எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Wednesday, June 1, 2011

யாழ்ப்பாணத்தில் ஆங்கில மொழி மூல கல்வி.

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இங்கிலாந்தின் ஆட்சி மொழியாக மாத்திரம் ஆரம்பத்தில் விளங்கிய ஆங்கிலம் பிற்காலத்தில் உலகளாவிய அளவில் வணிக மொழியாக புகுந்து அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று சர்வதேச மொழியாக பரிணமித்துள்ளது.

ஆங்கிலம் கற்காத கல்வி கல்வியல்ல, ஆங்கிலம் தெரியாதோர் அறிவுள்ளவரல்லர் என்ற நிலையை ஏற்படுத்தும் அளவிற்கு இன்று ஆங்கிலத்தின் தாக்கம் அனைத்து நாடுகளிலும் உள்ளது. கல்வி நிலையிலும் சரி, தொழில் நிலையிலும் சரி, அரசியல் நிலையிலும் சரி தாய்மொழியை வீழ்த்தும் அளவிற்கு ஆங்கிலம் காணப்படுகின்றது. இது ஒருவகையில் வரவேற்க வேண்டிய விடயமே. ஏனெனில் உலகின் மிக விரைவான தொடர்பாடல், அபிவிருத்தியுடன் நாமும் பங்கெடுப்பதற்கு அதனோடு சேர்ந்து நாம் செயற்பட வேண்டும். ஆகவே அதற்கான ஊடகமாக விளங்கும் ஆங்கிலம் இன்றைய சமுதாயத்திற்கு அவசியமானதொன்றாக விளங்குகின்றது.

இலங்கையை பொறுத்தமட்டில் ஆங்கிலேயரின் ஆட்சியைத் தொடர்ந்தும் ஆங்கிலக்கல்வியானது தொடர்ந்தபோதும் நீண்டகாலமாக அது வெறுமனே பாடப்பரப்புகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டே இருந்தது. இந்நிலை 21ம் நுாற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மாற்றத்திற்கு உள்ளானது. ஆங்கிலத்தை ஒரு மொழி மூலமாக கொண்டு கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை இலங்கை கல்வி அமைச்சு பாடசாலைகளில் ஆரம்பித்தது. இது 2002ல் இலங்கையின் கல்வி துறையின் முக்கிய மாவட்டமாக கருதப்படும் யாழ்ப்பாணத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் சென் பற்றிக்ஸ் கல்லுாரியில் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 2003ல் தேசிய பாடசாலைகளில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியில் ஆங்கில மொழி மூல கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகள் தரம் 06 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுசராசரியாக 300 மாணவர்களை கொண்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் தரம் 06 வகுப்பு பிரிவில் ஆங்கில மொழி மூல மாணவர்கள் 2003ல் 36 பேர் இருந்தனர். 

