எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Wednesday, January 5, 2011

திருடிய இசை

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
அன்று முதல் இன்று வரை இசை என்பது என்னவோ ஒன்றுதான்...அவை வெளிப்படும் விதம் தான் வேறுபடுகின்றது..தாளம்,மெட்டு,என்பவற்றின் ஊடாக இதன் வேறுபாட்டை அறிகின்றோம்.
ஆனால் இன்று, ஒரே மெட்டில் இன்னொரு பாடல் அதாவது Remix வடிவில் உருவாகி-உருவாக்கப்பட்டு வருகின்றது.
இது இன்று தான் என்றால் அது தவறு.

1996ல் தமிழில் வெளிவந்த, சுந்தர்.c இயக்கத்தில் “நவரச நாயகன்” கார்த்திக் கதாநாயகனாகவும், ரம்பா நாயகியாகவும் நடித்த “உள்ளத்தை அள்ளித் தா” திரைப்படம் உங்களுக்கு ஞாபகம் இருக்கும். பார்த்திருப்பீர்கள்..
இத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சிற்பி.
சிற்பியின் இசையில் மனோ சுஜாதா இணைந்து பாடிய கலக்கல்-காதல்-உறவு பாடல்தான் “சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதற்கு....” என்ற பாடல்.
அழகிய வரிகள், இதமான இசை, அழகான காட்சியமைப்பு இப்பாடலை ரசிக்கும் படி செய்தது.
இந்த வரிகளை கவனியுங்கள்...!
ஆண் :- வண்ணமதி வட்டமதி வானத்திலே இருக்கும்
பூமியெல்லாம் தேடும் மதி என்னவென்று சொல்லவா..

பெண் :- நீ எனக்கு தந்த மதி உன் மடியில்
கிடைக்கும் நிம்மதிதான் என்று
உந்தன் காதில் வந்து சொல்லவா..
பாடலை கேட்க பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள் 

பாடலை கேட்டும் பார்த்தும் ரசித்திருப்பீர்கள்.


ஆனால் இப் பாடலின் இசையின் மூல வடிவம் எடுக்கப்பட்டது 1987ல் வெளிவந்த Mera Laung Gawacha என்ற பஞ்சாப் மொழி திரைப்படத்தின் “பிச்சி பிச்சி...” என்ற பாடலில் இருந்து..இத் திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷாலிமர் குலாம் அலி (Shalimar Ghulam ali) என்பவர்.
அவரின் புகழ் பெற்ற உருது மொழி பாடல் இதோ..

கேட்டீர்கள் தானே...எப்படி இரு பாடல்களும்...?
இதில் இன்னொரு உதிரி தகவல், இந்த ஒரிஜினல் பாடல் அண்மையில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வடிவ பாடல்


மீண்டும் சந்திப்போம்..
என்றும் அன்பின்,

Continue reading →
Monday, January 3, 2011

மனதில் நின்ற-நிற்கும் வீரன்.

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இன்று தமிழர்கள் மறக்காத(கூடாத) ஒரு வீரனின் 271வது பிறந்த நாள்..வேறு யாருமல்ல..

நாம் நன்கறிந்த-என் மனங்கவர்ந்த வீரன் வீர பாண்டிய கட்டப்பொம்மன்..தான் அந்த வீரன்..!

இன்றைய பிறந்த நாள் நாயகன் பற்றிய பதிவாக இப் பதிவு உங்களை சந்திக்கின்றது.


பிறப்பு
03.01.1740 இல் ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு தம்பதியருக்கு,
மகனாக பிறப்பு.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.
ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் கட்டபொம்மனுக்கு இருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சி
ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. இந்த அரச மரபில் 47வது மன்னனாக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரசக்கம்மா
02.02.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரஜக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

ஆட்சிக் கட்டிலில்
09 ஆண்டுகள், 08 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கம்பெனியார் 1793 இல் கப்பம், வரி என்பன கேட்டனர். 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797-1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டு, போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார்.

