இன்று இளைஞர்களின் நாயகன் நம்ம இளையதளபதி விஜய் அவர்களின் 37வது பிறந்த நாள்..!
நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை..இருந்தும் தீவிர விஜய் ரசிகனாக இருக்கும் நான் அவரின் பிறந்த தினத்தில் ஒரு பதிவை பரிசாக்கி மகிழ்கின்றேன். இப்பதிவானது விஜய் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களுடன் ஸ்பெஷலாக விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
1974 ஜுன் மாதம் 22ம் திகதி சென்னையில் திரு.S.A.சந்திரசேகர், திருமதி ஷோபா சந்திரசேகர் ஆகியோர்க்கு மகனாக பிறந்தார் விஜய். இவர் பெற்றோரின் பாசமிகு மகனாகவும் தங்கைக்கு பாசமிகு அண்ணனாகவும் விளங்கினார். இருந்தும் அவர் தன் தங்கையை சிறு வயதிலேயே இழந்த வேதனையில் துவண்டிருந்த போது அவரை சோகக்கடலில் இருந்து கரையேற்றியது நடனக்கலை.
சிறுவயதிலேயே நடனத்தை முறையாக கற்ற விஜய் தன் தந்தை இயக்கிய திரைப்படங்கள் சிலவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் ஊடாக திரையுலகில் நுழைந்தார். 1984ல் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகினார். அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..
அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன்(1985), சட்டம் ஒரு விளையாட்டு(1987) ஆகிய திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
1992…. ரஜனி,கமல்,கார்த்திக்,பிரபு என திரையுலகில் சவாலான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். அப்போது நாளைய திரையுலகிற்கான தீர்ப்பை எழுத வந்தார் கதாநாயகனாக விஜய். ஆக்ஸன் திரைப்படத்தில் ஆரம்பித்த அவரின் திரையுலக வாழ்வு 1996ல் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நிலையான ஒரு இடத்தை பதித்துக்கொண்டது. தொடர்ந்து காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா என நடிப்பில் முத்திரை பதித்து வந்தார்.
1999ல் வெளியாகிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது. மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்த இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற ஆரம்பித்தார். 2000ம் ஆண்டில் வெளியான குஷி, ப்ரியமானவளே மற்றும் 2001ல் வெளியான ப்ரண்ஸ், பத்ரி ஆகிய திரைப்படங்களும் இவருக்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கிச் சென்றன. அத்துடன் இக்காலத்தில் தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களிலும் விஜய் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரியமானவளே திரைப்படத்தில் “மிஸிஸி ஸிப்பி…” பாடலும் ப்ரண்ஸ் திரைப்படத்தில் “ருக்கு ருக்கு..” பாடலும் பத்ரி திரைப்படத்தின் “என்னோட லைலா..” பாடலும் பெரும் பிரபல்யமான பாடல்களாகும்.
தளபதிக்கு எனது வாழ்த்துக்கள்...
சூப்பர்..
எனக்கு பிடிச்ச பாடல் நிலாவே வா படத்தில் நிலவே நிலவே
வாழ்த்துக்கள்......
சிறந்த பதிவு..
அட நீங்களும் நம்மாளு..
தலைவருக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
இன்று என் பதிவில்
தலயா? தளபதியா? மோதிப்பாத்திரலாமா?
ஒரு சிறிய தவறு நண்பா
விஜய் சிறிய வயதில் நடனம் கற்றுக்கொள்ளவில்லை.. சினிமாத்துறைக்கு வந்தபின்பே நடனம் கற்றுக்கொண்டார்
தமிழ்மணம் வேலை செய்யவில்லை பாஸ்......... அப்புறமா வந்து ஓட்டு போடுறன்
//டீன் ஏஜ் கவர்மேண்டின் chief minister
ராகுல் காந்திக்கு டீன் ஏஜ்னா என்னன்னு தெரியல போல , வயசாயிடுச்சின்னு கழட்டி விட்டுட்டாப்புல .. ஆமா டீன் ஏஜ்னா ஒரு நாப்பது அம்பது வயசு வரைக்கும் சொல்லலாமா?