இது பற்றி யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் அதிபர் திரு.வீ.கணேசராஜா அவர்கள் கருத்து தெரிவித்த போது, 2002ம் ஆண்டில் கௌரவ திரு.கருணாசேன கொடித்துவக்கு அவர்கள் கல்வி அமைச்சராவும், திருமதி Dr. தாரா டீ மெல் அவர்கள் அமைச்சின் செயலாளராகவும் இருந்த போது இலங்கையில் ஆங்கில மொழி மூல கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இது அடுத்த ஆண்டிலிருந்தே எமது கல்லுாரியில் தரம் 06 மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இரண்டு பிரிவுகளில் தரம் 06 முதல் உயர்தரம் வரை கற்றல் செயற்பாடுகள் ஆங்கிலத்தை மொழி மூலமாக கொண்டு நடைபெறுவதாகவும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பதாகவும் தெரிவித்தார். இதுபற்றியதாக மாணவர்கள் சார்பில் கருத்து தெரிவித்த 2011 உயிரியல் பிரிவு மாணவன் அஜலக்ஸன் குறிப்பிடுகையில், ஆரம்பத்தில் தாம் ஏதேச்சையாக இந்த ஆங்கில மொழிமூலத்தை தெரிவு செய்ய நேர்ந்ததாகவும் பின்னர் அதனை முழு மனதுடன் ஏற்று கல்வியை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். தமக்கு திறமையான ஆசிரியர்கள் பலர் கற்பித்தலில் ஈடுபட்டனர் என்றும் சகல உதவிகளையும் அவர்கள் வழங்கினர் என்றும் குறிப்பிட்டார். 
அத்துடன் ஆசிரியர்கள் சார்பில் யாழ் இந்துக்கல்லுாரியின் ஆசிரியர் திரு.S.சிறீக்குமார் அவர்கள் கூறும் போது, தற்போதைய மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் ஆரம்பக்கல்வியை தமிழ் மொழி மூலத்தில் கற்றிருப்பதனால் ஆங்கில மொழி மூலத்தை தரம் 06ல் அணுகும் போது சில கஸ்டங்களை ஆரம்பத்தில் எதிர்கொள்கின்றனர். இருப்பினும் தரம் 08 ல் கல்வியை தொடரும் போது அக் கஸ்டங்கள் நீங்கி சிறந்த ஆங்கில அறிவினை அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர் என்று தெரிவித்தார். ஆங்கிலம் என்பது சர்வதேச தொடர்பாடல் மொழியாக இருப்பதனால் இவ் ஆங்கில மொழி மூல கற்றலானது சிறப்பான ஆங்கில அறிவை மாணவர்களுக்கு வழங்குவதால் அவர்களின் எதிர்காலம் மிக பிரகாசமாக அமையும் என மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் முதலாவது தொகுதி ஆங்கில மொழிமூல மாணவர்கள் கடந்த 2009ல் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி அனைத்து மாணவர்களும் சித்தியடைந்ததாக அதிபர் பெருமிதம் கொண்டார்.
இவர்களில் 12 மாணவர்கள் உயிரியல் பிரிவிலும் 24 மாணவர்கள் கணிதப்பிரிவிலும் உயர்தர கல்வியை கற்று வருவதாகவும் அவர்கள் தமது க.பொ.த உயர்தர பரீட்சையை 2011 ஆகஸ்டில் எழுத உள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில மொழி மூல மாணவர்களின் முடிவுகளின் தொகுப்பு கீழே.
பாடங்கள்
A தரம்
B தரம்
C தரம்
S&W தரங்கள்
சமயம்
    42
     -
    01
     -
தமிழ்
    28
    12
    03
     -
ஆங்கிலம்
    43
     -
     -
     -
விஞ்ஞானம்
    27
    05
    11
     -
கணிதம்
    42
    01
     -
     -
வரலாறு
    24
    07
    10
     -
ஏனையவை
    68
    23
    27
    11 (S)
·         தோற்றியோர்- 43 மாணவர்கள்        9A தரம்- 06 மாணவர்கள்

பாடசாலையின் ஆசிரிய வளங்கள் மற்றும் ஏனைய வளங்கள் பற்றி கருத்து தெரிவித்த அதிபர், அமைச்சு ரீதியிலும் பழைய மாணவர்கள் சார்பிலும் ஆங்கில மொழி மூல கல்விக்கான வளங்கள் சிறப்பாக கல்லுாரிக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். அண்மையில் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினர் ரூபா 50 இலட்சம் பெறுமதியான நுால்களை பாடசாலைக்கு வழங்கியிருப்பதாகவும் அவை மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அத்தோடு ஆசிரியர் நிலைவரம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், இந்துக்கல்லுாரியில் ஆங்கில மொழி பட்டதாரிகளே ஆங்கில மொழி மூல கற்பித்தலில் ஈடுபடுவதாகவும் அவர்களோடு இலங்கை கல்வியியல் கல்லுாரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இவர்கள் தமது ஆங்கில அறிவு,மற்றும் கற்பித்தல் அனுபவங்களை கொண்டு மாணவர்களுக்கு சிறப்பான கற்பித்தலை மேற்கொள்வதாகவும் இதனால் ஆங்கில மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறை என்பது யாழ் இந்துக்கல்லுாரியில் இல்லை என்றும் தெரிவித்தார். எனினும் பாடநுால்கள் சரியான முறையில் கிடைக்கத் தவறுகின்றன என்றும் அதிலும் பாடப்பரப்புகள் மாறும் போது நுால்களின் கையிருப்பு போதுமானதாக இருப்பதில்லை என்றும் தெரிவித்தார். இது பற்றி தாம் கல்வி அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசும் போது அச்சடிக்கப்பட்ட நுால்களின் இருப்பு முடிந்து விட்டதாகவும் புதியதாக அச்சடிக்கப்பட்டதும் அனுப்பிவைப்பதாக அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற கருத்தையே ஆசிரியர் திரு.S.சிறீக்குமார் அவர்களும் முன்வைத்தார். வட பகுதி மாணவர்களுக்கும் தென் பகுதி மாணவர்களுக்கும் இடையில் உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆங்கில மொழி மூல கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தன் பங்கை சிறப்பாக செய்வதாகவும் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்குவதாகவும் தெரிவித்தார். தான் உட்பட 20 ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூருக்கு கருத்தரங்குகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு வெளிநாட்டு விரிவுரையாளர்கள் தேவையான வழிகாட்டல்களை தந்ததாகவும் தருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
மாதிரி கற்பித்தல் செயற்பாடு