ஜாக்சன்
நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.09.1798 இல் இராமநாதபுரத்தில் பேட்டி கண்டார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். வீரபாண்டியக் கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார்.

பானர்மன்
05.09.1799 இல் பானர்மன் என்ற ஆங்கில தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. போரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

கோட்டையை விட்டு வெளியேறியது
திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார்

09.09.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது.
01.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.
16.10.1799 இல் கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர்கள்

வீரபாண்டிய நாயக்கர் கி.பி. 1709 - 1736

பால்பாண்டியன் கி.பி. 1736 - 1760
ஜெகவீரபாண்டியன் கி.பி. 1760 - 1790
வீரபாண்டிய கட்டபொம்மன் கி.பி. 1790 - 1799
ஊமைத்துரை கி.பி. 1799 – 1801

பிறப்பின் போது இறப்பு பற்றி பேசக் கூடாது என்பார்கள்.அதன்படியே கட்டபொம்மனின் இறுதிக்காலம் பற்றி முழுமையாக இன்று ஏதும் சொல்லாமல் செல்கின்றேன்...விரைவில் இணைய உதவியுடனும் என் வாசிப்பின் உதவியுடனும் “கட்டபொம்மனின் கடைசி நாட்கள்” என்ற பதிவுடன் சந்திக்கின்றேன்...

என்றும் அன்பின்,

Continue reading →
Saturday, January 1, 2011

கடந்து சென்றது 2010.....

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
2009ன் பதற்றங்கள்,பரபரப்புக்கள்,சர்ச்சைகள் என்பவற்றை தொடர்ந்து அமைதியாக பிறந்தது 2010
ஜனவரி 01 தொடக்கம் டிசம்பர் 31 வரை எம்மை கடந்து சென்ற இவ்வாண்டு பதிந்து சென்றவற்றில் என் மனதில் பதிந்தவை-மனதை பாதித்தவை என்ற சில காலப் பதிவுகளை இப் பதிவில் இடுகின்றேன்..

JANUARY
01:- இலங்கையின் மலையக அரசியல் வாதி திரு.பெ.சந்திரசேகரன் மரணம்.
05:- சூரியக் குடும்பத்தில் 5 புதிய கோள்கள் கெப்லர் விண் தொலைகாட்டியினால் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றுக்கு கெப்லர் 4b,5b,6b,7b,8b என பெயரிட்டனர் விஞ்ஞானிகள்

13:- கெய்டி தீவில் போட் ஒவ் ஃபிறின்ஸில் 7.0 ரிக்டர் அளவில் பதியப்பட்ட நில நடுக்கம்..இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் மரணித்ததுடன் பலர் நிர்க்கதியானார்கள்.
15:- இவ்நுாற்றாண்டின் நீண்ட சூரிய கிரகணம் “கங்கண சூரிய கிரகணம்” உண்டானது.
17:- இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் மேற்குவங்க முதலமைச்சர் திரு.ஜோதி பாசு மரணம்.
26:- இலங்கை ஜனாதிபதி தேர்தல்
மகிந்த ராஜபக்ஸ- 6,015,934 வாக்குகள் பெற்று வெற்றி
சரத் பொன்சேகா- 4,173,186 வாக்குகள்

FEBRUARY
01:- இசைப்புயல் A.R.ரகுமானுக்கு இரு கிராமி விருதுகள் வழங்கப்பட்டது.
09:- மூத்த பாரம்பரிய  கலைஞர் திரு.செல்லையா மெட்ராஸ் மயில் (52 வயது) அவர்கள் காலமானார்.
20:- “பல்கலை கலைஞர்” திரு. ஸ்ரீதர் பிச்சையப்பா (47வயது) அவர்கள் மரணமடைந்தார்.
24:- சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் தனிநபர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய ஓட்டமான 200 ஓட்டங்களை தென்னாபிரிக்காவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் பெற்றார்.
27:- சிலியில் 8.8 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்.




