்ற மகிழ்ச்சி..தொடர்ந்தும் இணைந்திருப்போம்.


அத்துடன் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள சமூக பணியாகிய வெற்றியின் மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்கு வாழ்த்துகளையும் வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. அனைவரும் ஆளுக்கொரு மரம் அவரவர் இல்லங்களில் அல்லது அலுவலகங்களில் நாட்டுமாறு என் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்..
                                                   நாளைய பசுமை..இன்றைய நாளில்..


நன்றி மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்,


Continue reading →
Thursday, June 2, 2011

திரையுல பிரம்மாக்கள் ராஜா - ரத்தினம்

8 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இசையில் ஒர் யுகம் இசைஞானி இளையராஜா (ஞானதேசிகன்) இன்று தன் 68வது அகவையில் கால் பதிக்கின்றார்...

அவரோடு இணைந்து இயக்குனர் வித்தியாசமான படைப்பாளி மணிரத்னம் இன்று தன் 55வது அகவையில் கால் பதிக்கின்றார்..

தேனியும் மதுரையும் தந்த திரையுல பிரம்மாக்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
.



இவர்களுக்காக ஒரு பதிவு.. பாடல்கள் ஊடாக வாழ்த்துகள்..


மணிரத்தினம் தன் திரையுலக வாழ்வை ஆரம்பித்தது கர்நாடகாவில் 1983ல்.
அனில் கபூர்,லக்ஷ்மி நடித்த பல்லவி அனு பல்லவி (ಪಲ್ಲವಿ ಅನುಪಲ್ಲವಿ) திரைப்படம் இளையராஜாவுடன் இவரை இணைத்து வைத்தது முதன் முதலாக..




அதை தொடர்ந்து மலையாளம் இவர்களின் படைப்பை ரசித்தது. மோகன் லால், சபிதா நடித்த உனரு திரைப்படம் 1984ல் வெளிவந்தது.




மணிரத்தினம் தமிழில் அறிமுகமானார் 


1985 ஜூன் மாதம் 5ம் திகதி வெளியான பகல் நிலவு திரைப்படம் மணிரத்தினத்தை தமிழிற்கு அழைத்து வந்தது.


இளைய ராஜாவின் குரலுடன் s.ஜானகியின் குரலும் இணைந்த பூமாலையே தோள் சேர வா..பாடல் இன்றும் காதலர் கீதமாக நிலைத்துள்ளது..






* இவர்கள் இருவரும் 1985ல் இதய கோவில் திரைப்படத்தில் மீண்டும் இணைந்தனர். பெரு வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் 8 பாடல்கள் உள்ளன. அனைத்தும் சூப்பர் ஹிட்..!


அதில் ஒரு பாடல் “இதயம் ஒரு கோவில்..”
S.P.B ன் குரலில் மோகன்,அம்பிகா திரையில் இணைந்து கொண்ட பாடல்..





* இவர்கள் இணைந்த இரண்டாவது திரைப்படம் 1986ல் வெளியான மெளனராகம்.
இது தேசியவிருதை 1987ல் வென்று கொடுத்தது..


மோகன்,ரேவதி நடித்த திரைப்படம் வித்தியாசமான திருமண உறவுகளை சித்தரித்தது..
இதில் நிலாவே வா பாடல் பாடும் நிலாவின் குரலில் அழகாக ஒலிக்கின்றது.. பாடலிலும் திரைப்படத்திலும் பின்னப்பட்டிருக்கும் ஒளியமைப்பு அக்காலத்தில் பேசப்பட்ட ஒன்று.




அடுத்து இவர்கள் இணைந்த திரைப்படத்தில் மற்றொடு பிரம்மா கமல்ஹாசனும் இணைந்து கொண்டார். 1987ல் வெளிவந்தது மற்றொரு தேசிய விருது வென்ற நாயகன் திரைப்படம்.


கமல், சரண்யா தோன்றும் இப்பாடல் மனோ, சித்ராவின் குரலில் ராஜாவின் ஜாலங்களை கொண்டு வருகின்றது.
                                                             நீ ஒரு காதல் சங்கீதம்..