மறுமுனையில் யாழில் பிரபல மகளிர் கல்லுாரிகளில் ஒன்றான வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 2004ல் ஆங்கில மொழி மூல கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் இதனை குறுகிய எண்ணிக்கையிலான மாணவிகளே தொடர்ந்ததாகவும் இப்போது 3 பிரிவுகளில் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கல்லுாரியின் அதிபர் திருமதி.K.பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்தார். அவர் ஆங்கில மொழி மூல கற்கைநெறிக்கு தேவையான ஆசிரியர் வளம் மற்றும் ஏனைய வளங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ஆசிரிய வளம் என்பது போதிய அளவில் இல்லை என்றும் தமிழ் மொழி மூல கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்களே ஆங்கில மொழி மூல கற்பித்தலையும் மேற்கொள்வதாகவும் போதிய அனுபவம் இன்மையால் தமிழிலேயே தமது குறிப்புகளை வழங்குகின்றனர் என்று தெரிவித்தார். இருந்தும் கல்வியியல் கல்லுாரிகளில் கற்பித்தல் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர்கள் தமது கற்பித்தலை சிறப்பாக செய்வதாகவும் பாராட்டினார். அத்தோடு போதிய நுாலக வசதிகள் இருக்கின்றது என்றும் ஆயினும் தேசிய பாடசாலைகளுக்கென்று வருடாந்தம் நுாலக பயன்பாட்டுக்கென கல்வி அமைச்சு ஒதுக்கும் நிதி போதுமானதாக இருப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும் அசாதாரண சூழலிலும் சிறப்பாக கற்கும் மாணவியரின் திறமைகளை பாராட்டிய அவர் கடந்த 2010 ம் ஆண்டின் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 34 மாணவியர் ஆங்கில மொழிமூலத்தில் தோற்றி அனைவரும் சித்தியடைந்து இருப்பதோடு அவர்கள் தற்போது உயர்தரத்திலும் ஆங்கில மொழிமூலத்தில் கல்வி கற்பதாக குறிப்பிட்டார். அக்கல்லுாரியின் க.பொ.த. சாதாரண தர பரீட்சை-2010 ஆங்கில மொழி மூல பரீட்சை முடிவுகளின் தொகுப்பு கீழே..

பாடங்கள்
A தரம்
B தரம்
C தரம்
S&W தரங்கள்
சமயம்
    34
     -
     -
     -
தமிழ்
    32
    02
     -
     -
ஆங்கிலம்
    34
     -
     -
     -
விஞ்ஞானம்
    21
    03
    09
    01 (S)
கணிதம்
    34
     -
     -
     -
வரலாறு
    13
    08
    12
    01 (S)
ஏனையவை
    55
    24
    14
    09 (S&W)
  09 A
  08 A
  07 A
   03
   10
   06


இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி மூல கல்வி மீதான ஆர்வம் சிறப்பாக உள்ளது என்பது தெளிவாக புலப்படுகின்றது. இது பற்றி மாணவன் அஜலக்ஸன் குறிப்பிடுகையில், தாம் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இருக்கும் போது தம் கற்றல் செயற்பாடுகளிற்கு இப்போது தாம் பெற்றுள்ள இவ் ஆங்கில மொழி மூல அறிவும் அனுபவமும் உதவும் என்றும், தரம் 11ல் இருந்த போது இருந்த ஆங்கில மொழி அறிவு இப்போது தரம் 13ல் இருக்கையில் மேலும் அதிகரித்து உள்ளது என்றும் இதனால் எதிர்காலத்தில் உயர்கல்வி பற்றிய பயம் தனக்கும், தன் போன்ற மாணவர்களுக்கும் ஏற்படாது என்றும் தெரிவித்தார். அத்தோடு தம் ஆசிரியர்கள் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போது ஆங்கில அறிவு போதியளவில் இல்லாததால் அவர்கள் எதிர்கொண்ட அவஸ்தைகளை குறிப்பிட்டு அறிவுரைகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் ஓரிடத்தில் வைத்து நோக்குமிடத்து யாழ்ப்பாணத்தில் கடந்த கால யுத்தத்தினால் சரிந்த நிலையில் இருக்கும் கல்வி சமுதாயத்தை மீள கட்டி எழுப்புவதில் ஆங்கில மொழி மூல கல்வியானது முக்கிய இடம் வகிக்கும் என்பதுடன் சர்வதேச தரம் வாய்ந்த மாணவர்களை யாழ் மண்ணானது தொடர்ந்தும் வழங்கும் என்பதும் தெளிவாக புலப்படுகின்றது. அதற்கு யாழ் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பாடசாலைகள் தயாராக இருக்கின்றன என்பது வரவேற்கத்தக்கதே. இருப்பினும் தமிழ் மொழியின் மீதான அதீத பற்றும்,விருப்பமும் ஆங்கில மொழி மூல கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துகின்றது. இந்நிலை ஆரம்பத்தில் இருந்த போதும் இது தற்போது ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது. சமயம்,தமிழ்,வரலாறு,குடியுரிமை முதலிய பாடங்கள் தமிழிலேயே கற்பிக்கப்படுவதனால் தமிழும் பாதுகாக்கப்படுகின்றது. இதனால் இதர காரணிகளை காரணமாக வைத்து இவ் கல்வி முறையை கட்டுப்படுத்துவதை விட அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வது உசிதமானது என்று ஆசிரியர் திரு.S.சிறீக்குமார் அவர்கள் தெரிவித்தார். அத்தோடு இக்கல்வி முறையினால் மாணவர்கள் மத்தியில் தேடல் அதிகரித்து இருப்பதாகவும் பாடங்கள் சம்பந்தமான தரவுகளை இணையங்களில் தேடி எடுத்து படிப்பதாகவும் அவற்றை சேகரித்து வைப்பதனை பழக்கப்படுத்துவதாவும் இது எதிர்காலத்தின் சிறந்த சந்ததியினரை இப்பொழுதே காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆரம்பத்தில் யாழ் நகர பாடசாலைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இவ் ஆங்கில மொழி மூல கல்வியானது இப்பொழுது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி,தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என அனைத்து பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

இருப்பினும் வளங்கள் தொடர்பாக நிலவும் பற்றாக்குறைத் தன்மையானது பெரும் தாக்கத்தினை இக்கல்வியில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால் இலங்கையில் இருக்கும் கல்வியலாளர்களும், புலம்பெயர் நாடுகளில் இருக்கும் கல்வியலாளர்களும் இம் மாணவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதும் எதிர்கால மாணவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது. ஆகவே ஒரு சர்வதேச தரத்திலான கல்வி சமுதாயத்தை யாழ்ப்பாண மண்ணில் கட்டியெழுப்புவதில் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் என்பது எம் அனைவரினதும் கடப்பாடாகும்.

குறிப்பு :- யாழ் பல்கலைக் கழகத்தின் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் கற்று வரும் நான், செயற்றிட்டம் ஒன்றிற்காக எழுதிய ஆக்கத்தினை பதிவாக்குகின்றேன்.. நல்ல விடயம் உலகறிய வேண்டும் என்பதற்காக..



பதிவிலொரு பாடல்..
இப்பதிவில் அறிமுகமாகும் இப்பகுதி தொடர்ந்தும் வரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம்.. இது பலரால் மறக்கப்பட்ட பாடல்களை மீள ஞாபகமூட்டும் என எண்ணுகின்றேன்..