MARCH
02:- சுவாமி நித்தியானந்தாவின் லீலைகளை சன் தொலைக்காட்சி அம்பலமாக்கியது.
04:- தாய்வானில் 6.4 ரிக்டர், 6.8 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவு.
07:- ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன
சிறந்த திரைப்படம்- the Hurt Logger
சிறந்த இயக்குனர்- Katharin Bigalo
13:- உலக கிண்ண ஹாக்கி போட்டியில் ஜேர்மனியை 2-1 goal கணக்கில் வென்று அவுஸ்திரேலியா சம்பியன்.

21:- ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு.

APRIL
08:- 14வது இலங்கை பாராளுமன்ற தேர்தல்
ஐ.ம.சு.கூ- 144 ஆசனங்கள்
ஐ.தே.மு- 60 ஆசனங்கள்
த.கட்சி- 14 ஆசனங்கள்
ஜ.தே.கூ- 07 ஆசனங்கள்
10:- ரஸ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லேக் காச்சின்ஸ்கி Lech Kaczyński இறப்பு. இவ்விபத்தில் அவரின் மனைவி உட்பட 80 பேர் கொல்லப்பட்டனர்.
14:- சீனாவின் சிங்காய் Qinghai மாகாணத்தில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
15:- ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம்..விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17:- பெங்களுரில் I.P.L போட்டிகளின் போது குண்டு வெடித்ததில் 08 பேர் காயமடைந்தனர்.
22:- சுவாமி நித்தியானந்தா இமாச்சல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
25:- I.P.L-3 ன் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
CSK 168 (20 over)
MI 146/9 (20 over)

MAY
06:- பிரித்தானிய பாராளுமன்ற தேர்தல்
டேவிட் கமருன் வெற்றி பெற்று மே 10ல் பதவியேற்றார்.



08:- யாழ் இந்து கல்லுாரி vs கொக்குவில் இந்து கல்லுாரி இடையிலான Battle of the Hindus போட்டியில் கொக்குவில் இந்து கல்லுாரி 08 விக்கட்டுகளால் வெற்றி.
09:- இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம்.
16:- ICC T20 World Cup இங்கிலாந்து 07 விக்கட்டுகளால் அவுஸ்திரேலியாவை வென்று சம்பியன்.
22:- செயற்கை செல் கண்டுபிடிப்பு.

JUNE
07:- பாக்கிஸ்தானில் Phet புயல் வீசியதில் பலத்த வெள்ளப் பெருக்கு.
11:- உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் தென்னாபிரிக்காவில் கோலாகல ஆரம்பம்
22:- ஃபர்வேஸ் மகருவ் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் கட்ரிக் சாதனை.
23:- உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் ஆரம்பித்து 27 ம் திகதி முடிவடைந்தது.
அவுஸ்ரேலியாவின் முதல் பெண் பிரதமராக Julia Gillard பதவியேற்பு.
24:- நீண்ட நேரம் இடம்பெற்ற டெனிஸ் போட்டி.- அமெரிக்காவின் John Isner defeated க்கும் பிரான்ஸின் Nicholas Mahut க்கும் இடையில் (70-68 செட்) 11 மணித்தியாலம் 5 நிமிடங்கள் கடும் போட்டி.
*ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்தியா வெற்றி.
27:- யாழ் இந்து கல்லுாரி vs கொழும்பு இந்து கல்லுாரி இடையிலான North vs South போட்டியில் கொழும்பு இந்து கல்லுாரி 66 ஓட்டங்களால் வெற்றி.

JULY
04:- டோனி – சாக்ஸி சிங் ராவத் திருமணம்
11:- உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று சம்பியன்.



22:- முத்தையா முரளீதரன் ரெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 800 விக்கட் கைப்பற்றி சாதனை. அத்துடன் இப் போட்டியுடன் ரெஸ்ட் கிரிக்கட்டிலிருந்து ஓய்வு.


25:- விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் இராணுவ குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளியிட ஆரம்பித்தது.
30:- Voice of Asia நிறுவனம் மீதான தாக்குதல்.
வெற்றி Fm மற்றும் சகோதர வானொலிகளின் செய்தி பிரிவின் மீது காடையர்கள் தாக்கி தீ மூட்டிய கறுப்பு நிகழ்வு.

AUGUST
08:- பிடல் காஸ்ரோ மீண்டும் பாராளுமன்றில் உரையாற்றினார்.
19:- ஈராக்கில் இருந்து அமெரிக்க படையினர் வெளியேறுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா அறிவிப்பு.
*வெற்றி fm நிறுவனத்தின் பணிப்பாளராக திரு A.R.V.லோஷன் அவர்கள் பதவி உயர்வு பெற்றார்.
28:- நிலவில் பிளவுகள் தோன்றி நிலவு சுருங்குவதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.






29:- இந்தோனேசியா சுமாத்திராவில் சினாபுங் எரிமலை வெடித்தது.

SEPTEMBER
08:- இலங்கை அரசியல் யாப்பில் 18வது அரசியலமைப்பு சீர்திருத்தம் 2/3 பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட்டு இணைப்பு.
தமிழ் நடிகர் முரளி (46வயது) மாரடைப்பால் மரணம்.

12:- தமிழ்,தெலுங்கு,மலையாள பின்ணணி பாடகி சுவர்ணலதா நுரையீரல் பாதிப்பால் மரணம்.
22:- தஞ்சை பெரிய கோவிலின் 1000 ஆண்டு நிறைவு.
26:- டைட்டானிக் திரைப்படத்தின் வயது முதிர்ந்த பாத்திரத்தின் நாயகி Gloria Stewart (87 வயது) மரணம்.



30:- இந்திய இசையமைப்பாளர் திரு சந்திரபோஸ் மரணம்.

OCTOBER
06:- சச்சின் டெண்டுல்கர் இவ்வாண்டின் சிறந்த வீரராக ICC இனால் தெரிவு.
10:- சிலியில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி ஆரம்பம்.

13:- சிலியின் San Jose சுரங்கத்தில் 70 நாட்களாக சிக்கியிருந்த 33 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சாதனை.

NOVEMBER
01:- பிரேசிலின் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதுடைய டில்மா ருசெஃப் (Dilma Rousseff) தெரிவு.
05:- இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்ததில் 125 மக்கள் இறப்பு.
*அவுஸ்திரேலியாவில் வைத்து ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.
06:- அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா, இந்தோனேசியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
12:- ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் பிரமாண்டமாக ஆரம்பம்.-நவம்பர் 27ல் முடிவுற்றது.
13:- மியன்மாரின் எதிர்கட்சி தலைவி ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்பட்டார்.

16:- இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் காதலி கேற் மிடில்டன் (Kate Middleton) இருவரும் தம் திருமணத்தை அறிவித்தனர்.
19:- இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ 2 வது ஜனாதிபதி பதவி காலத்திற்கான பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

DECEMBER
07:- விக்கி லீக்ஸ் ஸ்தாபகர் Julian Assange லண்டனில் வைத்து கைது செய்யப்பட்டார்.

14:- நீதிமன்ற விசாரணையின் பின் Julian Assange பிணையில் விடுதலையானார்.
19:- சச்சின் டெண்டுல்கர் ரெஸ்ட் கிரிக்கட் வரலாற்றில் தன் 50 சதத்தை பதிவு செய்தார். 50 சதம் பெற்ற முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
22:- நக்கிள்ஸ் மலைத்தொடர், ஹோட்டன்  சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன உலக மரபுரிமை பிரதேசமாக பிரகடனபடுத்தப்பட்டது.
30:- பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய வின் “விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற நுால் வெளியீடு.

இப்படியாக மகிழ்ச்சி, துக்கம் என்பவற்றை பகிர்ந்த 2010 எம்மை விட்டு சென்று விட்டது….
நம்பிக்கையோடு வரவேற்போம் 2011 ஐ.....


அனைத்து நண்பர்களுக்கும் என் ......

Continue reading →
Photobucket