இன்று தன் 65வது அகவையில் கால் பதிக்கும் “குரல் மார்க்கண்டேயர்” “பாடும் நிலா” S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
கற்கண்டு கொண்டு தூரிகை செய்து.... அதைத் தேனிலே நனைத்தெடுத்து...வான் அலைகளில் வரையப்படும் ராக ஓவியம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்....
காற்றின் மேடையிலே நர்த்தன அற்புதம் நிகழ்த்தும்
ராக வசீகரம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்....
1946 ஜுன் மாதம் 04 திகதி இந்தியாவின் ஆந்திர பிரதேசம்,நெல்லுார் மாவட்டம், கோனேதம்மபெட்டாவில் உதித்த இசை நிலவே நம் பாடும் நிலா S.P.பாலசுப்ரமணியம் (ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்).
தந்தையார் S.P.சாம்பமூர்த்தி இவர் ஹரிஹதா இசைக்கலைஞர் ஆவார்.
S.P.B க்கு 2 சகோதரர்கள் 5 சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரே பாடகி S.P.சைலஜா.
S.P.B க்கு 2 சகோதரர்கள் 5 சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவரே பாடகி S.P.சைலஜா.
இவரின் மனைவி சாவித்ரி. பிள்ளைகள் S.P.B சரண், S.P.B பல்லவி.
இசையுலகம்.
1964ம் ஆண்டு தெலுங்கு காலச்சார மையம் நடாத்திய இசைப்போட்டியில் அப்போது பொறியியல் மாணவனாக இருந்த S.P.B பங்குபற்றி முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
1964ம் ஆண்டு தெலுங்கு காலச்சார மையம் நடாத்திய இசைப்போட்டியில் அப்போது பொறியியல் மாணவனாக இருந்த S.P.B பங்குபற்றி முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
“நிலவே என்னிடம் நெருங்காதே..” என்ற P.B.சிறீநிவாஸின் பாடல் அவரை திரையுலகிற்குள் தெரிவு செய்து அழைத்து வந்தது.
1969ல் தமிழில் அறிமுகமாகிய எஸ்.பி.பி முதலில் பாடிய பாடல் அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புலமைப்பித்தனின் வரிகளுக்கு M.S.விஸ்வநாதன் மற்றும் K.V மகாதேவன் இணைந்து இசையமைத்த “ஆயிரம் நிலவே வா..”பாடலாகும். இப்பாடலை P.சுசீலா அவர்களுடன் இணைந்து பாடினார் S.P.B
இருப்பினும் முதலில் வெளியாகிய பாடலாக 1969ல் வெளியாகிய சாந்தி நிலையம் திரைப்படத்தின் கண்ணதாசனின் வரிகளுக்கு மெல்லிசை மன்னரின் இசையில் அமைந்த “இயற்கை என்னும் இளைய கன்னி..” பாடல் அமைந்தது.
தொடர்ந்து R.K.சேகர் அவர்களால் மலையாள திரையுலகிற்கு கடல் பாலம்(1969) திரைப்படத்தின் “இன்கடலும் மறுகடலும்..”என்ற பாடலுாடாக அறிமுகமானார்.
* அதனை தொடர்ந்து ஹம்சலேகாவின் இசையில் 1996ல் வெளியான Ganayogi Panchakshari Gavayi (கர்நாடகம்) திரைப்படத்தின் “உமண்டு குமண்டு கன கார..” பாடலின் நெளிவு சுழிவுகள் ஐந்தாவது தேசிய விருதை பாடும் நிலாவிற்கு பெற்றுக்கொடுத்தது..
* 6வது தேசிய விருது.. இளையவரான இசைபுயலின் இசைவடிவில் உருவான பாடலுக்காக கிடைத்தது.. 1998ல் மின்சாரகனவு திரைப்படத்தின் “தங்கத்தாமரை மலரே..” பாடலுக்காக விருது வழங்கப்பட்டது. இதுவே இவரின் தமிழ் பாடலுக்கான முதல் தேசிய விருதாகவும் அமைந்தது.
இவ்வாறு விருதுகள் பல பெற்ற இவருக்கு மேலும் 1981ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் 1999,2009,2010 ஆகிய ஆண்டுகளில் டாக்டர் பட்டங்களும் வழங்கப்பட்டதோடு 2001ல் பத்ம ஸ்ரீ விருதும் 2011ல் பத்ம பூஸன் விருதும் இந்திய அரசால் வழங்கி கௌரவம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2009ல் ஆந்திர பல்கலைக்கழகம் “கலாபரபூர்ண” என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.
40 ஆண்டுகள் இசையுலகில் இருந்தாலும் இன்றும் சலிக்காமல் அதே இளமைக்குரலில் பாடும் S.P.B ஐ ரசிகர்கள் பாடும் நிலா என செல்லமாக அழைப்பர். இதற்கு சரியான விளக்கத்தை வைரமுத்து முன்வைத்தார்.
“பாலு பாட ஆரம்பித்தது நிலா பாட்டில்.. அதை தொடர்ந்து நிலவை காதலித்தார்,காமுற்றார்,வெறுத்தார், ஆனாலும் நிலா அவரை வெறுப்பதாக இல்லை.. அதிக நிலா பாடல்களை பாடியிருப்பதால், பாடுவதால் இவருக்கு ”பாடும் நிலா” எனும் பெயர் களங்கமல்லாத பொருத்தம்” என்றார்
இன்று தன் 65வது அகவையில் காலெடுத்து வைக்கும் அந்த இளைஞனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகளை இப்பதிவின் ஊடாக தெரிவிக்கின்றேன்.
கடந்த வருடம் வெற்றி Fm ல் பாடும் நிலாவின் பிறந்த தினத்திற்கு வாழ்த்தி கூறிய கவிதை ஒலிகோப்புகளால் மெருகேற்றப்பட்டுள்ளது.. கேட்டுப்பாருங்களேன்..
குறிப்பு :- பாடும் நிலாவின் பாடல்களில் என் தெரிவுகள் பற்றிய பதிவு விரைவில் வர உள்ளது.
நேற்று கொழும்பு நகரின் முதல்நிலை வானொலியாக வெற்றி Fm தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தி உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.. எல்லையற்ற மகிழ்ச்சி..தொடர்ந்தும் இணைந்திருப்போம்.
அத்துடன் நாளைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள சமூக பணியாகிய வெற்றியின் மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்திற்கு வாழ்த்துகளையும் வரவேற்புகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. அனைவரும் ஆளுக்கொரு மரம் அவரவர் இல்லங்களில் அல்லது அலுவலகங்களில் நாட்டுமாறு என் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்..
நாளைய பசுமை..இன்றைய நாளில்..
நன்றி மீண்டும் சந்திப்போம்..
என்றென்றும் அன்புடன்,
உங்கள் பதிவு மூலம் S.P.B கு என் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவிக்கிறேன்....
SPBக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:-))
வெற்றிக்கும் இனிய வாழ்த்துக்கள்..:-))
எல்லாப் பாடல்களையும் கேட்டாச்சு.. :) தரமான தொகுப்பு..
தொடர்ந்து கலக்குங்கள்.
சூப்பர் பதிவு
வாழ்த்துக்கள்
டினு அண்ணா, நண்பன் பவன், சின்மயான் அண்ணா, துஷ்யந்தன் அண்ணா அனைவருக்கும் நன்றிகள்..