கவிதாலயாவின் தாயாரிப்பில் 1988ல் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த “உன்னால் முடியும் தம்பி” திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் S.P.பாலசுப்பிரமணியம் பாடிய வாலியின் வரிகளில் அமைந்த பாடல் இப்பதிவில்..
“வானம் உங்கள் கைகளில் உண்டு..ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு..
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்..”


நன்றி. மீண்டும் சந்திப்போம்.
என்றென்றும் அன்புடன்,

Continue reading →
Sunday, May 15, 2011

ஐயோ அண்ணா நானில்லீங்க....- பெண்களுக்கு மட்டும்

19 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
ஹலோ நண்பர்களா….வணக்கம்… மிக நீண்ட விடுமுறைக்கு பிறகு சந்திக்கின்றேன்... அப்படி இப்படி என்று நாட்களும் நகர்ந்து சென்று விட்டது... இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது..ஒரு பதிவு போடலாம் என்று பார்க்கின்றேன்.. ஆனால் காதலிக்கும் ஆண்களும், காதலி தேடும் ஆண்களும் பார்க்க கூடாத பதிவு... பார்த்தால் ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும்..(நான்தான்)..


காதலன் தேடும் இளம் பெண்களே..! காதலனே கிடைக்காத பெண்களே இது உங்களுக்கான ஷ்பெசல்...

நல்ல காதலனைத் தேடிக்கொண்டிருக்கிற, இன்னும் காதலில் மாட்டிக்கொள்ளாத பெண்களுக்கு இந்தக் காலத்துப் ஆண்களைப் பற்றிய சில எச்சரிக்கைக் குறிப்புகள்...!

அவன் என்னை காதலிக்கிறானா? என்னைத் தான் காதலிக்கிறானா என்ற பரபரப்பு வேண்டாமே..!
இந்தக்காலத்தில் ஆண்கள் என்ன எல்லாம் செய்வார்கள் பெண்களை ஏமாற்ற....



  • நல்லா தலைமுடிக்கு விதவிதமா ஜெல் போடுவார்கள். சிலநேரம் கலரைக் கூட மாத்துவார்கள் (நரையை மறைக்க - ஸ்ரைல் என்று ஏமாற வாய்ப்புண்டு).

  • பொய்யாக துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வருவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவார்கள், ஐ லவ் யூ சொல்லுவார்கள்.. ஏற்றுக்கொண்டீர்களெனில்.. அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்கள் சொல்லிட்டுத் திரிவீங்க..

  • நாலஞ்சு நாளா உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீரென ஒருநாள் நீங்கள் (அன்றைக்கு பார்த்து குளிச்சு,அழகா ட்ரஸ் பண்ணி, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வருவதைப் பார்த்தும் கண்டுக்காமல் இருப்பான். மூஞ்சைத் திருப்பிப்பான். நீங்க இதைப் பார்த்துட்டு 'ஐயோ இவனுக்கு என்ன ஆச்சோ'ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க. அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்.. ஜாக்கிரதை.

  • உங்களுக்கு மியூசிக்ல விருப்பமிருக்கு என்கின்றது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான் மனசுக்குள்ள 'ஜே ஜே' மாதவன் என்ற நினைப்பில்.. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..

  • ரொம்ப நாளைக்கு சைட் அடிச்சிட்டு பின்னாலேயே சுத்திட்டிருப்பான். அவனோட பிரண்டுக்கிட்ட உங்களுக்குக் கேக்குற மாதிரி 'மச்சான் எந்திரன்' நடிக்கக் கூப்பிட்டாக..நான் முடியாதுன்னுட்டேன். மணிரத்னம் என் வீட்டு வாசல்ல தவம் கிடக்கிறாக கால்ஷீட் கேட்டு'ன்னெல்லாம் பீலா விட்டுப்பின்னாலேயே தொடர்ந்து ஒரு வாரம், பத்துநாள்னு வந்துட்டிருந்தவன் திடீர்னு ஒருநாள் காணாமப் போயிடுவான். அப்பப் பார்த்து நீங்களும் தேட ஆரம்பிச்சு , நிஜமாவே எந்திரன் நடிக்கப்போயிட்டாகளோன்னு நோக ஆரம்பிச்சு, அவனையே நெனைக்க ஆரம்பிச்சு, அஞ்சாவது நாள்ல முன்னாடி வந்து நிப்பான் பாருங்க..அப்பப்பார்த்து அதிர்ச்சியாகி நீங்க 1Cm புன்னகையை விட்டீங்கன்னு வைங்க..அவன் வலைக்குள்ள நீங்க விழுந்திட்டீங்கன்னு அர்த்தம்..


  • பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது, ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங்கிளாஸ் போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க.. எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான். அப்படியும் பின்னால வந்தான்னா 'என்ன விஷயம் அங்கிள்'னு கேளுங்க.. பையன் அந்தப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்க மாட்டான்.

  • கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வர்றீங்க..நீங்க கண்டுக்காத பையன் திடீர்ன்னு ஒருநாளிலிருந்து 'தொட்டி ஜெயா'சிம்பு ரேஞ்சுக்கு இருட்டுக் கலர்களிலேயே ட்ரஸ் பண்ணிட்டு வர்றான்..அது அவனுக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலைன்னு நெனச்சு நீங்க அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க..அம்புட்டுதேன்.. உங்க வாழ்க்கையே ப்யூஸ் போன பல்பு கணக்கா ஆகிடுமுங்க..

  • நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது.. பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்.. ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்பக் கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க.. நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்..

  • அப்புறம் அதுல அவன் பர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே,ரொம்பப் பெருசா இருக்கும்.. பூராக் காசுடி ன்னு ஏமாந்துடாதீங்க.. நாலஞ்சு நியூஸ் பேப்பர், மேகஸின்சை சுருட்டி, மடக்கி வச்சி பந்தா காட்டிட்டிருப்பான் பையன்..

  • பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது.. வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க..ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட, ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி அலைவான்.. 'இதை எதுக்குடி இவன் சொமந்துட்டுத் திரியுறான்'ன்னு உங்க மனசுல கேள்வி எழும்ல.. அதுதான் அவன் உங்க மனசுல அவன் உட்கார்றதுக்கான நாற்காலி.. கேள்விக்கெல்லாம் இடம் வைக்காதீங்க..

  • ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு , டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க.. உடனே நம்பி ஏமாந்திடாதீங்க. அது பூராம் யாராவது ஏமாந்த ஆபிஸருங்கக்கிட்ட இருந்து சுட்டதா இருக்கும்.

  • எப்பப்பார்த்தாலும் சிரிச்சிட்டே இருக்கிறவனை ஒரு போதும் நம்பிடாதீங்க.. ஒருவேளை லூசாக இருக்கச் சான்ஸ் உண்டு.

  • திடீருன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலீப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்.. தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க.. அப்புறம் 'வாழ்க்கையில நாம என்னத்தைக் கண்டோம்? மீன் இன்னிக்குச் செத்தா நாளைக்குக் கருவாடு'ன்னு 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி தத்துவம் பேச ஆரம்பிப்பான். அப்புறம் நீங்க கூட சாமியாருக்கிட்ட ஏமாந்த பொண்ணாகிடுவீங்க.



இன்னும் நிறைய இருக்கு.. ஆனாலும் பொண்ணுங்களா... நீங்க ரொம்பவே புத்திசாலிங்க… இது போதும் உங்களுக்கு காதல்ல விழுந்திடாம இருக்கிறதுக்கு...
அதனால சமத்தா நல்லாப் படிச்சு அம்மா, அப்பா பார்க்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறமா அவங்களைக் காதலிங்க..


டேய் எவண்டா அவன் கொலை மிரட்டல் விடுறது….


நான் இருக்கும் ----------கட்சியில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இன்று முதல் இரும்புக் கோட்டையாகிய -------கட்சிக்கு தாவுகின்றேன்….

ஏதோ நம்மளால முடிஞ்சது.. இப்படியாவது பெண்கள் ஆதரவை பெருக்கி அடுத்த தேர்தல்ல களத்தில் குதிக்கலாம் பாருங்க… (கலைஞரே தோக்கிறாரு என்றால் நாம வெல்ல மாட்டமா???)