1988. பிரபு,கார்த்திக் இணைந்து நடித்த திரைப்படம் அக்னி நட்சத்திரம்.
வசூலில் $300,000 குவித்த இத்திரைப்படம் தமிழ் நாடு அரசு விருதையும் வென்றெடுத்தது.


இளைய ராஜா என்றதும் ஞாபகம் வரும் பாடல் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா..
இசைஞானியின் குரலில் மணிரத்தினத்தின் திரைப்படமாக்கலில் உருவாகிய பாடல் பட்டி தொட்டி எங்கும் முரசு கொட்டி நின்றது..




இடையில் தெலுங்கு திரையுலகம் சென்றார் மணி ராஜாவையும் அழைத்து கொண்டு..
கீதாஞ்சலி திரைப்படம் 1989ல் நாகார்ஜுனா, கிரிஜா நடிப்பில் வெளியானது.
இத்திரைப்படம் பின்பு இதயத்தை திருடாதே என்ற பெயரிலும் வெளியானது.


கீதாஞ்சலி..ஆமனி பாடயே..


                                காட்சியமைப்பில் இதயத்தை திருடிய பாடல் இது..
இதயத்தை திருடாதே..ஆத்தாடி அம்மாடி..


குழந்தைகளை மையப்படுத்தி அழகாக உருவாக்கப்பட்டு தேசிய விருது வென்ற திரைப்படம் அஞ்சலி.
இது இருவரையும் மீண்டும் தனித்தமிழ் திரைப்படமொன்றிற்காக 1990ல் இணைத்தது.


இளைய ராஜாவின் குழந்தைகள் கார்த்திக்,யுவன்,பவதாரணி இவர்களுடன் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பார்த்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர் இணைந்து பாடிய பாடல் வானம் நமக்கு வீதி..






தளபதி. மகாபாரதத்தின் செஞ்சோற்றுக்கடன் தீ்ர்த்த கர்ணனின் கதையை 157 நிமிட திரைப்படமாக்கினார் மணிரத்தினம். இந்தியாவின் இரு சூப்பர் ஸ்டார்கள் ரஜனி காந்த், மம்முட்டி கதாபாத்திரத்தின் கனத்தை தாங்க இளையராஜா இசையில் கனம் சேர்த்தார். புதிய இசைப்பாணியில் ராஜாவை வேறுபடுத்தி காட்டிய பாடல் S.P.B மற்றும் S.ஜானகி பாடிய வாலியின் வரிகளில் மனதை தொட்ட சுந்தரி கண்ணால் ஒரு சேதி..




தளபதியை தொடர்ந்து இருவரினதும் பாதைகள் மாறின.. இருந்தும் அது மீண்டும் பொன்னியின் செல்வனில் சந்திக்கும் எனக்கூறப்படுகின்றது.. பார்ப்போம்.


ராஜாவின் முதல் படைப்பு.. அன்னக்கிளி திரைப்படத்திலிருந்து T.M.S ன் குரலில்..


                                       மற்றுமொரு பாடல் P.சுசீலாவின் குரலில்..




*இருவரினதும் அண்மைக்கால பாடல்கள்..
                        * மணிரத்னம்.
ராவணன் திரைப்படத்தின் இசைப்புயல் A.R.ரகுமான் இசையில் கார்த்திக் உருகிய வைரமுத்துவின் வரிகளடங்கிய உசிரே போகுதே..


                                    
                       * இசைஞானி இளையராஜா.
அழகர் சாமியின் குதிரை திரைப்படத்தின் இசைஞானி இசையமைத்து பாடிய பாடல்..குதிக்கிற குதிக்கிற..




பாடல்களை கேட்டிர்களா?? பார்த்தீர்களா?? ரசித்தீர்களா?? இளையராஜாவின் மெட்டுகளும் மணிரத்தினத்தின் படைப்புகளும் காலம் கடந்தும் காவியம் பேசும்..


மீண்டும் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


குறிப்பு :- இளைய ராஜா பற்றிய பல பதிவுகள் மூத்த பதிவர் கான பிரபாவின் 
ரேடியோஸ்பதியில்


நன்றி மீண்டும் சந்திப்போம்,
என்றென்றும் அன்புடன்,

Continue reading →
Photobucket