2009ன் பதற்றங்கள்,பரபரப்புக்கள்,சர்ச்சைகள் என்பவற்றை தொடர்ந்து அமைதியாக பிறந்தது 2010
ஜனவரி 01 தொடக்கம் டிசம்பர் 31 வரை எம்மை கடந்து சென்ற இவ்வாண்டு பதிந்து சென்றவற்றில் என் மனதில் பதிந்தவை-மனதை பாதித்தவை என்ற சில காலப் பதிவுகளை இப் பதிவில் இடுகின்றேன்..
JANUARY
01:- இலங்கையின் மலையக அரசியல் வாதி திரு.பெ.சந்திரசேகரன் மரணம்.
05:- சூரியக் குடும்பத்தில் 5 புதிய கோள்கள் கெப்லர் விண் தொலைகாட்டியினால் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றுக்கு கெப்லர் 4b,5b,6b,7b,8b என பெயரிட்டனர் விஞ்ஞானிகள்
13:- கெய்டி தீவில் போட் ஒவ் ஃபிறின்ஸில் 7.0 ரிக்டர் அளவில் பதியப்பட்ட நில நடுக்கம்..இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணித்ததுடன் பலர் நிர்க்கதியானார்கள்.15:- இவ்நுாற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம் “கங்கண சூரிய கிரகணம்” உண்டானது.
17:- இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் மேற்குவங்க முதலமைச்சர் திரு.ஜோதி பாசு மரணம்.
26:- இலங்கை ஜனாதிபதி தேர்தல்
மகிந்த ராஜபக்ஸ- 6,015,934 வாக்குகள் பெற்று வெற்றி
சரத் பொன்சேகா- 4,173,186 வாக்குகள்
FEBRUARY
01:- இசைப்புயல் A.R.ரகுமானுக்கு இரு கிராமி விருதுகள் வழங்கப்பட்டது.
09:- மூத்த பாரம்பரிய கலைஞர் திரு.செல்லையா மெட்ராஸ் மயில் (52 வயது) அவர்கள் காலமானார்.
20:- “பல்கலை கலைஞர்” திரு. ஸ்ரீதர் பிச்சையப்பா (47வயது) அவர்கள் மரணமடைந்தார்.
24:- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் தனிநபர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டமான 200 ஓட்டங்களை தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்றார்.
MARCH
02:- சுவாமி நித்தியானந்தாவின் லீலைகளை சன் தொலைக்காட்சி அம்பலமாக்கியது.
04:- தாய்வானில் 6.4 ரிக்டர், 6.8 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவு.
07:- ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன
சிறந்த திரைப்படம்- the Hurt Logger
சிறந்த இயக்குனர்- Katharin Bigalo
21:- ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு.
APRIL
08:- 14வது இலங்கை பாராளுமன்ற தேர்தல்
ஐ.ம.சு.கூ- 144 ஆசனங்கள்
ஐ.தே.மு- 60 ஆசனங்கள்
ஜ.தே.கூ- 07 ஆசனங்கள்
10:- ரஸ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லேக் காச்சின்ஸ்கி Lech Kaczyński இறப்பு. இவ்விபத்தில் அவரின் மனைவி உட்பட 80 பேர் கொல்லப்பட்டனர்.
14:- சீனாவின் சிங்காய் Qinghai மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
15:- ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம்..விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17:- பெங்களுரில் I.P.L போட்டிகளின் போது குண்டு வெடித்ததில் 08 பேர் காயமடைந்தனர்.
22:- சுவாமி நித்தியானந்தா இமாச்சல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
25:- I.P.L-3 ன் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
CSK 168 (20 over)
MI 146/9 (20 over)
MAY
டேவிட் கமருன் வெற்றி பெற்று மே 10ல் பதவியேற்றார்.
08:- யாழ் இந்து கல்லுாரி vs கொக்குவில் இந்து கல்லுாரி இடையிலான Battle of the Hindus போட்டியில் கொக்குவில் இந்து கல்லுாரி 08 விக்கட்டுகளால் வெற்றி.
09:- இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.
16:- ICC T20 World Cup இங்கிலாந்து 07 விக்கட்டுகளால் அவுஸ்திரேலியாவை வென்று சம்பியன்.
22:- செயற்கை செல் கண்டுபிடிப்பு.
JUNE
07:- பாக்கிஸ்தானில் Phet புயல் வீசியதில் பலத்த வெள்ளப் பெருக்கு.
11:- உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் தென்னாபிரிக்காவில் கோலாகல ஆரம்பம்
22:- ஃபர்வேஸ் மகருவ் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கட்ரிக் சாதனை.
23:- உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஆரம்பித்து 27 ம் திகதி முடிவடைந்தது.
அவுஸ்ரேலியாவின் முதல் பெண் பிரதமராக Julia Gillard பதவியேற்பு.
24:- நீண்ட நேரம் இடம்பெற்ற டெனிஸ் போட்டி.- அமெரிக்காவின் John Isner defeated க்கும் பிரான்ஸின் Nicholas Mahut க்கும் இடையில் (70-68 செட்) 11 மணித்தியாலம் 5 நிமிடங்கள் கடும் போட்டி.*ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா வெற்றி.
27:- யாழ் இந்து கல்லுாரி vs கொழும்பு இந்து கல்லுாரி இடையிலான North vs South போட்டியில் கொழும்பு இந்து கல்லுாரி 66 ஓட்டங்களால் வெற்றி.
JULY
04:- டோனி – சாக்ஸி சிங் ராவத் திருமணம்
22:- முத்தையா முரளீதரன் ரெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 800 விக்கட் கைப்பற்றி சாதனை. அத்துடன் இப் போட்டியுடன் ரெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு.25:- விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் இராணுவ குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட ஆரம்பித்தது.
30:- Voice of Asia நிறுவனம் மீதான தாக்குதல்.
வெற்றி Fm மற்றும் சகோதர வானொலிகளின் செய்தி பிரிவின் மீது காடையர்கள் தாக்கி தீ மூட்டிய கறுப்பு நிகழ்வு.
AUGUST
08:- பிடல் காஸ்ரோ மீண்டும் பாராளுமன்றில் உரையாற்றினார்.
19:- ஈராக்கில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா அறிவிப்பு.
*வெற்றி fm நிறுவனத்தின் பணிப்பாளராக திரு A.R.V.லோஷன் அவர்கள் பதவி உயர்வு பெற்றார்.
29:- இந்தோனேசியா சுமாத்திராவில் சினாபுங் எரிமலை வெடித்தது.
SEPTEMBER
08:- இலங்கை அரசியல் யாப்பில் 18வது அரசியலமைப்பு சீர்திருத்தம் 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டு இணைப்பு.
தமிழ் நடிகர் முரளி (46வயது) மாரடைப்பால் மரணம்.
12:- தமிழ்,தெலுங்கு,மலையாள பின்ணணி பாடகி சுவர்ணலதா நுரையீரல் பாதிப்பால் மரணம்.
22:- தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டு நிறைவு.
30:- இந்திய இசையமைப்பாளர் திரு சந்திரபோஸ் மரணம்.
OCTOBER
06:- சச்சின் டெண்டுல்கர் இவ்வாண்டின் சிறந்த வீரராக ICC இனால் தெரிவு.
10:- சிலியில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்.
13:- சிலியின் San Jose சுரங்கத்தில் 70 நாட்களாக சிக்கியிருந்த 33 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சாதனை.
NOVEMBER
01:- பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதுடைய டில்மா ருசெஃப் (Dilma Rousseff) தெரிவு.
05:- இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்ததில் 125 மக்கள் இறப்பு.
*அவுஸ்திரேலியாவில் வைத்து ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.
06:- அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா, இந்தோனேசியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
12:- ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் பிரமாண்டமாக ஆரம்பம்.-நவம்பர் 27ல் முடிவுற்றது.
13:- மியன்மாரின் எதிர்கட்சி தலைவி ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டார்.
16:- இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் காதலி கேற் மிடில்டன் (Kate Middleton) இருவரும் தம் திருமணத்தை அறிவித்தனர்.
19:- இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2 வது ஜனாதிபதி பதவி காலத்திற்கான பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
DECEMBER
07:- விக்கி லீக்ஸ் ஸ்தாபகர் Julian Assange லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார்.
14:- நீதிமன்ற விசாரணையின் பின் Julian Assange பிணையில் விடுதலையானார்.
19:- சச்சின் டெண்டுல்கர் ரெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தன் 50 சதத்தை பதிவு செய்தார். 50 சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
22:- நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோட்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன உலக மரபுரிமை பிரதேசமாக பிரகடனபடுத்தப்பட்டது.
30:- பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வின் “விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நுால் வெளியீடு.
இப்படியாக மகிழ்ச்சி, துக்கம் என்பவற்றை பகிர்ந்த 2010 எம்மை விட்டு சென்று விட்டது….
நம்பிக்கையோடு வரவேற்போம் 2011 ஐ.....

