நன்றி...மீண்டும் சந்திப்போம்...
என்றும் அன்புடன்,

Continue reading →
Friday, March 18, 2011

இந்துக்களின் போர் (Battle of the Hindus) Score - Day 1

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்


யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியினர்

கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர்

Jaffna hindu college அணித்தலைவர். செந்துாரன்
Kokuvil hindu college அணித்தலைவர் உத்தமகுமரன்
நாணய சுழற்சியில் இரு அணித்தலைவர்களும்

யாழ் இந்துக்கல்லுாரி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தனர்.
துடுப்பெடுத்தாடும் கொக்குவில் இந்துவினர்..

Kokuvil hindu 1st inn
பங்குஜன் ................................101 (193 balls)
திவாகர் ..................................... 08 (09 balls)
சங்கீத் ........................................ 00 (06 balls)
ராகுலன் .................................... 19 (34 balls)
உத்தம குமரன் .........................93 (72 balls)
சிலோஜன் ..................................01 (04 balls)
ஆதித்தன் ...................................14 (21 balls)
ஜனுதாஸ் .................................. 10 (23 balls)
சாம்பவன் .................................. 14 (25 balls)
கார்த்திக் ..................................... 01 not out
 Total 293/9 Dic 64.3 over

Jaffna hindu bowling
மதுஸன் .................................. 21.1 over  75/3
நிருஜன் ...................................  11 over      38/2
வாமனன் ................................. 13 over      32/2
பங்குஜன் சதமடித்ததும்...

வர்ணனையில் விமல் அவர்கள் (வெற்றி Fm)

Jaffna hindu 1st inn
நிருஜன் ..................................... 04 (19 balls)
சஜீகன் ....................................... 00 (03 balls)
மதுசன் ...................................... 26 (41 balls)
டிலுக்சன் ................................... 10 (20 balls)
வாமனன் .................................. 04 (20 balls)
செந்துாரன் .............................. 26 not out
பார்த்தீபன் ................................. 06 (13 balls)
நிலுஜன் .................................... 00 not out

ஆட்ட நேர முடிவில் யாழ் இந்து 82 ஓட்டங்களுக்கு விக்கட் இழப்பு

Kokuvil hindu bowling
பங்குஜன் .......................   12/2
சாம்பவன் ......................   25/01
உத்தமகுமரன் ................ 21/1
பந்து வீச தயாராகும் சாம்பவன்(KHC)

ஆட்ட நேர முடிவில்..

நாளை காலை ஆட்டம் தொடரும்…



Continue reading →
Saturday, March 12, 2011

SCORE CARD- Battle of the North.-SJC Vs JCC

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

Battle of the North.-SJC Vs JCC
JCC won the toss selected to feild
1st inng
SJC batting:-
118 all out
Vivekanantharajah Harivathanan 20
Jesuthasan Adrian 18
Ali Akbar Sansajan 17
Sritharan Priyatharashan 15

JCC Bowling:-
Gnanaseelan Jerikthusan 5/21
Thangarajah Kokulan 4/68

JCC batting:-
131 all out
Edward Edin 50
Mahenthirasa Darshan 15

SJC Bowling
Sangarajah Duckshan 3/13
Ananthakumar Vithushan 3/22
Vivekanantharajah Harivathanan 3/43

2nd inng
SJC batting:-
145 all out
Rajeenthan 45
Daekshan 57

JCC Bowling:-
Jerikthusan 05 wkts
Vathusanan 04 wkts

JCC batting:-
135/8wic 
Jerikthusan (C)30
Kokulan 20
Vathusanan 15
Darvin 12*
Edin 11

SJC Bowling:-
Hrivathanan 04 wkts 
Dakshan 01 wk 
Harikaran 01 wk 
Priyatharsan 01 wk

JCC win by 2 Wickets & 105th Battle of the North trophy
MAN OF THE MATCH - JERIK THUSANTH (JCC) 
BEST FEILDER - RAJINTHAN (SJC) 
BEST BOWLER - JERIK THUSANTH (JCC) 
BEST BATS MAN - EDWARD EDIN (JCC) 
ALL ROUNDER - DAEKSHAN (SJC)
Continue reading →
Photobucket