எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...

முதல் நாள் ஆட்டம் தொடர்பான நேற்றைய பதிவு
இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ். இந்துக்கல்லுாரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார்.
தொடர்ந்து நேற்றைய நாளின் ஆட்ட நேர முடிவில் 51 ஓட்டங்களை பெற்றிருந்த ஜஸ்மினன் இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 144 பந்து வீச்சுக்களில் 14 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் ...
Continue reading →

Battle Of The Hindus – 2012
“இந்துக்களின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக்கல்லுாரி, கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிகளுக்கிடையிலான வருடாந்த துடுப்பாட்ட போட்டி இவ்வருடம் கொக்குவில் இந்துக்கல்லுாரி நாகலிங்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணித்தலைவர் கிருசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் களமிறங்கினர்இரு அணி ...
Continue reading →

வணக்கம் நண்பர்களே,எனது 50வது பதிவினுாடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் பதிவுலக ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எனக்கு உறுதுணையாக இருக்கும் உங்களனைவருக்கும் என் நன்றிகள்.என்னை பதிவெழுத துாண்டியவை லோஷன் அண்ணாவின் பதிவுகள்.
எனக்கு களம் அமைத்து தந்தவர் அன்புக்குரிய மதிசுதா அண்ணா.
இவர்கள் இருவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகின்றேன்.
............................................................................................................................................................................................................................................................................................................
கடந்த ...
Continue reading →

வணக்கம் நண்பர்களே..
தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.
மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ...
Continue reading →

வணக்கம் நண்பர்களே..,
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.இந்த 2012 புதிய ஆண்டின் முதல் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இன்றைய 01.01.2012 ம் திகதி நிறைவடைய சில மணித்தியாலங்களே உள்ளன. இந் நேரத்தில் இவ்வாண்டின் முதல் நாளான இன்று முதன் முதலாக கிடைத்த என் சார்ந்த விடயங்களை இப்பதிவு கொண்டு வருகின்றது.
நான் பெற்ற விடயங்கள், கொடுத்த விடயங்கள் என பல விடயங்களை பதிவை தொடர்ந்து படிப்பதன் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
முதல் வாழ்த்து - தொலைபேசியில் சரியாக நள்ளிரவு ...
Continue reading →