Battle Of The Hindus – 2012
“இந்துக்களின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக்கல்லுாரி, கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிகளுக்கிடையிலான வருடாந்த துடுப்பாட்ட போட்டி இவ்வருடம் கொக்குவில் இந்துக்கல்லுாரி நாகலிங்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணித்தலைவர் கிருசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் களமிறங்கினர்
இரு அணி வீரர்களும்

கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 275 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர். கொக்குவில் இந்துக்கல்லுாரி சார்பில் அணித்தலைவர் பங்குயன் 126 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவர் கடந்த வருட போட்டியில் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்குயனுடன் இணைந்து ஜனுதாஸ் 5 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களையும் ராகுலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
கீர்த்திகன் 05 ஓட்டங்கள்
சத்தியன் ...................................05 ஓட்டங்கள்
பங்கயன் ...................................98 ஓட்டங்கள்
திவாகர் .....................................09 ஓட்டங்கள்
ராகுலன் ...................................37 ஓட்டங்கள்
ஆதித்தன் .................................05 ஓட்டங்கள்
ஜனுதாஸ் ................................61 ஓட்டங்கள்
சிலோஜன் ...............................06 ஓட்டங்கள்
நிசாந்தன் ..................................02 ஓட்டங்கள்
பார்த்தீபன் ................................06 ஓட்டங்கள்
பவிதரன் ஆட்டமிழக்கால் 03 ஓட்டங்கள்
உதிரி ஓட்டங்கள் – 34
மொத்த ஓட்டங்கள் 275-10 (68.4 ஓவர்கள்)
பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லுாரி சார்பில்
வாமனன் 16 ஓவர்கள் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
ருக்ஸ்மன் 12 ஓவர்கள் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
நிலாஜனன் 05 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகள்
கிருசோபன் 06 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
ஜஸ்மினன் 8.4 ஓவர்கள் 18 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
தேநீர் இடைவேளையை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யாழ் இந்துக்கல்லுாரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவில் 28 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் மதுசன் 64 ஓட்டங்ளையும்
ஜஸ்மினன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
இவர்களைத் தவிர,
கல்கோகன்................................... 06 ஓட்டங்கள் (ஓய்வு)
சஜீகன் .............................................00 ஓட்டங்கள்
ருக்ஸ்மன் .....................................00 ஓட்டங்கள்
சிந்துஜன் ஆட்டமிழக்காமல் 09 ஓட்டங்கள்
பந்து வீச்சில் கொக்குவில் இந்துக்கல்லுாரி சார்பில் ராகுலன் 02 விக்கட்டுகளையும்
பங்குயன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.
போட்டி நாளை காலை 09 மணிக்கு ஆரம்பித்து தொடர்ந்து இடம்பெறும்.
good!!!