// நடிப்பால்,நடனத்தால்,நகைச்சுவையால் நம்மை கவர்ந்து இழுத்தவண்ணமுள்ள நம்ம தலைவர் விஜய் பற்றி நீங்கள் அறியாதது எதுவுமில்லை
யாரை இழுத்தார் ... சங்கவியவா? இப்ப சோனான்னு புது பீஷு மாட்டி இருக்காம் , அவர இழுக்க சொல்லுங்க , உடம்பாவது குறையும்
//விஜய் பாடிய பாடல்களில் என்னைக்கவர்ந்த பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றது.
contradiction ஆ இருக்கே , அவரு பாடுனா எப்படி கேக்குறவங்களை கவரும்
// 1974 ஜுன் மாதம் 22ம் திகதி சென்னையில் திரு.S.A.சந்திரசேகர், திருமதி ஷோபா சந்திரசேகர் ஆகியோர்க்கு மகனாக பிறந்தார் விஜய்.
தமிழ் நாட்டுக்கு ஏழரை அப்பதான் ஆரம்பம் ஆச்சு ....
// 1984ல் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த வெற்றி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் அறிமுகமாகினார். அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..அன்று தொடங்கிய வெற்றி இன்று வரை தொடர்கின்றது..
என்னங்க அவ்வளவு வருசமாவா அந்த படத்த எடுத்துக்கிட்டு இருக்காங்க .. அவதார விட பெரிய ப்ராஜக்ட்ஆ இருக்கும் போல...
// நாளைய திரையுலகிற்கான தீர்ப்பை எழுத வந்தார் கதாநாயகனாக விஜய்.
அவரு எந்த காலேஜ்ல படிச்சி ஜட்ஜ் ஆனாறு ...
//காலமெல்லாம் காத்திருப்பேன்,ஒன்ஸ்மோர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், நிலாவே வா என நடிப்பில் முத்திரை பதித்து வந்தார்.
ஓ இதுல எல்லாம் இவரு பண்ணுனதுக்கு பேருதான் நடிப்பா? இந்த படங்களை எல்லாம் ஆஸ்கார் கமிட்டிக்கு அனுப்பி வையுங்க , தப்பு பண்ணிடோம்னு அந்த வருசத்துல சிறந்த நடிகருக்கு கொடுத்த விருதை எல்லாம் புடுங்கி உங்க விஜய் கிட்ட கொடுத்து கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பாங்க ....
// 1999ல் வெளியாகிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது.
எப்படி மறக்க முடியும் சிம்ரன் கூட நடிச்ச முதல் படமாச்சே ...
//கில்லி, திருமலை,திருப்பாச்சி, போக்கிரி, சிவகாசி என எதிரிகளை தன்னை வருத்தும் ஆக்ரோசமான சண்டைக்காட்சிகளில் புரட்டி எடுத்தார்..
அவரை மட்டுமா வருத்தாறு பாக்குற எல்லாரையும் சேத்துல வருத்தாறு ....
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விஜயை எனக்கு முதல் ஏனோ புடிக்காது காரணம் இன்றி,
இப்பொது திமுகாவை ( திமிகா அனுதாபி)விட்டு வந்து கடந்த தேர்தலில் திமுகாவை சாடியதில் இருந்து
விஜய் அதிகம் புடிக்குது எனக்கு பாஸ்,
வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்
விஜயின் படங்களில் லவ் டுடே எனக்கு புடித்த படம்
( நினைத்தேன் வந்தாய் படமும் புடிக்கும் அதில் நம்ம தேவயானியுடன் ஜோடி போட்ட முதல் படம் ஆச்சே)
ஹிஹிஹி என்ன ஒரு விரிவான பதிவு..நான் இவ்வாறு தான் போடா இருந்தேன்..நேரமின்மையால் விட்டுவிட்டேன்...வாழ்த்துக்கள்!!
ஹிஹிஹி என்ன ஒரு விரிவான பதிவு..நான் இவ்வாறு தான் போடா இருந்தேன்..நேரமின்மையால் விட்டுவிட்டேன்...வாழ்த்துக்கள்!!